ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கணினி தொழில் நுட்ப ஆய்வகத்தில் தங்களுக்கான பாடத்திலிருந்து 30 வினாக்கள் கேட்கப்படும் அதற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜனவரி மாதத்திற்கு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது, அந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பாடத்தின் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் அட்டவணையில் வழங்கியுள்ள பாடத்தின் அடிப்படையில் இந்த வலைதளத்தில் 25 வினாக்கள் இனி தினந்தோறும் இடம் பெறும். மாணவர்கள் இவற்றை நன்முறையில் பயிற்சி செய்து நன்மதிப்பெண் பெறுமாறுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய இரண்டு இயல்களிலிருந்து 25 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினாக்களை நன்கு பயிற்சி பெறவும்.
பகுதி - 2 க்கான தேர்வினை எழுத இங்கே சொடுக்கவும் - CLICK HERE
வாழ்த்துகள்
நன்றி, வணக்கம்.
தமிழ் -பத்தாம் வகுப்பு- இயல் 1 மற்றும் இயல் -2
தமிழ் -பத்தாம் வகுப்பு- இயல் 1 மற்றும் இயல் -2
Quiz
மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் 1 மற்றும் இயல் 2 ஆகிய குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்திலிருந்து 25 வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளிக்க 30 நிமிடங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் மிகச்சரியான விடையை மட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தென்னன் மகளே - இதில் தென்னன் எனக் குறிப்பிடப்படுபவர்
பாண்டியன்
சேரன்
பல்லவன்
சோழன்
பெருஞ்சித்திரனாரின் எந்த நூல் தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது?
எண்சுவை எண்பது
பாவியக் கொத்து
திருக்குறள் மெய்ப்பொருளுரை
மகபுகுவஞ்சி
இமைகளை மூடிய படி எழுதும் ஆற்றலை திரு.வி.க. அவர்களிடம் கற்றுக் கொண்டவர்__________
பாரதியார்
க.சச்சிதானந்தன்
பாவாணர்
இளங்குமரனார்
சம்பா நெல்லில் எத்தனை வகைகள் உள்ளன?
70
60
50
40
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு____________
இந்தியா
சிங்கப்பூர்
ஹாங்காங்
மலேசியா
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குநராக பணியாற்றியவர்
பெருஞ்சித்திரனார்
க. சச்சிதானந்தன்
நாமக்கல் கவிஞர்
தேவநேயப் பாவாணர்
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாக திரிந்து அளபெடுப்பது__________
ஓற்றளபெடை
சொல்லிசை அளபெடை
இன்னிசை அளபெடை
இசை நிறை அளபெடை
கீழ்க்கண்டவற்றுள் பொதுமொழி யாது?
கண்ணன்
தாமரை
பாடல் பாடினான்
நீர்
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது ___________
சொல்
தொடர்
வாக்கியம்
கட்டுரை
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே__________
பாடிய : கேட்டவர்
பாடல் : பாடிய
பாடல் : கேட்டவர்
கேட்டவர்; பாடிய
"காய்ந்த இலையும், காய்ந்த தோகையும் " நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடைப்புக்குறிக்குள் உள்ளப் பகுதி குறிப்பிடப்படுவது
இலையும் சருகும்
தோகையும் சண்டும்
தாளும் ஓலையும்
சருகும் சண்டும்
எந்தமிழ்நா - என்பதனைப் பிரித்தால் இவ்வாறு வரும்
எந் + தமிழ் + நா
எந்த + தமிழ் + நா
எம் + தமிழ் + நா
எந்தம் + தமிழ் + நா
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை
குலைவகை
கொழுந்து வகை
மணிவகை
இலை வகை
சுடுதல் என்பதன் முதனிலைத் திரிந்த தொழிற் பெயர் ______________
சுடு
சூட்டல்
சூடு
சுடு
ப்ராண - ரஸம் என்பதன் பொருள்
சீராக
உயிர்வளி
மயங்குதல்
வீசுதல்
பாரதியின் பாராட்டுப் பெயர்களில் இல்லாத ஒன்று
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
பாரதி வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும்
சிந்துக்குத் தந்தை
பாட்டுக்கொருப் புலவன்
பாரதியார் எந்த இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்?
தினமணி
சுதேச மித்ரன்
வானம்பாடி
தினத்தந்தி
பாரதியாரின் பண்புகளில் ஒன்று வேறுபட்டுள்ளது. அது எது?
சிறுகதை ஆசிரியர்
விற்பனையாளர்
இதழாளர்
கட்டுரையாளர்
உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை ___________