ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். அரையாண்டு முடிந்து மீண்டும் பள்ளிகள் 03-01-2022 முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்பு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த ஜனவரி மாதத்தில் முதல் திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அட்டவணையும், பாடத்திட்டமும் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதனை பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். தற்சமயம் வந்த ஒரு அறிவிப்பு ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி உயர் தொழில் நுட்ப ஆய்வகம் மூலம் 30 கேள்விகள் வீதம் 30 நிமிடங்கள் தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. அரசு வழங்கியுள்ள குறைக்கப்பட்ட பாடத்திட்டதின் அடிப்படையில் உங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. எந்தெந்த பாடப்பகுதியிலிருந்து எந்தெந்த நாட்களில் தேர்வு நடைபெறுகிறது என ஜனவரி மாதத்திற்கான அட்டவணையை அரசு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் அந்த நாட்களில் குறிப்பிட்ட வகுப்புக்கு அந்த தேர்வு நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அந்த அட்டவணையை இந்த வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். முங்கூட்டியே அந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்த வலைதளத்தில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு தினந்தோறும் ஒரு பாடத்திலிருந்து 20 வினாக்கள் கேட்கப்படும். இந்த வலைதளம் மூலம் வைக்கப்படும் இந்த தேர்வை மாணவர்கள் ஒருமுறைக்கு பலமுறை முயற்சித்துப் பாருங்கள். அவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
சரி அந்த உயர் கணினி தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் எந்தெந்த வகுப்புக்கு எந்தெந்த பாடங்கள் தேர்வு வைக்கப்படுகிறது என அறிந்துக் கொள்ள வேண்டாமா?
வாருங்கள்....கீழே உள்ள DOWNLOAD என்பதனை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். தேர்வுக்கு முன் கூட்டியே தயாராகுங்கள்.
வாழ்த்துகள்
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான
அட்டவணை
பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான
அட்டவணை