ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஜனவரி 10 வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிப்படையக் கூடாது என்பதற்காக கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் இல்லம் தேடி கல்வி மூலமாக தன்னார்வலர்கள் மூலமாக பாடங்களைப் படிக்க அரசு வழிமுறைகளை செய்துள்ளது. ஆசிரியர்களாக நாம் இணைய வகுப்பு எடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. பாடங்களை நீங்கள் இணையம் மூலமாக எடுக்கலாம். அல்லது பாடங்களை புலனக் குழுவில் பகிர்ந்து அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
2 முதல் 8 வகுப்பு வரை புத்தாக்கப் பயிற்சி நிறைவுற்று. ஜனவரி மாதம் மூலம் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்குள் இந்த நேரடி வகுப்புக்கு அரசு தடை விதித்துள்ளதால் நாம் இணையம் வழியே அந்த பாடங்களை மாணவர்களுக்கு நடத்த வேண்டும் .அந்த வகையில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தமிழ் மொழி வாழ்த்து என்ற பாடப்பகுதிக்குத் தேவையான வளங்கள் இங்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணாவர்கள் அவற்றை படித்து பயன்படுத்திக் கொள்ளவும்.
எட்டாம் வகுப்பு
தமிழ்
liveworksheets.com
liveworksheets.com
இப்பாடத்திற்கான மேலும் சில வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் வினாக்களுக்கு உரிய விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றை ஒரு முறை நன்குப் படித்து விட்டு, பின் வரும் இணைய வழித் தேர்வினை எழுதக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் விடையளிக்க ஒவ்வொரு வினாவிற்கும் 20 நொடிகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.1. வைப்பு என்பது _________________________ ஐ குறிக்கும்.
அ. புகழ் ஆ. அறியாமை இ. நிலப்பகுதி ஈ. தமிழ்
2. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு:- பாரதியாரின் பன்முக ஆற்றல்
அ. எழுத்தாளர் ஆ. சிந்தனையாளர் இ. கவிஞர் ஈ. நடிகர்
3. சிந்துக்கு தந்தை என போற்றப்படுபவர் யார்?
அ. நாமக்கல் கவிஞர் ஆ. பாரதியார் இ. பாரதிதாசன் ஈ. சுரதா
4. பாரதியார் எழுதிய உரைநடை நூல்களில் ஒன்று
அ. பாப்பாப் பாட்டு ஆ. குயில் பாட்டு இ. பாஞ்சாலி சபதம் ஈ. தராசு
5. என்றென்றும் என்ற சொல்லை பிரித்து எழுதுக:-
அ. என்று + என்றும் ஆ. என் + என்றும் இ. என்றும் + என்றும் ஈ. என் + றென்றும்
6. பாரதியார் பணியாற்றிய இதழ்
அ. தினகரன் ஆ. தினமணி இ. தமிழ்நாடு ஈ. விஜயா
7. வானமளந்தது என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
அ. வான + மளந்தது ஆ. வான் + அளந்தது இ. வானம் + அளந்தது ஈ. வான் + மளாந்தது
8. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ. அறிந்தது அனைத்தும் ஆ. அறிந்தனைத்தும் இ. அறிந்ததனைத்தும்
ஈ. அறிந்துனைத்தும்
9. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ. வானம் அறிந்து ஆ. வான் அறிந்த இ. வானமறிந்த ஈ. வான்மறிந்த
10. வையகம் என்பதன் பொருள் யாது?
அ. உலகம் ஆ. காற்று இ. நெருப்பு ஈ .நீர்
11. வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி ! – இவ்வடியில் வரும் நயங்கள்___________
அ. மோனை,எதுகை ஆ. மோனை,முரண் இ. எதுகை,இயைபு ஈ. எதுகை, முரண்
12. தொல்லை என்பதன் பொருள் யாது?
அ. காலம் ஆ. தொந்தரவு இ. புகழ் ஈ. துன்பம்
13. பாரதியாரை செந்தமிழ் தேனீ என பாராட்டியவர் யார்?
அ. நாமக்கல் கவிஞர் ஆ. பாரதிதாசன் இ. பெருஞ்சித்திரனார் ஈ. திரு.வி.க
14. புதிய அறம் பாட வந்த அறிஞன் என அழைக்கப்படுபவர் யார்?
அ. நாமக்கல் கவிஞர் ஆ. பாரதியார் இ. பாரதிதாசன் ஈ. சுரதா
15. மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது எது?
அ. மொழி ஆ. விலங்குகள் இ. இயற்கை ஈ. பழக்க வழக்கம்