ஆசிரியர்கள், மாணவர்கள்,மற்றும் அரசுபணிக்காக காத்துக் கொண்டுருக்கும் அனைத்து போட்டித் தேர்வர்களுக்கும் தமிழ் விதை வாழ்த்துகளும், வணக்கமும். இந்த பதிவில் நீங்கள் காணுவது தமிழ்- பொது இலக்கணம் வினா-விடைகள் மற்றும் இணைய வழித் தேர்வு. இந்த வினா-விடைகளை உங்கள் குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இந்த வினா- விடைகளை படித்தபின் வினா- விடைகளின் இறுதியில் இதற்கான இணைய வழித் தேர்வு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் கற்றதை பயிற்சி பெறுவதற்கு இந்த இணைய வழித் தேர்வு உதவிகரமாக இருக்கும். ஒவ்வொரு வினாவிற்கும் 25 நொடிகள் விடையளிப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்கு சிந்தித்து விடையளிக்கவும்.
நன்றி, வணக்கம்
பொதுத்தமிழ் – இலக்கணம்
இத்தேர்வு TNPSC,TET,TRB மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பயன்படக் கூடியது
1. முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுதுகள்
A) குளிர் மர்றும் பெரும்பொழுதுகள்
B) கார் காலம்
C) ஆறு பெரும் பொழுதுகளும்
D) இளவேனில், முதுவேனில், பின்பனி
2. திணைக்குரிய பண்ணோடுப் பொருத்துக.
திணை - பண்
A) முல்லை - 1) செவ்வரிப்பண்
B) மருதம் - 2) சாதாரிப்பண்
C) நெய்தல் - 3) பஞ்சாரப்பண்
D) பாலை - 4) மருதப்பண்
a b c d
A) 3 2 4 1
B) 2 4 1 3
C) 2 4 3 1
D) 4 2 1 3
3. கீழ்க்கண்டவற்றுள் முல்லை நிலத்துடன் பொருந்தாதது.
A) மாயோன் B) பாடி
C) நிரைமேய்த்தல் D) சிங்கம், கரடி
4. நிலங்களுடன் சரியாகப் பொருந்திய சிறுபொழுதை அறிக.
A) பாலை - எற்பாடு
B) மருதம் - வைகறை
C) நெய்தல் - நண்பகல்
D) குறிஞ்சி - மாலை
5. ஆறு பெரும்பொழுதுகளும் கொண்ட நிலம்?
A) குறிஞ்சி B) மருதம்
C) நெய்தல் D) B, C இரண்டும்
6. பொருந்தும் இணை அறிக:-
நிலம் கடவுள்
A) குறிஞ்சி - திருமால்
B) முல்லை - வருணன்
C) நெய்தல் - இந்திரன்
D) பாலை - கொற்றவை
7. திணைக்குரிய கருப்பொருள்களில் பொருந்துவது எது?
A) முல்லை - சிறுகுடி
B) மருதம் - சேரி
C) நெய்தல் - பட்டிணம்
D) பாலை - பேரூர்
8. பொருந்தா ஒன்றைத் தேர்க
A) இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
B) குளிர் காலம் - ஐப்பசி, கார்த்திகை
C) பின்பனிக் காலம் - ஆனி, ஆடி
D) கார் காலம் - ஆவணி, புரட்டாசி
9. மண்ணாசைக் கருதி போருக்கு செல்வது
A) வஞ்சி B) காஞ்சி
C) தும்பை D) நொச்சி
10. தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடுவது
A) நொச்சி B) தும்பை
C) வாகை D) காஞ்சி
11. கீழ்வரும் வினைமுற்றுக்கு இணையான வேர்ச்சொல்லில் பொருந்தா இணை அறிக.
A) வனைந்தான் - வனை
B) கொண்டான் - கொண்
C) வந்தான் - வா
D) புக்கான் - புகு
12. கீழ்வருவனவற்றுள் வேர்ச்சொல் – அல்லாத ஒன்றைத் தேர்க.
A) படி B) நொ
C) வா D) அழைத்தி
13. கீழ்வரும் வேர்ச்சொற்களுக்கான தொழிற்பெயர்களுள் பொருந்தா ஒன்றைத் தேர்க.
A) இயற்று - இயற்றுதல்
B) விளம்ப - விளம்பல்
C) பொறு - பொறுமை
D) தா - தருக
14. ‘குறுகினன்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க.
A) குறு B) குறுகு
C) குறுகுதல் D) குறுக
15. பின்வரும் சொற்களுக்கு இணையாக அமைந்த வேர்ச்சொற்களுடன் பொருந்தா ஒன்றைத் தேர்க.
A) பொழிந்திழிய - பொழிந்து
B) ஆக்கி - ஆக்கு
C) அழுங்கி - அழுங்கு
D) துளங்குதல் - துளங்கு
16. கீழ்வரும் சொற்களுள் வினையாலணையும் பெயர் அல்லாதது / அல்லாதவை எது?
A) சேயவர் B) வந்தவர்
C) உணர்த்துவர் D) மாதவர்
A) A, B B) B, C
C) A, C D) B, D
17. கூவா முன்னம் இளையோன் குறுகி ________________
– இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் வேர்ச்சொல் அறிக.
A) கூவு B) கூவி
C) கூவாத D) கூ
18. மன்பதை காக்குங் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள் - இதில் அடிக்கோடிட்ட சொற்களின் வேர்ச்சொற்கள் முறையே
A) கா, கெடு B) காப்பாத்து, கெடு
C) காக்க, கெடு D) காத்த, கெடுத்த
19. நேரசை பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றுஎது?
A) தனிக்குறில்
B) குறிலொற்று
C) குறில் நெடிலொற்று
D) சொல்லுக்கு முன் தனிக்குறில் நேரசையாகாது
20. பொருந்தா ஒன்றினைதேர்க.
(A) நன்றன்று - நேர் நேர் நேர்
(B) சமன் செய்து - நேர் நிரை நேர்
(C) பண்புடையார் - நேர் நிரை நேர்
(D) துணிவுடைமை - நிரை நிரை நேர்
21. பொருந்தா இணைதேர்க:-
(A) வளங்குன்றி - புளிமாங்காய்
(B) தரும் - மலர்
(C) புன்கணீர் - கூவிளம்
(D) துப்பார்க்குத் - புளிமாங்காய்
22. “அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்”
இதில் அமைந்துள்ள இயைபுத்தொடை.
(A) மேற்கதுவாய்இயைபு (B) கீழ்க்கதுவாய்இயைபு
(C) கூழைஇயைபு (D) பொழிப்புஇயைபு
23. ஒன்னார் தெறலும் உவந்தாரைஆக்கலும்
இதில்அமைந்துள்ளஒன்னார்- உவந்தார்என்பது
(A) இணைமுரண் (B) பொழிப்புமுரண்
(C) கூழைமுரண் (D) ஒரூஉமுரண்
24. கமழக் கமழத் தமிழிசை பாடினாள் – மோனை அறிக.
A) இணை மோனை B) ஒரூஉ மோனை
C) இன மோனை D) பொழிப்பு மோனை
25. நன்னிற மென்முகை மின்னிடை வருத்தி
இதில் பயின்று வரும் எதுகை வகை
A) பொழிப்பு எதுகை B) இணை எதுகை
C) கூழை எதுகை D) மேற்கதுவாய் எதுகை
26. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு – இக்குறளில் இணை எதுகையானது
A) மறந்தும் - பிறன்கேடு
B) சூழற்க - சூழின்
C) அறஞ்சூழும் - சூழ்ந்தவன்
D) பிறன்கேடு - கேடு
27. ஆர்பரவை அணிதிகழும்
மணிமுறுவல் அரும்பரவை
- இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
A) சீர்மோனை அமைந்துள்ளது
B) சீர்முரண் அமைந்துள்ளது
C) சீர்இயைபு அமைந்துள்ளது
D) கீழ்க்கதுவாய் மோனை அமைந்துள்ளது
28. தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும் – இதில் அமைந்துள்ள
தக்கார் – தகவிலார் என்னும் சொற்களாவன
A) இணை முரண் B) அடி முரண்
C) பொழிப்பு முரண் D) கூழை முரண்
29. பொருந்தா ஒன்றைத் தேர்க:-
A) பாடு B) சூடு
C) மாடு D) பேறு
30. தொழிற்பெயர் அல்லாத ஒன்றைத் தேர்க:-
A) வாழ்வு B) முயற்சி
C) பணிவு D) மழவு
31. பொதுமொழியோடு தொடர்பில்லாத ஒன்றைத் தேர்க:-
A) அந்தமான் B) ஒருதனி
C) வேங்கை D) வைகை
32. சினைப்பெயர் அல்லாத ஒன்றைத் தேர்க:-
A) உகிர் B) எயிறு
C) கோடு D) உடல்
33. சினையாகு பெயருடன் பொருந்தாது
A) தலைக்கு ஒரு சேலை B) மல்லிகை சூடு
C) மரிக்கொழுந்து நட்டான் D) வெற்றிலை நட்டான்
34. காலவாகு பெயருடன் பொருந்தாது
A) டிசம்பர் மலர்ந்தது B) கார் அறுத்தான்
C) அக்டோபர் எழுதினான் D) காசி வென்றது
35. பொருளாகுபெயருடன் பொருந்தாது
A) பூசணி சாம்பார் B) சேனைக் கூட்டு
C) தாமரை மலர்ந்தது D) தலைக்கு ஒன்று கொடு
36. வினைமுற்றையோ,பெயர்ச்சொல்லையோ வினாச்சொல்லையோ கொண்டு முடிவது…..
A நான்காம் வேற்றுமை B) மூன்றாம் வேற்றுமை
C) முதல் வேற்றுமை D) எட்டாம் வேற்றுமை
37. பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது…
A) மூன்றாம் வேற்றுமை உருபு B) ஏழாம் வேற்றுமை உருபு
C) நான்காம் வேற்றுமை உருபு D) இரண்டாம் வேற்றுமை உருபு
38. ஆசிரியரோடு மாணவன் வந்தான் இத்தொடரிலுள்ள மூன்றாம் வேற்றுமை
உருபு உணர்த்தும் பொருள்
A) இயற்றுதல் கருத்தாப் பொருள் B) ஏவுதல் கருத்தாப் பொருள்
C) உடனிகழ்ச்சிப் பொருள் D) கருவிப் பொருள்
39. விளிப்பொருளில் வரும் வேற்றுமை
A) எட்டாம் வேற்றுமை B) ஏழாம் வேற்றுமை
C) ஐந்தாம் வேற்றுமை D) நான்காம் வேற்றுமை
40. இடப்பொருளை உணர்த்தி வரும் வேற்றுமை
A) முதல் வேற்றுமை B) ஆறாம் வேற்றுமை
C) ஏழாம் வேற்றுமை D எட்டாம் வேற்றுமை
41. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் பொருள்களை உணர்த்தும் வேற்றுமை
A) நான்காம் வேற்றுமை B) ஆறாம் வேற்றுமை
C) ஐந்தாம் வேற்றுமை D) மூன்றாம் வேற்றுமை
42. அகர வரிசைப் படுத்தி எழுதுக.
A) முத்தம், சத்தம், நித்தம், மத்தம்
B) சத்தம், நித்தம், முத்தம், மத்தம்
C) சத்தம், நித்தம், மத்தம், முத்தம்
D) மத்தம், முத்தம், நித்தம், சத்தம்
43. அகர வரிசைப் படுத்தி எழுதுக.
A) தை, தீ, தயிர், தூள் B) தயிர், தீ. தூள், தை
C) தை, தயிர், தூள், தீ D) தயிர், தீ, தூள், தை
44 பொருந்தா ஒன்றைத் தேர்க:-
A) இடுகுறிப் பொதுப்பெயர் - மரம்
B) காரணச் சிறப்புப்பெயர் - மயில்
C) இடுகுறிச் சிறப்புப்பெயர் - பனை
D) காரணச் பொதுப்பெயர் - இசைக்கருவி
45. நீணிலம் - பிரித்தறிதலில் சரியான விடையைத் தேர்க:-
A) நீண்ட + நிலம் B) நீ + நிலம்
C) நீள் + நிலம் D) நீண் + நிலம்
46. தீந்தமிழ் - பிரித்தறிதலில் எது சரியானது என அறிக
A) தீ + தமிழ் B) தீமை + தமிழ்
C) தீம் + தமிழ் D) தீன் + தமிழ்
47. ‘கல் என்பதின் வியங்கோள் வினைமுற்று
A) கல்க B) கற்க
C) கற்று D) கற்றவர்
48 ஊடலும், ஊடல் நிமித்தமும் எத்தினைக்குரியது
A) குறிஞ்சி B) முல்லை
C) மருதம் D) பாலை
49 பொருந்தா ஒன்றைத் தேர்க
A) இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி
B) குளிர் காலம் - ஐப்பசி, கார்த்திகை
C) பின்பனிக் காலம் - ஆனி, ஆடி
D) கார் காலம் - ஆவணி, புரட்டாசி
50. கருத்தாப் பொருள் உணர்த்தி வரும் வேற்றுமை
A முதல் வேற்றுமை B) மூன்றாம் வேற்றுமை
C) எட்டாம் வேற்றுமை D) நான்காம் வேற்றுமை