நாள் : 14-02-2022 முதல் 18-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அணி இலக்கணம்
கருபொருள் :
Ø அணியால் சுவை பெறும்
பாடல்களை படித்துச் சுவைத்தல்.
Ø அணி வகைகளை அறிதல்
உட்பொருள் :
Ø உவமை
அணி
Ø இல்பொருள்
உவமை அணி
Ø எடுத்துக்காட்டு
உவமை அணி
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காட்சிகள்
கற்றல் விளைவுகள் :
Ø அணியைப்
பற்றி அறிதல்
Ø பாட
நூலில் கொடுக்கப்பட்ட அணிவகைகளின் பொருள் அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø பெண்கள்
தம்மை அழகுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்வது ?
Ø குழுவாக
உள்ளதற்கு பெயர் என்ன?
என்பன
போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø நிறுத்தற் குறி அறிந்து
படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்
நினைவு வரைபடம் :
அணி
இலக்கணம்
தொகுத்து வழங்குதல் :
Ø செய்யுளினை அழகுப்படுத்துவது
அணி
Ø உவமை அணி : ஒரு பாடலில்
உவமையும்,
உவமேயமும்
வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
Ø எடுத்துக்காட்டு உவமை
அணி : உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு
தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி
எனப்படும்
Ø இல்பொருள் உவமை அணி
: உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள்
உவமை அணி என்பர்.
வலுவூட்டல் :
Ø செய்யுள்களைக் கொண்டு
அணி நயங்களை மீண்டும் கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø உலகில்
இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை ______________என்பர்
Ø உவமை
ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது __________எனப்படும்
Ø ஒரு பாடலில்
உவமையும்,
உவமேயமும்
வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது ________எனப்படும்
Ø அணி என்பதற்கு __________
என்பது பொருள்.
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø அணியின் வகைகளை அறிதல்
தொடர் பணி :
Ø பின்வரும்
தொடர்களில் உள்ள உவமை,
உவமேயம், உவம உருபு
ஆகியவற்றைக் கண்டறிந்து எழுதுக.
மலரன்ன
பாதம்
தேன்
போன்ற தமிழ்
புலி
போலப் பாய்ந்தான் சோழன்
மயிலொப்ப
ஆடினாள் மாதவி
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை