7TH - NOTES OF LESSON - FEBRUARY - 4TH WEEK

 நாள்                 :           21-02-2022 முதல்  26-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - நான்காம் வாரம்                                     

வகுப்பு              :             ஏழாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. புதுமை விளக்கு

கருபொருள்                            :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

Ø  அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்

உட்பொருள்                           :

Ø  இறைவழிப்பாடில் சடங்குகளை விட உள்ள தூய்மை முக்கியம் அறிதல்.

Ø  ஆழ்வார்கள் பற்றி அறிதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்

கற்றல் விளைவுகள்                 :

Ø  பாடலின் பொருள் அறிய அகராதியைப் பயன்படுத்தும் திறன் பெறுதல்.

Ø  அறநெறிச்சாரப் பாடலில் உள்ள உருவகத்தையும் அறக்கருத்துகளை எடுத்துரைக்கும் பாங்கினையும் படித்தறிதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  தற்காலத்தில் உள்ள சமயங்கள் மற்றும் சமய வழிபாடு குறித்து கேட்டறிந்து ஆர்வ மூட்டல்

படித்தல்                                  :

Ø  நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø  சீர் பிரித்து படித்தல்

Ø  மனப்பாடப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்

நினைவு வரைபடம்                 :

                                                            புதுமை விளக்கு



 

தொகுத்து வழங்குதல்             :

 

Ø  பொய்கை ஆழ்வார் – காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்

Ø  நாலாயிர திவ்வியப் பிரபந்ததில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியது

Ø  பூமி – அகல்விளக்கு

Ø  நெய் – ஒலிக்கின்ற கடல்

Ø  ஒளி – கதிரவன்

Ø  பூதத்தாழ்வார்

Ø  சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தார்

Ø  நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதி இவர் பாடியது.

Ø  அந்தாதி : அந்தம் – முடிவு , ஆதி – தொடக்கம்

Ø  திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

Ø  இதனைத் தொகுத்தவர் - நாதமுனி.

வலுவூட்டல்                             :

Ø  பாடல் பொருளை  மீண்டும் விளக்கி அதனை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிட்டு கூறி வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  அந்தாதி என்பது யாது?

Ø  நாலாயிர திவ்வியப் பிரபந்தம் யாரால் தொகுக்கப்பட்டது?

Ø  முதலாழ்வார்கள் யாவர்?

Ø  பொய்கை ஆழ்வார் நெய்யாக எதனை ஒப்பிடுகிறார்?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

தொடர் பணி                          :

Ø  முதலாழ்வார்கள் பெயர்களையும் அவர்கள் எழுதிய பாடல் எந்த தொகுப்பில் உள்ளது என்பதனை அறிந்து எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post