ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஜனவரி 10 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் இல்லம் தேடி கல்வி மூலமாக தன்னார்வலர்கள் மூலமாக பாடங்களைப் படிக்க அரசு வழிமுறைகளை செய்துள்ளது. ஆசிரியர்களாக நாம் இணைய வகுப்பு எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பாடங்களை நீங்கள் இணையம் மூலமாக எடுக்கலாம். அல்லது பாடங்களை புலனக் குழுவில் பகிர்ந்து அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
2 முதல் 8 வகுப்பு வரை புத்தாக்கப் பயிற்சி நிறைவுற்று. ஜனவரி மாதம் மூலம் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்குள் இந்த நேரடி வகுப்புக்கு அரசு தடை விதித்துள்ளதால் நாம் இணையம் வழியே அந்த பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் .அந்த வகையில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தமிழ் மொழி வாழ்த்து என்ற பாடப்பகுதிக்குத் தேவையான வளங்கள் இங்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணாவர்கள் அவற்றை படித்து பயன்படுத்திக் கொள்ளவும்.
எட்டாம் வகுப்பு
தமிழ்
இயல் - 1
தமிழ் மொழி வாழ்த்து
காணொளி
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடு:-
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்______________
அ. வைப்பு ஆ. கடல் இ. பரவை ஈ. ஆழி
2. ‘ என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________________
அ. என் + றென்றும் ஆ. என்று
+ என்றும்
இ. என்றும் + என்றும் ஈ. என் + என்றும்
3. ‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
---------.
அ. வான + மளந்தது ஆ. வான்
+ அளந்தது
இ. வானம் + அளந்தது ஈ. வான்
+ மளந்தது
4. அறிந்தது + அனைத்தும் – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
சொல்_______________
அ. அறிந்ததுஅனைத்தும் ஆ. அறிந்தனைத்தும்
இ. அறிந்ததனைத்தும் ஈ. அறிந்துனைத்தும்
5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
.
அ. வானம்அறிந்து ஆ. வான்
அறிந்த இ. வானமறிந்த
ஈ. வான் மறிந்த
ஆ. தமிழ்மொழி வாழ்த்து – இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச்
சொற்களை எடுத்தெழுதுக:-
வாழ்க-வானமளந்த வாழிய-வாழ்க எங்கள்- என்றென்றும்
வண்மொழி- வளர்மொழி
குறு வினா
1. தமிழ் எங்கு புகழ் கொண்டு வாழ்கிறது?
தமிழ் நிலப் பகுதி முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது.
2 தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
தமிழ் வானம் உள்ளிட்ட அனைத்தையும் அறிந்து வளர்கிறது.
சிறு வினா
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக:-
எல்லாக் காலத்திலும் நிலையாக வாழும் தமிழே வாழ்க!
அனைத்தையும் அறிந்து சொல்லும் உலகப் புகழ் கொண்ட தமிழே வாழ்க!
உலகத்தின் அறியாமை இருளை அகற்ற வந்த தமிழே வாழ்க!
பொருந்தாத பழமைகளை அகற்றி புதுமைகளை ஏற்று தமிழே வாழ்க!
வானம் உள்ளிட்ட அனைத்து பொருள்களின் தன்மையை அறிந்து வளரும் தமிழே வாழ்க!
தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி.
உலகில் தோன்றிய முதல் மனிதன் பேசிய மொழி.
மற்ற எவற்றுடனும் ஒப்பிட முடியாத இலக்கண இலக்கியங்களைக் கொண்ட மொழி.
பழமை முதல் புதுமை வரை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கக் கூடிய சிறந்த மொழி.
எனவே பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.
இணைய பணித்தாள் மற்றும் இணைய வழித் தேர்வினை எழுத
இங்கே சொடுக்கவும்