ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கொராணா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களாக பள்ளிகள் முழுமையாக செயல்படவில்லை. தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக தொற்று பரவல் குறைவாக இருந்தது. ஆனால் இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொராணாவுடன் ஒமிக்ரான் என்ற புதிய வகை உருமாறிய கொராணா தற்சமயம் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டுள்ளது. இதனால் பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றலில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது என்பதற்காக கல்வித் தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜனவரி மாதம் முழுமைக்கும் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடங்கள் குறித்த அட்டவணை உங்களுக்கு இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை மாணவர்களுக்கு வழங்கி கல்வித் தொலைக்காட்சியை பார்வையிட வைக்கவும். மாணவர்களின் கற்றலில் எந்த பாதிப்பும் இருக்காமல் அதனை தொடர்ந்து நீங்கள் பின் தொடருமாறும் ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வித் தொலைக்காட்சி சார்ந்த ஜனவரி மாத பதிவேடு இந்த வலைதளத்தில் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும். ஜனவரி மாதத்திற்குரிய பாடங்களும் அவற்றின் பயிற்சி தாள்களும் உங்களுக்கு இந்த வலைதளம் மூலம் பதிவேற்றம் செய்து தரப்படும். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்.
நன்றி, வணக்கம்.
ஜனவரி மாத கல்வித் தொலைக்காட்சி
பாடங்கள் ஒளிபரப்பாகும் உத்தேச
பாட கால அட்டவணை