இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
இயல் வாரியான அலகுத் தேர்வுகள்
வகுப்பு
: 10 இயல்
: 05
பாடம்
: தமிழ் மொத்த
மதிப்பெண் : 40
I.
பலவுள் தெரிக:- 3× 1= 3
1.
அருந்துணை என்பதைப்
பிரித்தால்_______________
அ)
அருமை
+ துணை ஆ)
அரு + துணை இ)
அருமை + இணை ஈ)
அரு + இணை
2.
”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?”
என்று வழிப்போக்கர் கேட்டது______________வினா.
“ அதோ,அங்கே
நிற்கும்” என்று
மற்றொருவர் கூறியது ___________ விடை.
அ)
ஐய வினா,வினா
எதிர் வினாதல்
ஆ) அறிவினா,மறைவிடை
இ)
அறியா வினா,சுட்டு
விடை ஈ)
கொளல்வினா,இனமொழிவிடை
3.“அருளைப்
பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை
அகற்றி மதிக்கும் தெருளை”
-என்று இவ்வடிகளில்
குறிப்பிடப்படுவது எது?
அ)
தமிழ் ஆ)
அறிவியல் இ)
கல்வி ஈ)
இலக்கியம்
2.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×
2= 10
1..செய்குதம்பிப்
பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-
2.
இந்த அறை இருட்டாக இருக்கிறது.
மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?இதோ...இருக்கிறதே!
சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே!
மின்சாரம்
இருக்கிறதா?இல்லையா?
மேற்கண்ட
உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
3.
“ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே
தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக்
கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
4.
தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க:-
அ.
மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்
ஆ.
கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்
5.
கலைச்சொல் அறிக:- அ. EMBLEM ஆ.
INTELLECTUAL
3.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×
3= 9
1.
உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்
படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.
அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில்
எடுத்துரைப்பீர்கள்?
2.
. முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை
புகுத்தி விடும்.-இக்குறட்பாவில்
அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
3.
வினா வகையையும், விடை வகையையும் சுட்டுக:-
1.
“ காமராசர் நகர் எங்கே இருக்கிறது ? “ “ இந்த வழியாகச் செல்லுங்கள் “ – என்று விடையளிப்பது.
2.
“ எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “ எனக்கு யார் எழுதித் தருவார்கள்
?” என்று விடையளிப்பது
4.
மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:- 1×
3= 3
1.
“ அருளைப் பெருக்கி “- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
5. அனைத்து
வினாக்களுக்கும் விடையளி:- 3×
5= 15
1.
பள்ளி ஆண்டு விழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை
நூலுக்கான மதிப்புரை எழுதுக
2.
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக:-
3. காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக:-