9TH - EMIS QUIZ - 03-01-2022

 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் ஜனவரி 3 முதல் 31 வரை ஒரு மாதத்திற்கு தேர்வு கால அட்டவணை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் 30 வினாக்கள் வீதம் 30 நிமிடங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பாடத்திலிருந்து 6 ஆறு வினாக்கள் இடம் பெற்றுள்ளது.

03-01-2022 அன்று ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணினி உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தில் தேர்வு நடைபெற்றது. அந்த வினாக்கள் உங்களுக்கு இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த வினாக்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவர்கள் தங்களின் குறிப்பேட்டில் தனியே எழுதிக் கொள்ளவும்.

இந்த வினாக்களின்  PDF வடிவம் வேண்டுவோர், இந்த வினா விடையின் கீழ் அதற்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதனை பதிவிறக்கம் நீங்கள் 20 நொடிகள் காத்திருந்து அந்த வினாக்களின் PDF  வடிவத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

நன்றி, வணக்கம்

1.

மொழிகளின் காட்சிசாலை 

                        இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் மேற்பட்டது. இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை,

1. இந்தோ – ஆசிய மொழிகள்

2. திராவிட மொழிகள்

3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்

4. சீன – திபெத்திய மொழிகள்

என அழைக்கப்படுகின்றன.  பல கிளை மொழிகளும் இங்குப் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

                        உலகில் குறிப்பிடத்தக்க, பழமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ – ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் திராவிட நாகரிகம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழி எனப்படுகிறது.

 

1.   இந்தியாவில்பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை…

A.1100               B.1200               C.1300               D.1150

2 .இந்திய மொழிக்குடும்பங்களின்வகைகள்….

A.5                   B.4                   C.6                    D.3

 3. மொழிகளின்காட்சிச்சாலை என இந்தியநாட்டை குறிப்பிடுபவர்….

A.ச. அகத்தியலிங்கம்      B.புலவர் குழந்தை           C.கவிஞர் கண்ணதாசன்

D.மு.வரதராசன்

4. இந்திய நாகரிகத்தின்பழமை… அகழாய்வுக்குப் பின் 

உறுதி செய்யப்பட்டுள்ளது.

A.எகிப்து           B.ஆஸ்திரேலியா            C.ஐரோப்பா

D.மொஹஞ்சதாரோ – ஹரப்பா

 

5. இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை என அழைக்கப்படக் காரணம்…..

A.ஒரே மொழியைப் பேசுவதால்

B.இனக்குழுக்கள் தங்களுக்கென மொழியைப் பயன்படுத்துவதால்

C.பல மொழிகள் பேசப்படுவதால்

D.பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால்

6.கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் பண்புத்தொகை சொல்லைக் கண்டுபிடி.

A.நிறுத்தல்                     B.அடுபோர்                    C.அமையா                     D.நல்லிசை

7. Sachin kept his brother's note as a very personal coaching manual because……

A.a)It contained his brother's experiences                B.It contained some thoughts about batting

C.It contained the life history of Achrekar                 D.It contained the history of Indian Cricketing

8.The visitor's favourite place is ____________

A.Stone Bench    B.Mango tree                  C.Ship                D.The Jackfruit tree

9.He will not see me stopping here. Whom does he stand for?

A.The horse                    B.The man in the wood                 C.The owner of the wood D.God

10.Pineapple is sweet but mango is _________

A.Sweet B.Sweeter          C.Sweetest         D.Sweeterest

11.Which among the following is not the Homophone of Write

A.Right  B.Rite                C.Writ                D.Wright

12.Choose the sentence which has no error.

 A.Babu is elder than Rama.                      B.Sheela prefers coffee than green tea.

C.She is junior to me.                               D.It is a best option.

13.{1,2,3} என்ற கணத்தின் தகு உட்கணங்களின் எண்ணிக்கை

A.6                   B.8                   C.5                   D.7

14. A ={a,b,c,{a,b}} எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?

A. {a,b}  ϵ A                   B.a ϵ A              C. {a}ϵ A                        D. b,c ϵ A

15.எண்ணிலி  கணம் என்பது 

A.முடிவுள்ளது                B.முடிவில்லாதது             C.வெற்றுகணம்               D.எதுவுமில்லை 

16.A={1,2,3} மற்றும் B={3,4,5} ஆகிய கணங்களின் சமச்சீர் வித்தியாசம் 

A.{1,2}              B.{1,2,4,5}                     C.{4,3}              D.{2,5,1,4,3}

17. 76.1  என்ற தசம விரிவுஎண்ணின் பின்ன விரிவாக்கம் ___________

A.7 +  (6/10) + (1/100)                 B. (7/100 +  6 + (1/10)                 C.70 + 6 + (1/10) 

D. (7/10) + (6/100) + (1/100)

18.4.687687_______என்பது

A.சுழல் தன்மையுள்ள எண்                       B.முடிவுறு எண்               C.மெய்யெண்      D.முழு எண்

19.How many testing questions entered in the module?

20.சீரான வட்ட இயக்கத்தில் உள்ள பொருளில் திசைவேகத்தின் எண் மதிப்பு ஒவ்வொரு புள்ளியிலும் ---------?

A.சுழி                B.அதிகரிக்கும்   C. மாறிலி                      D. குறையும்

21.சுருள்வில் தராசு எந்த விதிப்படி இயங்குகிறது?

A.பாயில் விதி                B.சார்லஸ் விதி               C.ஹூக்ஸ் விதி   D.நியூட்டன் விதி

22.ஒரு பொருளை செங்குத்தாக மேல் நோக்கி எறிவதால், பொருள் பெரும உயரத்தை அடையும் போது பெறப்படும் முடுக்கம் ------ க்கு சமமாகும்

A.மைய நோக்கு விசை                B.மைய விலக்கு விசை

C.புவி ஈர்ப்பு முடுக்கம்                 D.மைய நோக்கு முடுக்கம்

23.மீச்சிற்றளவு சுழிப்பிழைத் திருத்தம் போன்றவற்றைக் கணக்கிட தேவை இல்லாத கருவியின் பெயர் …….. ஆகும்

A.திருகு அளவி              B.வெர்னியர் அளவி                    C.வெப்பநிலை மானி

D.எண்ணிலக்க வெர்னியர் அளவி

24.ஆரோக்கியமான மனிதனின் உடல் வெப்பநிலை என்ன?

A.98.6 °F          B.98.6 °K          C.98.6 °C          D.100 °C

25.இயக்க சமன்பாடு பொருந்துவது ________

A.அனைத்து வகையான இயக்கங்களுக்கும்

B.நேர்கோட்டு இயக்கத்தில் மட்டும்

C.வளைவு இயக்கத்தில் மட்டும்

D.வட்ட இயக்கத்தில் மட்டும்

26.கொடுக்கப் பட்டுள்ள ஆதாரங்களில் அகழ்வாராய்ச்சிக்கு பொருதாதது எது?

A.பாறை ஓவியங்கள்                  B.நாணயங்கள்               C.முதுமக்கள் தாழி

D.கற்கருவிகள்

27.ஆசிரியர் மாணவனிடம் புத்தகங்களை கட்டும் சணல் கயிற்றை வெட்டுவதற்கு கருவி ஒன்றைக் கேட்டார். மாணவன் கயிற்றை கல்லால் அதனை வெட்டினான். இந்த செயல் வரலாற்றின் எந்த காலத்துடன் தொடர்புடையது?

A.செம்புக் காலம் B.கற்காலம்        C.இரும்புக் காலம்

D.சுண்ணாம்புக் காலம்

28. சிந்து சமவெளிநாகரீகம் தொடர்பான பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி.

A.ஹரப்பா                      B.மோஞ்சதாரோ            C.லோத்தல்                     D.காசி

29.பின்வருவனவற்றுள்பாறைகளுடன் தொடர்புடைய வரலாற்று சின்னம் எது?

A.கல் மரம்         B.நாடுகல்                      C.ஓலைச் சுவடிகள்          D.சமணர் படுக்கை

30.தற்கால தேர்தல் முறைக்கு அடிப்படையாக இருந்த குடவோலை முறை எந்த ஆட்சிக் காலத்தில் இருந்தது?

A.சேரர்கள்                     B.சோழர்கள்      C.பாண்டியர்கள்              D.பல்லவர்கள்


 


நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post