6TH - NOTES OF LESSON - FEBRUARY - WEEK 2

 நாள்                 :           07-02-2022 முதல்  12-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :             ஆறாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. தமிழ் நாட்டில் காந்தி

கருபொருள்                            :

Ø  வாழ்வின் எளிமையின் சிறப்பை உணர்தல்

Ø  சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்து கொள்ளுதல்

உட்பொருள்                           :

Ø  காந்தியடிகள் சென்னைக்கு வந்த நிகழ்வு.

Ø  பாரதியார் பற்றி காந்தியின் மதிப்பீடு

Ø  காந்தியின் எளிமைத் திருக்கோலம்

Ø  ஆடம்பரத்தை வெறுத்தல்

Ø  காந்தியின் தமிழ்ப் பற்று

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காந்தி படம்

கற்றல் விளைவுகள்                 :

Ø  வாழ்வின் எளிமையின் சிறப்பை உணர்தல்

Ø  சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கு

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

ஆர்வமூட்டல்                          :

Ø  காந்தியடிகளின் இளமைக்கால நிகழ்வுகளைக் கூறி ஆர்வமூட்டல்.

படித்தல்                                  :

Ø  நிறுத்தற் குறி அறிந்து படித்தல்

Ø  புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்

Ø  புதிய சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்

நினைவு வரைபடம்                 :

                                                            தமிழ் நாட்டில் காந்தி



தொகுத்து வழங்குதல்             :

 

Ø  1919 – காந்தி தமிழ்நாட்டில் சென்னைக்கு வந்தார். ரெளலட் சட்டம் எதிர்த்து கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜி வீட்டில் நடந்தது.

Ø  பாரதியாரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என காந்தியடிகள் இராஜாஜியிடம் கூறினார்.

Ø  1921 ஆம் ஆண்டு காந்தி மதுரைக்கு வந்த போது இந்தியர்களில் பெரும்பாலான மக்கள் ஆடையில்லாமல் இருப்பதைக் கண்டு எளிமைத் திருக்கோலம் பூண்டார்.

Ø  கானாடு காத்தான் என்ற ஊரில் தொண்டரின் வீட்டில் வெளிநாட்டுப் பொருள்களைக் கொண்டு ஆடம்பரமாக இருந்ததைக் கண்டு காந்தி இந்திய பொருட்களைப் பயன்படுத்தக் கூறினார். ஆடம்பர வாழ்வினை வெறுத்தார்.

Ø  அனைவரும் சமம் என்பதற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அனைவரும் நுழைவதற்கு ஏற்பாடு செய்தார்.

Ø  காந்தியடிகள் ஜி.யு. போப் எழுதிய தமிழ்க்கையேடு நூலும், திருக்குறளும் மிகவும் கவர்ந்த நூல்.

Ø  உ.வே.சாமிநாதன் அவர்களிடம்  தமிழ் பயில வேண்டும் என காந்தியடிகள் ஆவல் கொண்டார்

வலுவூட்டல்                             :

Ø  காந்தியின் எளிமை மற்றும் சமூக நீதி, அவரின் தமிழ்ப்பற்று பற்றி மீண்டும் கூறி வலுவூட்டல்

Ø  காந்தியின் வலையொளிப் பதிவுகள் மூலம் வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  எந்தப் பெரியவரின் அடி நிழலில் தமிழ் கற்க வேண்டும் என காந்தியடிகள் ஆவல் கொண்டிருந்தார்?

Ø  உங்கள் வீட்டில் வெளிநாட்டுப் பொருட்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

Ø  உங்கள் பிறந்த நாளினை நீங்கள் எவ்வாறு கொண்டாடுவீர்கள் ? ஏன்?

Ø  காந்தியடிகள் எளிமைத் திருக்கோலம் பூண காரணமாக இருந்த நிகழ்வு எது?

Ø  காந்தியடிகளை கவர்ந்த தமிழ் நூல்கள் எவை?

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

தொடர் பணி                          :

Ø  காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post