நாள் : 03-01-2022 முதல் 08-01-2022
மாதம் : ஜனவரி
வாரம் : ஜனவரி - முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :1. மங்கையராய் பிறப்பதற்கே
2. புறப்பொருள் இலக்கணம்
கருபொருள் :
Ø நாட்டின்
பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும்
ஆற்றல் பெறுதல்
Ø பொருளிலக்கணத்தில்
புறப்பொருள் பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன் பெறுதல்
உட்பொருள் :
Ø ஆளுமை
மிக்க பெண்களின் சாதனைகளை அறிதல் மற்றும் போற்றுதல்
Ø புறப்பொருள்
கூறும் திணைகள் மற்றும் செய்திகளை பெறுதல்
கற்றல் விளைவுகள்
:
Ø ஆளுமை
மிக்க பெண்களின் சாதனைகளின் மூலம் தாமும் அந்நிலையை எட்டுதல் மற்றும் பெண்களை போற்றும்
மனப்பாங்கினை வளர்த்தல்.
Ø புறத்திணைகளின்
தன்மைகள் அறிதல். எதிரெதிர் திணைகளை அறிதல்
அறிமுகம் :
Ø மாணவர்களிடம்
அவர்களின் அம்மாக்கள் செய்யும் பணிகளை கேட்டறிந்து ஊக்கப்படுத்தி பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்.
Ø அகப்பொருள்
பற்றிய பாடப்பகுதியிலிருந்து சில வினாக்களைக் கேட்டு பாடப்பொருளை ஆயத்தப்படுத்துத
கற்றல் மாதிரிகள் :
Ø சாதனை
பெண்களின் புகைப்படங்கள்,கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி,
Ø வலையொளி
பதிவுகள்,விருதுகளின் புகைப்படங்கள்
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø
மங்கையராய்
பிறப்பதற்கே
o எம்.
எஸ். சுப்புலட்சுமி – 1954 – தாமரையணி விருது,
·
1963 – இங்கிலாந்து மற்றும் ஐ.நா.அவையில்
பாடல் பாடியது,
·
1974 – மகசேசே விருது
·
இந்திய மாமணி விருது
o பால
சரசுவதி - தாமரைச் செவ்வணி விருது
·
ஜனகணமன – பாடலுக்கு நடனம்
o ராஜம்
கிருஷ்ணன் - சாகெத்திய அகாதெமி விருது வென்றவர்,
·
கற்பனை கதை எழுதாதவர்
·
ஆய்வுக்குச் சென்று அங்கு உள்ள சூழல் குறித்து
எழுதுபவர்
o கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன் -மதுரையின் முதல் பட்டதாரி
·
இந்தியாவின் தாமரைத் திரு
·
சுவீடன் – வாழ்விரிமை விருது
·
சுவிட்சர்லாந்து – காந்தி அமைதி விருது
o சின்னப்பிள்ளை - மகளிர்
குழு ஆரம்பித்தவர்
·
பெண் ஆற்றல் விருது
·
ஒளவை விருது
·
பொதிகை விருது
·
தாமரைத்திரு விருது
Ø
புறப்பொருள் இலக்கணம்
o வெட்சி
– ஆநிரை கவர்தல்
o கரந்தை
– ஆநிரை மீட்டல்
o வஞ்சி
– மண்ணாசை காரணமாக போரிடல்
o காஞ்சி
– எதிர்த்து போரிடல்
o நொச்சி
– மதில் காத்தல்
o உழிஞை
– மதிலை கைப்பற்றுதல்
o தும்பை - வலிமை நிலைநாட்ட போரிடல்
o வாகை - வெற்றிப் பெற்ற மன்னனைப் பாடுதல்
o பாடாண்
– பாடு + ஆண் + திணை = பாடுவதற்கு தகுதி உடைய ஆண்மகனின் ஒழுகலாறுகளைப் பாடுவது
o பொதுவியல்
– வெட்சி முதல் பாடாண் வரை உள்ளவற்றில் சொல்லப்படாதவை மற்றும் பொதுவான தகவல்கள்
o கைக்கிளை - ஒரு
தலைக்காமம்
o பெருந்திணை - பொருந்தா
காமம்
o மூன்று காண்டங்கள்
ஆசிரியர் செயல்பாடு :
Ø பாடப்பொருளுக்கு
ஆர்வமூட்டல்
Ø விருதுகளின்
விளக்கங்கள் கூறல்
Ø பெண்களின்
சாதனைகளைப் பட்டியலிடுதல்
Ø ஒவ்வொரு
மாணவிக்கும் படிக்கும் வாய்ப்பினை நல்குதல்
Ø பொருள்
இலக்கணம் பற்றி விளக்குதல்.
Ø அகப்பொருள்
இலக்கணத்தை நினைவூட்டல்.
Ø ஒவ்வொரு
திணையின் செயல்பாடுகலையும், காணொலி வழியே காட்டுதல்.
Ø ஒவ்வொரு
திணையின் செயல்பாடுகளை விளக்குதல்
Ø எதிர்
எதிர் திணைகளை விளக்குதல்
Ø திணைக்குரிய
பூக்களை காட்டி விளக்குதல்
கருத்துரு வரைபடம் : மங்கையராய் பிறப்பதற்கே
புறப்பொருள்
இலக்கணம்
மாணவர் செயல்பாடு :
Ø
பார் போற்றிய பெண்களின் சாதனைகளை
அறிதல்
Ø
பெண்களுக்கான பணி கடினம்
என உணர்தல்
Ø
தனது
தாயின் உழைப்பை போற்றுதல்
Ø
விருதுகளின்
உன்னதம் அறிதல்.
Ø
தாங்களும்
அதுபோல விருதுகளை வாங்க முற்படுதல்
Ø
திணைகளின்
விளக்கம் தெளிதல்
Ø
எதிரெதிர்
திணைகளை அட்டவணைப்படுத்தி அறிதல்
Ø
திணைக்களுக்கு உரிய பூக்களையும் அதன் செயல்பாடுகளையும்
அறிதல்
வலுவூட்டல் :
Ø பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி
பாடப்பொருளை வலுவூட்டல்.
குறைதீர் கற்றல் :
Ø மீத்திற
மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர்
கற்றலை மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø
சாதனை
பெண்களின் சாதனைகளை அறிதல்.
Ø
சாதனை
பெண்களின் விருதுகளை அறிதல்.
Ø
திணையைப்
பற்றி அறிதல்.
Ø
திணைகளை
அட்டவணைப்படுத்துதல்
Ø
திணைக்குரிய
பூக்களை வகைப்படுத்துதல்
மதிப்பீடு :
Ø
எம்.
எஸ். சுப்புலட்சுமி எந்த ஆண்டு தாமரையணி விருது பெற்றார்?
Ø
வேருக்கு
நீர் என்ற புதினம் எழுதியவர் யார்?
Ø
ஆநிரைகள்
பற்றிய திணைகள் யாவை?
Ø
மதில்
போர் பற்றிய திணைகள் யாவை?
Ø
பாடாண்
திணையை பற்றிக் கூறுக.
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில்
உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----------------------
நன்றி,
நன்றி, வணக்கம் – தமிழ்விதை