8TH - NOTES OF LESSON - FEBRUARY - 4TH WEEK

  நாள்                 :         21 - 02 -2022     முதல்  26 - 02 - 2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  -   நான்காம் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :  வினைமுற்று

கருபொருள்                            :

Ø  வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

உட்பொருள்                           :

Ø  வினைமுற்றுப் பற்றி அறிதல்

Ø  வினைமுற்றுச் சொற்களின் வகைகளை அறிதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  வினைமுற்று சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  கரும்பலகையில் சில வினைமுற்றுச் சொற்களினை எழுதி அதன் செயல்பாடுகளை கூற வைத்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

 

படித்தல்                                  :

Ø  ஆசிரியர் படித்தல், பின் தொடர்ந்து மாணவர்களும் படித்தல்.

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

நினைவு வரைபடம்                 :

                                                            வினை முற்று


தொகுத்து வழங்குதல்             :

வினைமுற்று

Ø  ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்,

Ø  பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.

Ø  வினைமுற்று ஐந்து பால், மூன்று காலம், மூன்று இடம் ஆகிய அனைத்திலும் வரும்.

Ø  வினைமுற்று தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

Ø  ஒரு செயல் நடைபெ றுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படையாக தெரிவது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

Ø  செய்பவரை மட்டும் வெளிப்படை யாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

Ø  ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும்.

Ø  வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வி்னமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

 

வலுவூட்டல்                             :

Ø  சொல்லட்டைகளைப் பயன்படுத்தி மாணவர்களை அந்த சொற்களைக் கூற செய்து அதன் செயலை கூற வைத்து வலுவூட்டல்.

மதிப்பீடு                                 :

Ø  ஒன்றன் செயலை குறிக்கும் சொல் ___________

Ø  வினைமுற்று________________வகைப்படும்.

Ø  சித்திரையான் – இது எவ்வகை வினைமுற்று.

Ø  வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

Ø  ஏவல் வினைமுற்று என்பது என்ன?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும்

 பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   எளிய வகை செயல்களின் சொற்களை எழுதுதல்.

Ø    அன்றாடம் மாணவர் செய்யக் கூடிய எளிய வகை செயல்பாடுகளை வகைப்படுத்துதல்

தொடர் பணி                          :

Ø  “ வாழ்க “ என்னும் சொல்லை ஐந்து வகை பால்களிலும், மூன்று இடங்களிலும் வருமாறு தொடர்களை எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post