நாள் : 14-02-2022 முதல் 18-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. வேலு நாச்சியார்
2. நால்வகைச் சொற்கள்
கருபொருள் :
Ø விடுதலைப் போராட்டத்தில்
பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்.
Ø சொற்களின் வகை அறிந்து
பயன்படுத்துதல்
உட்பொருள் :
Ø வீர
மங்கை வேலுநாச்சியாரின் வீரத்தினை அறிதல்.
Ø விடுதலைப்
போரில் பங்கு கொண்டு உயிர் நீத்த தியாகிகளின் உன்னதத்தைப் போற்றுதல்.
Ø சொற்களின்
தன்மை அறிதல்
Ø சொற்களின்
வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வேலுநாச்சியார் வலையொளி காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø விடுதலை
போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிதல்
Ø அவர்களின்
தியாக உணர்வுகளைப் போற்றுதல்
Ø சொற்களின்
தன்மைக் கொண்டு அவற்றின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
ஆர்வமூட்டல் :
Ø சுதந்திர
போராட்ட கதைகளைக் கூறி ஆர்வ மூட்டல்
Ø சில
சொற்களை கரும்பலகையில் எழுதி அதன் வகைகளை கூறி ஆர்வ மூட்டல்.
படித்தல் :
Ø நிறுத்தற் குறி அறிந்து
படித்தல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்.
நினைவு வரைபடம் :
வேலு
நாச்சியார்
நால்வகைச்
சொற்கள்
தொகுத்து வழங்குதல் :
வேலுநாச்சியார்
Ø விடுதலைப்போரில்
ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களுள் ஒருவர்
வேலுநாச்சியார்ப் பற்றி அறிதல்
Ø பெயர்
: வேலுநாச்சியார்
Ø தந்தை
பெயர் : இராமநாத புர மன்னர் – செல்லமுத்து
Ø கணவர்
: முத்து வடுக நாதர் ( சிவகங்கை மன்னர் )
Ø வேலு
நாச்சியார் படை தளபதிகள் : பெரிய மருது, சின்ன மருது
Ø வேலுநாச்சியாருக்கு
தமது படைகளை அனுப்பியவர் : ஐதர் அலி
Ø வேலுநாச்சியாரின்
அமைச்சர் : தாண்டவராயர்
Ø வேலுநாச்சியார்
பெண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர் : குயிலி
Ø நடுகல்
: உடையாள்
Ø வேலுநாச்சியாரின்
காலம் 1730-1796
Ø • வேலுநாச்சியார்
சிவகங்கையை
மீட்ட ஆண்டு 1780.
Ø •
ஜான்சி ரா ணிக்கு முன்பே
ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு
நாச்சியார்
நால்வகைச் சொற்கள்
Ø ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள்
தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும்.
Ø இலக்கண
அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல்,
உரிச்சொல் என நான்கு வகைப்படும்.
Ø ஒன்றன்
பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்
Ø வினை
என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல்
எனப்படும்.
Ø பெயர்ச்சொல்லையும்
வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது
Ø பெயர்ச்சொல்,
வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த
வருவது உரிச்சொல் ஆகும்
வலுவூட்டல் :
Ø காந்தியின் எளிமை மற்றும்
சமூக நீதி, அவரின் தமிழ்ப்பற்று பற்றி மீண்டும் கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø வேலு நாச்சியார் சிவகங்கையை
மீட்ட ஆண்டு____________
Ø வேலு நாச்சியாருக்கு
தமது படைகளை அனுப்பி உதவியவர் _____________
Ø வேலுநாச்சியார் எந்த
நாளில் கோட்டையின் கதவுகள் திறக்கடும் எனக் கூறினார்?
Ø வினை
என்னும் சொல்லுக்குச் __________என்பது
பொருள்
Ø பெயர்ச்சொல்லையும்,வினைச்சொல்லையும்
சார்ந்து வரும் சொல் _________
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
தொடர் பணி :
Ø மாணவர்கள் நூலகத்தை பயன்படுத்தி
விடுதலைப்போரில் ஈடுபட்ட தமிழகப் பெண்களை அறிந்து அவர்களின் பெயர்களை எழுதி வருக.
Ø செய்தித்தாளில்
செய்தி ஒன்றைப் படித்து, அதில்
இடம்பெற்றுள்ள நால்வகைச் சொற்களை எழுதுக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை