ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வகத்தில் தங்களுக்கான பாடத்திலிருந்து 30 வினாக்கள் கேட்கப்படும் அதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தின் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் அட்டவணையில் வழங்கியுள்ள பாடத்தின் அடிப்படையில் இந்த வலைதளத்தில் 25 வினாக்கள் இனி தினந்தோறும் இடம் பெறும். மாணவர்கள் இவற்றை நன்முறையில் பயிற்சி செய்து நன்மதிப்பெண் பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இங்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய இரண்டு இயல்களிலிருந்து பகுதி -2க்கான 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாக்களை நன்கு பயிற்சி பெறவும்.
பகுதி-1க்கான தேர்வினை எழுத இங்கே சொடுக்கவும் - CLICK HERE
வாழ்த்துகள்
நன்றி, வணக்கம்.
தமிழ் -ஒன்பதாம் வகுப்பு - தேர்வு - 2
தமிழ் -ஒன்பதாம் வகுப்பு - தேர்வு - 2
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் - 1 மற்றும் இயல் -2
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய பாடங்களில் குறைக்கப்பட்ட பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் கற்றதை இதில் பயிற்சி பெற இது உதவக்கூடும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
கூற்று :1 உலகின் குறிப்பிடத்தக்க,பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. கூற்று -2: மொகஞ்சதாரோ - ஹரப்பா அகழாய்வுக்குப் பின் இது உறுதிப்படுத்தப்பட்டது. கூற்று -3: இதனை ஆரிய நாகரிகம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
கூற்று1,2 சரி, கூற்று 3 தவறு
கூற்று 1 சரி, கூற்று2,3 தவறு
அனைத்து கூற்றுகளும் சரி
அனைத்து கூற்றுகளும் தவறு
ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி எனக் குறிப்பிட்டவர்----------------
ஹீராஸ் பாதரியார்
பிரான்ஸிஸ் எல்லிஸ்
வில்லியம் ஜோன்ஸ்
கால்டுவெல்
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் இம்மொழிகளை ஒரே இனமாக கருதி " தென்னிந்திய மொழிகள் " எனப் பெயரிட்டவர்
ஹீராஸ் பாதரியார்
வில்லியம் ஜோன்ஸ்
மாக்ஸ்முல்லர்
பிரான்சிஸ் எல்லிஸ்
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
பிரான்சிஸ் எல்லிஸ்
கால்டுவெல்
ஜோன்ஸ்
மாக்ஸ் முல்லர்
தமக்குத் தோன்றிய கருத்துகளைப் பிறருக்கு உணர்த்த மனிதர் கண்டுபிடித்த கருவி____________
கணினி
தொலைபேசி
இணையம்
மொழி
திராவிட மொழிக்குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் ____________ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
4
5
2
3
வேறுபட்டதைக் கண்டுபிடி:- தென் திராவிட மொழிகளில் சேராதது
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
கன்னடம்
திராவிட மொழிகள் மொத்தம்__________
30
28
26
29
வடதிராவிட மொழிகளில் இல்லாத மொழி எது?
துளு
குரூக்
மால்தோ
பிராகுயி
கண் என்பதற்கு ,கொண் - என்பது எந்த திராவிட மொழிகளிக்கான அடிச்சொல்
மலையாளம்
குடகு
தோடா
பர்ஜி
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரிய மொழி - எனக் கூறியவர்
பாரதியார்
ஜோன்ஸ்
பாரதிதாசன்
கால்டுவெல்
ராம சரிதம் என்னும் எந்த மொழிக்குரிய நூல்
தமிழ்
கன்னடம்
மலையாளம்
தெலுங்கு
கவிராஜ மார்க்கம் என்னும் இலக்கண நூல் எந்த மொழிக்குரியது?
தமிழ்
மலையாளம்
கன்னடம்
தெலுங்கு
எந்த நாட்டின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
மொரிசியஸ்
ஜப்பான்
தமிழில் தோன்றிய மிக பழமையான இலக்கண நூல்--------------
கம்பராமாயணம்
தொல்காப்பியம்
தமிழ்விடுதூது
புறநானூறு
ஏந்தி என்பதன் இலக்கண குறிப்பு யாது?
பெயரெச்சம்
வினையெச்சம்
உரிச்சொல்
இடைச்சொல்
காலமும் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
உம்மைத் தொகை
முற்றும்மை
எண்ணும்மை
சிறப்பும்மை
வணக்கம் வள்ளுவ என்ற நூலுக்கு எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
2005
2004
2003
2002
வளர்ப்பாய் - வளர் + ப் + ப் + ஆய் - இதில் பகுதி எது?
வளர்
ப்
ப்
ஆய்
தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு எது?
இந்தியா
மொரிசியஸ்
ஜப்பான்
சிங்கப்பூர்
நவரசங்களில் ஒன்று வேறுபட்டுள்ளது.
அழகு
வீரம்
அச்சம்
இழிப்பு
தமிழ் விடு தூது வில் உள்ள கண்ணிகள் மொத்தம் ___________
278
288
268
298
கீழ்க்கண்டவற்றில் பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.
முத்திக்கனி
தெள்ளமுது
குற்றமிலா
செவிகள் உணவான
சொல்லின் இறுதியில் நின்று திணை,பால்,எண்,இடம் ஆகியவற்றைக் காட்டுவது