10TH EIGHT MARK QUESTION AND ANSWER

 

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான நெடு வினாக்கள்

வினாக்கள் தொகுப்பு

இயல் – 1

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்

  வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக..

2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்

  மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

            வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

            விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

            நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

            பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

4. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

5. நாட்டு விழாக்கள்விடுதலைப் போராட்ட வரலாறுநாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்குகுறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

6. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

7. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-

8.  நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                                                                நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.

9. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

10. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

11. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

12. . ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

 

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான சிறு வினாக்கள்

வினா – விடைகள் தொகுப்பு

பத்தாம் வகுப்புதமிழ்

இயல் – 1

1. மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ்

  வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.

 

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

 

2. தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்

  மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

இயல் – 2

1. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல

            வளரும் விழி வண்ணமேவந்து

  விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

            விளைந்த கலை அன்னமே

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

            நடந்த இளந்தென்றலேவளர்

  பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு

            பொலிந்த தமிழ் மன்றமே

  - கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

மோனை நயம்:

            செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

            லர்ந்தும்            லராத

            ளரும்  ண்ணமே

எதுகை நயம்:

            செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

            ர்ந்தும்            ராத

சந்த நயம்:

            இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

            இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

            வண்ணமே

            அன்னமே

முரண் நயம்:

            முரண்பாடாக அமைவது முரண்.

                        மலர்ந்தும் × மலராத

                        விடிந்தும்  × விடியாத

பொருள் நயம்:

            காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது.

இயல் – 6

1. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட.......  இவ்வுரையைத் தொடர்க.

 

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.

Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.

Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.

Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்து பார்ப்பது போல உள்ளது.

Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.

Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசைப் போல இருக்கிறது.

இயல் – 7

1.       நாட்டு விழாக்கள்விடுதலைப் போராட்ட வரலாறுநாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்குகுறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில்மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

 

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

            மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

            சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

            வெள்ளையனே வெளியேறு,உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

            மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம்,இளஞ்செஞ்சிலுவை சங்கம்,NSS,NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவை காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

            நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

 

2. பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

v  இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம்,ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது.

v  யானைகள் மட்டும் பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை.

v  சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.

v  ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை.

v  நீர் அடைக்கப்படிகிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை.

v  மாங்காய்கள் வடுபடுகிறது. மக்கள் வடுபடுவதில்லை.

v   நெற்போர் மட்டுமே இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை.

 

3. சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக:-

 

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

 

4. நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                                                                நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின் நன்றியுரை.

 

மகளிர் நாள் விழா

அறிக்கை

            எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.

மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:

            கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.

தலைமையாசிரியர் வரவேற்பு:

            தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை:

            இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.

Ø  மகளிரின் சிறப்புகள்

Ø  மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்

Ø  சுய உதவிக்குழுக்களின் பங்கு

Ø  மகளிர் கல்வி

போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தது.

ஆசிரியர்களின் வாழ்த்துரை:

            ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.

 மாணவத் தலைவரின் நன்றியுரை:

            மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.

இயல் – 8

1. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.

சேலம்

03-03-2021

அன்புள்ள மாமாவுக்கு,

            நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

                                    நன்றி,வணக்கம். 

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        நாமக்கல்.

 

2. காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

            கவிஞன் யானோர் காலக் கணிதம்

            கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

            புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

            பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

            இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

            இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

            ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

            அவனும் யானுமே அறிந்தவை;அறிக!

-கண்ணதாசன்.

மோனை நயம்:

            செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

            விஞன் ருப்படு

எதுகை நயம்:

            செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

            ருப்படு ருப்பட

சந்த நயம்:

            இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

            இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

            தெய்வம்              செல்வம்

முரண் நயம்:

            முரண்பாடாக அமைவது முரண்.

                        ஆக்கல் × அழித்தல்

 

இயல் – 9

1. கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

Ø  பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது.

Ø  கருணையனை தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழித் தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

Ø   

2. ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

வாசிப்போம்                                          நேசிப்போம்

இதழ் வெளியீடு

இதழ்               :           ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

எழுத்தாளர்       :           ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் )

            இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில் வெளிவரும்.

இப்போது பரபரப்பான விற்பனையில்.....

இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு.

நன்றி

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post