ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எதிர் நோக்கியுள்ள மாணவர்களுக்கான பதிவு இது. இந்த பதிவில் கல்வியாண்டு 2021 - 2022 ஆண்டிற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை அனைத்து பாடங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான குறைக்கப்பட்ட பாடத்திற்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு, இரண்டு மதிப்பெண் வினாக்கள் தொகுப்பு, சிறு வினாக்கள் தொகுப்பு, நெடுவினாக்கள் தொகுப்பு மற்றும் அவற்றிற்கான வினா - விடைகளுடன் கூடிய தொகுப்பு என அனைத்து இந்த ஒரு பதிவில் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வினா - விடை தொகுப்பினை தங்களின் பாடக் குறிப்பேட்டில் எழுதி பயிற்சி பெறவும். ஏன் PDF வடிவத்தில் இவை கொடுக்கப்படவில்லை என்றால், மாணவர்கள் அவற்றை நகல் மட்டும் எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றில் என்ன உள்ளது என்பதனைக் கூட அறிய முடியவில்லை. இதனால் எழுத்து வேலை அவர்களுக்கு குறைந்து விடுவதால், தமிழை பிழையாக எழுத முற்படுகிறார்கள். பெரும்பாலும் மாணவர்கள் தமிழில் அதிகமான எழுத்து பிழை செய்கிறார்கள். அதுவும் இந்த 20 மாத கொராணா ஊரடங்கிற்கு பின் அதிகமான பிழைகள் காணப்படுகிறது. சில மாணவர்களுக்கு எழுத்துகள் கூட மறந்துவிட்டது. நிலைமை இவ்வாறு மிக மோசமாக செல்கிறது. இப்படியே சென்றால் நாளை அனைவரும் தமிழ்மொழியை பிழையோடு தான் எழுதுவார்கள் அது தான் சரி என்று வாதிடவும் செய்வார்கள். எனவே தான் இந்த பதிவுகளில் அப்படியே பார்த்து எழுதும் படி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு பார்த்து எழுதும் போது தட்டச்சுப் பிழையை உடனடியாக சுட்டிக்காட்ட இயலும். இதனால் பிழைகள் களையப்படும்.
மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா - விடைகளில் சிறுவினாக்கள் மற்றும் நெடுவினாக்கள் மெல்ல கற்கும் மாணவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. இதனைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் வரை பெற இயலும். மீத்திற ,நடுத்தர மாணவர்கள் இதிலிருந்து சற்று கூடுதல் தகவல்களை புத்தகத்திலிருந்தோ தங்கள் தமிழாசிரியரிடமிருந்தோ பெற்று அவற்றை படித்து புரிந்துக் கொண்டு நீங்கள் எழுதும் போது மிகவும் அதிக பட்ச மதிப்பெண் பெற இயலும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து பாடத்தின் பின் பக்கம் கொடுக்கப்பட்டுள்ள புத்தக வினாக்கள் மட்டுமே. கூடுதல் வினாக்கள் எவையும் இங்கு கொடுக்கப்படவில்லை என்பதனை நினைவூட்ட விரும்புகிறேன். மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாத்தொகுப்புகளை நீங்கள் வினாவுடன் பார்த்து எழுதும் போது அது நிச்சயம் உங்களுக்கு தேர்வின் சமயம் உதவியாக இருக்கும். மாணவர்கள் தாங்கள் படிக்கும் போது விடைகள் மட்டும் படிக்காது வினாவுடன் சேர்த்து விடையையும் படிக்க வேண்டும். அப்போது தான் தாங்கள் படிக்கும் வினாவும், விடையும் நினைவில் இருக்கும். படிக்கும் போது எழுதிக் கொண்டே படித்தால் பிழைகள் நிச்சயம் களையப்படும். சில மாணவர்கள் வகுப்பில் தேர்வு வைக்கும் போது படித்துவிட்டாயா? எனக் கேட்டால் படித்துவிட்டேன் எனக் கூறுவார்கள். சரி தேர்வு எழுதிக் காட்டுங்கள் என்றுக் கூறினால் இரண்டு மதிப்பெண் வினாக்களில் 6 முதல் 8 பிழைகள் செய்கிறார்கள். இவ்வாறு பிழைக் காணும் போது அந்த வினாவிற்கு உரிய மதிப்பெண் கிடைக்காமல் போய்விடும். மேலும் அந்த வினாவின் விடை பிழையால் பொருத்தமற்றதாக மாறிவிடுகிறது. சரி, இதனை எப்படி களைவது என்றால் " சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் " என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் தினமும் கேள்விகளையும், அதற்கான விடைகளையும் தினந்தோறும் எழுதி எழுதி படித்தால் அவை மனதை விட்டு நீங்காது. அப்படியே நினைவில் இருக்கும். இதனை எத்தனை மாணவர்கள் இன்று செய்கிறார்கள் என்றால் 10% மாணவர்கள் கூட செய்வதில்லை. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட எனக்கு தான் நன்றாகப் படிக்கத் தெரிகிறதே நான் ஏன் இதனை எழுதிப் பார்க்க வேண்டும்?. படித்தால் மட்டும் போதாதா? என தனக்குள் கேட்டுவிட்டு வகுப்பறையில் தேர்வு எழுதும் போது பிழை ஏற்படுகிறது. ஐயா." அவலம் என்ற சொல்லிற்கு என்ன "( ல,ள,ழ கரம் ) இடுவது என தேர்வு சமயத்தில் கேட்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது மாணவர்கள் போதிய அளவு எழுத்துப் பயிற்சி செய்யவில்லை எனத் தெரிகிறது. பள்ளிகளில் ஒப்படைப்புக் கொடுத்தாலும் எத்தனை மாணவர்கள் அதனை சுயமாக எழுதுகிறார்கள். ஒருவரிடம் கொடுத்தோ அல்லது தன் வகுப்பு மாணவன் எழுதியதை அப்படியே எழுதிக் கொடுக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை எழுத்து வேலை என்பது மிகவும் கடினமான பணியாக கருதுகிறார்கள். ஆனால் இந்த இணையத்தில் செலவிடும் நேரம் அதிகமாக உள்ளது. இதனால் பிழைகள், தவறுகள் நேருகின்றன. இவற்றை எல்லாம் களைய வேண்டும் என்பதற்காக தான் இந்த வினாக்கள் தொகுப்பு மற்றும் வினா - விடைகளுக்கான தொகுப்பு PDF வடிவில் கொடுக்கப்படவில்லை.
மாணவர்கள் இந்த தொகுப்பினை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் தொகுப்பினை மாணவர்கள் ஒரு தாளில் தனியே எழுதிக் கொள்ளுங்கள். இதனை தேர்வு சமயத்தில் வைத்து தேர்வு எழுத பயன்படும். பாடக்குறிப்பேட்டில் வினா -விடையுடன் எழுதிக் கொள்ளுங்கள் அப்போது தான் நமக்கு நினைவில் நிற்கும். மேலும் தேர்வு சமயத்தில் படிக்கும் போது வினாத் தொகுப்பினை வைத்துக் கொண்டு அந்த வினாவிற்குரிய விடை நமக்குத் தெரிகிறதா என பரிசோதித்துக் கொள்ளுங்கள். இன்றிலிருந்து அதனை செய்யுங்கள், தேர்வு மே மாதம் தான் வரும். அதற்குள் நீங்கள் உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். தேர்வில் அதிக பட்ச மதிப்பெண்ணை பெற்றிடுங்கள்.
மாணவர்கள் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான இணைய வழித் தேர்வினை எழுதி தங்களின் நினைவுத் திறனை சோதித்துக் கொள்ளுங்கள். இணைய வழி ஒரு மதிப்பெண் வினாக்கள் பாடத்தின் உள் பகுதியிலிருந்து கேட்கப்பட்டுள்ளது. இயல் வாரியாக தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இயலை முழுமையாகப் படித்து இந்த இணைய வழித் தேர்வினை எழுதவும்.
இணைய வழித் தேர்வு எழுத -----------> CLICK HERE
சரி,மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினை பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் பெற தமிழ்விதையின் மனமார்ந்த வாழ்த்துகள்.
ஒரு மதிப்பெண் வினா - விடைகள் தொகுப்பு பெற -----------> CLICK HERE
இரண்டு மதிப்பெண் வினா - விடைகள் தொகுப்பு பெற ( குறு வினா ) -----------> CLICK HERE
மூன்று மதிப்பெண் வினா - விடைகள் தொகுப்பு பெற ( சிறு வினா ) -----------> CLICK HERE
எட்டு மதிப்பெண் வினா - விடைகள் தொகுப்பு பெற ( நெடு வினா ) -----------> CLICK HERE
விரிவானம் வினா - விடைகள் தொகுப்பு பெற -----------> SOON