COMPETITVE EXAMS - SOCIAL SCIENCE


ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். வருகின்ற புத்தாண்டு ஜனவரி மாதத்திலிருந்து போட்டித் தேர்வுகள், உதவித் தொகைத் தேர்வுகள், பள்ளி தேர்வுகள் என வரக்கூடியது. அந்த வகையில்NMMS,TRUST,NTSE, மற்றும் TNPSC தேர்வுக்கு தயார் ஆகின்ற மாணவர்கள் இந்த வலைதளம் மூலம் கொடுக்கப்படும் வினாக்கள் உங்கள் முயற்சிக்கு இது உதவக்கூடும் என நம்ப்படுகிறது. அந்த வகையில் சமூக அறிவியல் பாடப்பகுதியில் இடைக்கால இந்திய வரலாறு என்ற பாடத்தலைப்பிலிருந்து வினா- விடைகள் இங்குத் தொகுத்து  கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வினா- விடைகளுக்கு கீழ் இந்த வினாக்களை நீங்கள் இணையவழித் தேர்வாகவும் எழுதிப் பார்க்கலாம். ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்க 25 நொடிகள் உங்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டுரிக்கும் மாணவர்கள் இந்த வினா - விடை தொகுப்பும், இணையவழித் தேர்வும் மிகவும் உதவியாகவும் இருக்கும் என நம்புகிறேன். மேற்கொண்டு இந்த வலைதளத்தில் TNPSC போட்டித் தேர்வர்கள் இங்கு தமிழ் பாடத்திற்கும் இணைய வழித் தேர்வு வைக்கப்பட்டுள்ளது. அதனையும் நீங்கள் பயன்படுத்தி தமிழ் தாளில் 40% மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். 

NMMS, TRUST,NTSE ,TNPSC

போட்டித் தேர்வுக்குரிய வினாக்கள்

சமூக அறிவியல்

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

1.       தொடக்க இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது _____________

அ. கி.பி. 700 முதல் 1200 வரை                ஆ. கி.பி.600 முதல் 1100 வரை

இ. கி.பி. 500 முதல் 1000 வரை                 ஈ. கி.பி. 800 முதல் 1300 வரை

2.     பின் இடைக்கால இந்திய வரலாற்று காலம் என்பது _______________

அ. கி.பி. 1000 முதல் 1500 வரை               ஆ. கி.பி. 1100 முதல் 1600 வரை

இ. கி.பி. 1200 முதல் 1700 வரை               ஈ. கி.பி. 1300 முதல் 1800 வரை

3.      இடைக்கால இந்திய வரலாற்றை கற்கும் அறிஞர்களுக்கு நல்வாய்ப்பாக கிடைக்கப் பெற்றவை _____

அ. பணம்                       ஆ. சான்றுகள்               இ. மனிதர்கள்                ஈ. விலங்குகள்

4.      அதிக செய்திகளை வழங்கும் இடைக்கால இந்திய வரலாற்றுச் சான்றுகள் ______

அ. கல்வெட்டுகள்            ஆ. கட்டடங்கள்              இ. இலக்கியங்கள்           ஈ. பயணக்குறிப்புகள்

5.      ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்தவர் ___________

அ. காஃபிகான்              ஆ. நேதாஜி                   இ. வாஸ்கோடகாமா       ஈ. அக்பர்

6.      விசுவாசம் உள்ளவராக இருத்தல், ஆபத்துக்கு அஞ்சாமை ஆகியவை வரலாற்று ஆசிரியர்களின் கடமைகள் என்று கூறியவர் _______________

அ. ஔரங்கசீப்               ஆ. நேதாஜி                   இ. காஃபிகான்               ஈ. ஜஹாங்கீர்

7.      கடந்த காலத்தை மறுகட்டுமானம் உதவக்கூடிய பதிவுகளே __________ எனப்படும்.

அ. கடமைகள்                 ஆ. சான்றுகள்               இ. உரிமைகள்               ஈ. கூற்றுகள்

8.      சான்றுகள் உதவியுடன் நாம் __________ பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சி ஆகிய விவரங்களை திறனாய்வு என்கிறோம்.

அ. அரசியல்                   ஆ. சினிமா                    இ. கல்வி                        ஈ. கூற்றுகள்

9.      இந்திய வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் ____________ வகைப்படும்.

அ. இரண்டு                    ஆ. மூன்று                     இ. நான்கு                     ஈ. ஐந்து

10.    கீழ்க்கண்டவற்றுள் எது முதல்நிலைச் சான்றுகளுள் ஒன்று அல்ல-------

அ. பொறிப்புகள்             ஆ. கல்வெட்டுகள்           இ. நாணயங்கள்             ஈ. சுயசரிதைகள்

11.     இரண்டாம் நிலைச் சான்றுகளுக்கு எடுத்துக்காட்டு--------

அ. பொறிப்புகள்             ஆ. இலக்கியங்கள்          இ. செப்புப்பட்டயங்கள்      ஈ. நாணயங்கள்

12.   பாறைகள், கற்கள், கோவிற்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றில் கடினமான மேற்பரப்பின் மேல் பொறிக்கப்படும் எழுத்துகள் ____________ எனப்படும்.

அ. பொறிப்புகள்             ஆ. இலக்கியங்கள்          இ. பயணக்குறிப்புகள்      ஈ. செப்புப்பட்டயங்கள்

13.    சட்டப்பூர்வமான ஆவணங்களாக ஐயப்பாடுகளுக்கு இடமில்லாத மதிப்புகளைக் கொண்டுள்ளவை _______ ஆகும்.

அ. இலக்கியங்கள்           ஆ. பயணக்குறிப்புகள்     இ. நாணயங்கள்             ஈ. செப்புப்பட்டயங்கள்

14.   செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருப்பதன் விளைவாக அவற்றுக்கு மாற்றாகப் பயன்பாட்டுக்கு வந்த சான்று

அ. பனையோலை           ஆ. கற்கள்                     இ. தகடுகள்                   ஈ. உலோகங்கள்

15.   செப்புப்பட்டயங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு---------

அ. 11 ஆம் நூற்றாண்டு    ஆ. 12 ஆம் நூற்றாண்டு  இ. 13 ஆம் நூற்றாண்டு   ஈ. 14 ஆம் நூற்றாண்டு

16.    பிற்கால சோழர்களின் காலம் __________

அ. 5-10 ஆம் நூற்றாண்டு           ஆ. 10-15 ஆம் நூற்றாண்டு        

இ. 10-13 ஆம் நூற்றாண்டு          ஈ. 15 -20 ஆம் நூற்றாண்டு

17.    பிற்காலச் சோழர்கள் காலத்தில் கொடை வழங்கியவரின் அறச்செயல்கள் அதிகம் பதிவு செய்யப்பட்ட ஆவணம் ___________

அ. செப்புப்பட்டயங்கள்     ஆ. கல்வெட்டுகள்           இ. பனையோலைகள்       ஈ. நாணயங்கள்

18.   உத்திரமேரூர் கல்வெட்டுகள் __________ நிர்வாகம் குறித்த விவரங்களை உள்ளடக்கியது ஆகும்,

அ. அரசவை                   ஆ. மாவட்டங்கள்           இ. சான்ற்கள்                 ஈ. கிராமங்கள்

19.    தவறான இணையைக் கண்டுபிடி:-

அ. வேளாண் வகை        -          பிராமணரல்லாத   உடைமையாளருக்குச் சொந்தமான நிலங்கள்

ஆ. பிரம்மதேயம்            -          பிராமணருக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்

இ. சாலபோகம்               -          கல்வி நிலையங்களைப் பராமரிப்பதற்காக வழங்கப்பட்ட நிலங்கள்

ஈ. தேவதானம்               -          சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்

20.   சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக அளிக்கப்பட்ட நிலங்கள் _______________ ஆகும்.

அ. பள்ளிச் சந்தம்            ஆ. தேவதானம்              இ. சாலபேகம்                 ஈ. பிரம்ம தேயம்

21.   இந்தியாவில்  புதுவகையான கட்டடக் கலையை அறிமுகம் செய்தவர்கள் _______

அ. அசோகர்கள்             ஆ. சீக்கியர்கள்              இ. மராத்தியர்கள்           ஈ. சுல்தான்கள்

22.  இந்தியாவில் சுல்தான்கள் அறிமுகம் செய்த புதுவகையான கட்டடக்கலையின் முக்கியக் கூறுகளுள் ஒன்று

அ. குவிமாடங்கள்          ஆ. பயணக்குறிப்புகள்     இ. நாணயங்கள்             ஈ. செப்புப்பட்டயங்கள்

23.  பிற்காலச் சோழர்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய நேர்த்தியான பிரம்மாண்டமான கட்டிடங்களுக்கு அடையாளமாகத் திகழ்வது___________

அ. கஜூராகோ               ஆ. அபுகுன்று                இ. கங்கை கொண்ட சோழபுரம்     ஈ. விருப்பாக்சா     

24.  ஹைதராபாத்தில் உள்ள இடைக்காலத்தைச் சேர்ந்த முக்கியமான மசூதி ___________

அ. மோத் – கி – மசூதி   ஆ. சார்மினார்               இ. ஜமா மசூதி    ஈ. குவ்வத் -உல் – இஸ்லாம் – மசூதி

25.  வட இந்தியாவில் உள்ள பாழடைந்த நகரம் _______

அ. சென்னை                  ஆ. மும்பை                    இ. கேரளா                     ஈ. துக்ளகாபாத்

26.  தென்னிந்தியாவில் உள்ள ____ இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலமாகும்.

அ. பிரோஷாபாத்           ஆ. ஹம்பி                     இ. துக்ளகாபாத்             ஈ. டெல்லி

27.  _____ இல் உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.

அ. கட்டடங்கள்               ஆ. கல்லறைகள்              இ. மசூதிகள்                  ஈ. நாணயங்கள்

28.  தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமாக இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்தவர்_____

அ. முகமது கோரி          ஆ. அக்பர்                     இ. நேதாஜி                    ஈ. வாஸ்கோடகாமா

29.  டெல்லி சுல்தாங்களின் காலகட்டத்தை அறிந்து கொள்ள ________ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.

அ. ஜிட்டல்                      ஆ. டங்கா                     இ. தேவராம்                   ஈ. குன்றிமணி

30.   தவறான இணையைக் கண்டுபிடி:-

அ. டெல்லி சுல்தான்        -          ஜிட்டல்

ஆ. இல்துமிஷ்                -          டங்கா

இ. அலாவுதீன் கில்ஜி       -          வெள்ளி நாணயங்கள்

ஈ. முகமது பின் துக்ளக்  -          செப்பு நாணயங்கள்

31.    ஒரு ஜிட்டல் என்பது ______  வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.

அ. 3.6               ஆ. 3.2              இ. 3.4               ஈ. 3.8

32.  ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமமானது __________ ஜிட்டல் ஆகும்.

அ. 36                ஆ. 42              இ. 56                ஈ.         48

33.   கீழ்க்காணும் அரசர்களுள் தங்க நாணயங்களை வெளியிட்டவர்/ வெளியிட்டவர்கள்_________

அ. அலாவுதீன் கில்ஜி                  ஆ. முகமதிகோரி           இ. இல்துமிஷ்     ஈ. முகமது பின் துக்ளக்

1. அ.மட்டும்        2. அ மற்றும் ஆ              3. அ,ஆ,மற்றும் இ          ஈ. எதுவுமில்லை

34.   “ பக்தி இலக்கியங்களின் காலம் “ என்று அழைக்கப்படுவது ____________ காலம் ஆகும்.

அ. முகலாயர்கள்             ஆ. சோழர்கள்                           இ. சேரர்கள்       ஈ. பாண்டியர்கள்

35.   கீழ்க்காண்பவைகளுள் எது சமயச் சார்பற்ற இலக்கிய நூல்களுள் ஒன்று அல்ல.

அ. மதுரா விஜயம்           ஆ. அமுக்த மால்யதா                  இ. ராஜதரங்கணி           ஈ. திருவாசகம்

36.   கீழ்க்காண்பவைகளுள் எது சமய இலக்கிய நூல்களில் ஒன்று__________

அ. மதுரா விஜயம்           ஆ. அமுக்த மால்யதா                  இ. ராஜதரங்கணி           ஈ. திருவாசகம்

37.   பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் _____

அ. கம்பராமாயணம்        ஆ. பெரிய புராணம்        இ. தேவாரம்       ஈ. நாலாயிர திவ்விய பிரபந்தம்

38.   அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம்____

அ. தேவாரம்                  ஆ. கீதகோவிந்தம்          இ. திருவாசகம்   ஈ. பெரியபுராணம்

39.   பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் _______

அ. முகமது கோரி          ஆ. அலாவுதீன்               இ. கபீர்தாஸ்      ஈ. இல்துமிஷ்

40.   கங்காதேவியால் இயற்றப்பட்ட இலக்கியம்_______

அ. அமுக்தமால்யதா        ஆ. மதுரா விஜயம்          இ. திருவாசகம்               ஈ. தேவாரம்

41.   இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விளக்கும் ஒரே சான்று கல்ஹணரின் _________ மட்டுமே ஆகும்

அ. ராஜதரங்கணி           ஆ. பிருதிவிராஜ ராசோ             இ. மதுரா விஜயம்           ஈ. அமுக்தமால்யதா

42.  தாஜ் – உல்-மா- அசிர் எனும் நூல் __________ பற்றிய பல செய்திகளை முன் வைக்கிறது.

அ. குத்புதீன் ஐபக்           ஆ. நஸ்ருதீன் மாமூது                 இ. இல்துமிஷ்                 ஈ. ஹசன் நிஜாமி

43.   டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூல் ________

அ. தபகத் – இ- நஸிரி   ஆ. தாஜ் – உல்- மா- அசிர்        இ. தாரிக் – இ- பிரோஷாகி           

ஈ. அக்பர் நாமா

44.  பாபர் எழுதிய நூல் _________

அ. அயனி அக்பர்            ஆ. அக்பர் நாமா            இ. பாபர் நாமா               ஈ. தசுக் -இ- ஜாஹாங்கீரி

45.  அபுல் பாசல் எழுதிய நூல் _______

அ. பாபர் நாமா              ஆ. தசுக் -இ- ஜாஹாங்கீரி         இ. தாரிக் – இ- பதானி             

ஈ. அயினி அக்பர்

46.  ஜாஹாங்கீர் எழுதிய நூல் __________

அ. பாபர் நாமா              ஆ. தசுக் -இ- ஜாஹாங்கீரி         இ. தாரிக் – இ- பதானி             

ஈ. அயினி அக்பர்

47.  நிஜாமுதீன் அகமத் என்பவரால் எழுதப்பட்ட நூல் _______

அ. தபகத் – இ – அக்பரி ஆ. தபகத் – இ – நஸிரி              இ. தாரிக் – இ- பிரோஷாகி           

ஈ. தாரிக் – இ – பெரிஷ்டா

48.  பதானி எழுதிய நூல் _______

அ. தபகத் – இ – நஸிரி  ஆ. பாபர் நாமா இ. தாரிக் – இ- பதானி  ஈ. தாரிக் – இ- பிரோஷாகி

49.  தாரிக் – இ – பதானி என்னும் நூல் ________ தொகுதிகளைக் கொண்டது.

அ. 2                 ஆ. 4                இ. 1                  ஈ. 3

50.   வெனிஸ் நகரைச் சேர்ந்த பயணி ___________

அ. பதானி         ஆ. அக்பர்         இ. பாபர்            ஈ. மார்கோபோலோ

51.   மார்கோ போலோ தமிழகத்தில் _______ என்ற ஊருக்கு இரு முறை வந்துள்ளார்.

அ. திருநெல்வேலி           ஆ. காயல்          இ. சிவகங்கை                ஈ. மதுரை

52.  கஜினி மாமுதின் படையெடுப்பின் போது அவருடன் தங்கியிருந்தவர் _________

அ. அல் – பரூனி             ஆ. இபன்பதூதா            இ. பதானி         ஈ. அக்பர்

53.   அல் – பரூனி எழுதிய நூல் __________

அ. அயினி அக்பர்          ஆ. பாபர் நாமா இ. துசிக் – இ – ஜாஹாங்கீரி      ஈ. தாகுயூக் – இ – ஹிந்த்

54.  மொராக்கோ நாட்டு அறிஞர் __________

அ. அல் – பரூனி             ஆ. இபன் பதூதா           இ. பதானி         ஈ. பாபர்

55.  இபன் பதூதாவின் பயண நூல் ____________

அ. ரிக்ளா                     ஆ. தாகுயூக் – இ – ஹிந்த்          இ.மதுரா விஜயம்            ஈ. ராஜதரங்கிணி

56.  தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் ___________

அ. இபன் பாதூதா          ஆ.அல்-பரூனி               இ. முகமது பின் துக்ளக்              ஈ. அக்பர்

57.  1420 – இல் விஜய நகர் வந்த இத்தாலியப் பயணி _____

அ. நிகோலா கோண்டி    ஆ. இபன் பதூதா           இ. அல் – பரூனி             ஈ. பதானி

58.  தாஜ்மஹாலைப் போன்று வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள கோவில் -------

அ. கஜூராஹோ கோவில்            ஆ. தில்வாரா ஆலயம்     இ. சூரியக்கோயில்         ஈ. பெரியகோவில்

59.  இசைப்படிகள் கொண்ட பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைக்கு அடையாளமாக விளங்கும் கோவில் _

அ. பெரிய கோவில்         ஆ. ஐராதீஸ்வரர் கோவில்            இ. கஜூராஹோ கோவில்            

ஈ. சூரியக் கோவில்

60.   கல்தேர் அமைந்துள்ள கோவில் ____________

அ. ஹம்பி          ஆ. ஐராதீஸ்வரர் கோவில்            இ. கஜூராஹோ கோவில்             ஈ. சூரியக்கோவில்

61.    இந்தியாவில் இராஜபுத்திரர்களின் மேன்மைகளை விளக்கும் அரண்மனைகள் உள்ள மாநிலம் ______

அ. குஜராத்        ஆ. இராஜஸ்தான்           இ. மத்தியப் பிரதேஷம்                ஈ. மேற்கு வங்காளம்

62.  இந்தியாவில் முதன் முறையாக இந்தோ – இஸ்லாமிய முறையில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?

அ. இல்துமிஷ்     ஆ. பால்பன்                   இ. அலாவுதீன் கில்ஜி                   ஈ. பாபர்

63.   டங்கா என்பது___________

அ. தங்க நாணயம்          ஆ. வெள்ளி நாணயம்                 இ. செப்பு நாணயம்          ஈ. தகர நாணயம்

64.  கபீர் தாஸ் இயற்றிய பாடல்கள்  எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?

அ. கவிதைகள்               ஆ. குறள்கள்                 இ. பாடல்கள்                  ஈ.தோஹே

65.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகில் உள்ள இடங்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் __________

அ. ரிக்ளா         ஆ. தாகுயூத் – இ- ஹிந்த்           இ. மதுரா விஜயம்           ஈ. இராஜதரங்கிணி

 

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post