ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வகத்தில் தங்களுக்கான பாடத்திலிருந்து 30 வினாக்கள் கேட்கப்படும் அதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தின் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் அட்டவணையில் வழங்கியுள்ள பாடத்தின் அடிப்படையில் இந்த வலைதளத்தில் 25 வினாக்கள் இனி தினந்தோறும் இடம் பெறும். மாணவர்கள் இவற்றை நன்முறையில் பயிற்சி செய்து நன்மதிப்பெண் பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய இரண்டு இயல்களிலிருந்து 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாக்களை நன்கு பயிற்சி பெறவும்.
பகுதி - 1 க்கான தேர்வினை எழுத இங்கே சொடுக்கவும் - CLICK HERE
வாழ்த்துகள்
நன்றி, வணக்கம்.
தமிழ் -பத்தாம் வகுப்பு - தேர்வு - 2
தமிழ் -பத்தாம் வகுப்பு - தேர்வு - 2
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் - 1 மற்றும் இயல் -2
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய பாடங்களில் குறைக்கப்பட்ட பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் கற்றதை இதில் பயிற்சி பெற இது உதவக்கூடும். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
வேறுபட்டதைக் காண்க:- பெருஞ்சித்திரனார் நூல்கள்
கூற்று -2: மொகஞ்சதாரோ - ஹரப்பா அகழாய்வுக்குப் பின் இது உறுதிப்படுத்தப்பட்டது. கூற்று -3: இதனை ஆரிய நாகரிகம் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
சிலை எழுபது
எண்சுவை எண்பது
நூறாசிரியம்
பள்ளிப்பறவைகள்
செந்தமிழ் என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினைத் தொகை
வேற்றுமைத் தொகை
பண்புத்தொகை
உவமைத் தொகை
பாவாணர் நூலகம் உருவாக்கியவர்---------------
அண்ணா
காமராஜர்
பாரதிதாசன்
இளங்குமரனார்
நாடும் மொழியும் நமது இரு கண்கள் எனக் கூறியவர்
பாரதிதாசன்
பாரதியார்
அறிஞர் அண்ணா
கால்டுவெல்
கொழுந்து வகை பெயர்களில் வேறுபட்ட ஒரு பெயர் இடம் பெற்றுள்ளது அந்த பெயரைக் காண்க:-
துளிர்
முறி
கொழுந்தாடை
தோகை
மிளகாய்ச் செடியின் அடிவகை எவ்வாறு வழங்கப்படுகிறது?
தூறு
தாள்
தண்டு
கோல்
திருவள்ளுவர் தவச்சாலை எங்கு அமைந்துள்ளது?
நெல்லூர்
அல்லூர்
அரியலூர்
பெரம்பலூர்
கத்தரி,மிளகாய் முதலியவற்றின் வித்து எவ்வாறு வழங்கப்படுகிறது?
கூலம்
விதை
காழ்
முத்து
குளுகுளுத்த பழத்திற்கு வழங்கும் பெயர்___________
அளியல்
அழுகல்
சொண்டு
சூம்பல்
பனையின் இளநிலை எவ்வாறு வழங்கப்படுகிறது?
குட்டி
பிள்ளை
வடலி
குருத்து
இவற்றில் இளம் பயிர்வகையை குறிக்கக்கூடிய பெயரைக் காண்க
கொத்து
பூம்பிஞ்சு
தொலி
கன்று
வேறுபட்டதைக் காண்க:- கெட்டுப் போன காய்கனி வகைக்கு வழங்கும் பெயர்கள்
சூம்பல்
சிவியல்
குடுக்கை
வெம்பல்
இளம் பாக்கின் பிஞ்சு வகை இவ்வாறு வழங்கப்படுகிறது?
கச்சல்
கருக்கல்
நுழாய்
குரும்பை
நெல்,தினை முதலியவற்றின் கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சீப்பு
கொத்து
அலகு
அளியல்
வேம்பு,ஆமணக்கு முதலியவற்றின் வித்து _____________
கொட்டை
முத்து
விதை
காழ்
உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும் போது அளபெடையில் அதனை குறிக்க ________ எழுத்து பின்னால் வரும்
சார்பெழுத்து
குறில்
துணையெழுத்து
மெய்யெழுத்து
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும்,ஏற்காமலும் வேறொரு பயனிலைக் கொண்டு முடிவது ___________