10TH -TAMIL -ADDITIONAL QUESTIONS

 

கூடுதல் வினாக்கள்

குறைக்கப்பட்ட தமிழ் பாடத்திற்கான குறு வினாக்கள்

வினாக்கள் தொகுப்பு

( கூடுதல் வினாக்கள் )

இயல் – 1

1)       தமிழ் பற்றி  க. சச்சிதானந்தன் கூற்று யாது?

2)     பெருங்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?

3)      தமிழ் அன்னையின் சிறப்புகள் யாவை?

4)      தமிழ் மொழிப்பற்றி கால்டுவெல் அவர்களின் கருத்து யாது?

5)      தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை?

6)      தமிழ்த்திரு இரா. இளங்குமரனார் இயற்றிய நூல்கள் யாவை?

7)      தாவரங்களின் இலைவகையைக் குறிக்கும் சொற்கள் யாவை?

8)      தாவரத்தின் காய்ந்த பகுதி எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

9)      பூவின் நிலைகளை குறிப்பிடுக.

10)    தாவரத்தின் நுனி எவ்வாறு வழங்கப்படுகிறது?

11)     தமிழுக்காக இரா. இளங்குமரனார் செய்த அரிய செயல் யாது?

12)   தமிழ்திரு.இரா.இளங்குமரனாரின் தமிழ்ப்பணிகள் யாவை?

13)    தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் பெயர்கள் யாவை?

14)   தாவரத்தின் குலைவகைகளை குறிக்கும் சொற்கள் யாவை?

15)   கெட்டுப்போன காய்க்கும், கனிவகைக்கும் வழங்கும் பெயர்கள் யாவை?

16)    பழத்தோல் வகையின் பெயர்களை பட்டியலிடுக.

17)    தானியங்களுக்கு வழங்கும் பெயர்கள் யாவை?

18)    தாவரத்தின் இளம் பருவத்திற்கான சொற்கள் யாவை?

19)    தாவரத்தின் கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள் யாவை?

20)   சம்பா நெல்வகைகளை பட்டியலிடுக.

21)   தமிழ்மொழி பற்றி கா. அப்பாதுரையார் கருத்து யாது?

22)  தேவநேய பாவாணர் ஆற்றிய பணிகள் யாவை?

23)  ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர் தமிழ் பற்றி வெளியிட்ட செய்தி யாது?

24)  ஒரு பொருள் தரும் பல சொற்களை சிலவற்றைக் கூறுக.

25)  சார்பெழுத்து என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

26)  அளபெடை என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

27)  இசைநிறை அளபெடையை உதாரணத்துடன் விளக்குக.

28)  இலக்கணம் என்றால் என்ன?

29)  இன்னிசை அளபெடையை உதாரணத்துடன் விளக்குக.

30)   ஒற்றளபெடை என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

31)    மொழி என்பது யாது?

32)  மூவகை மொழிகள் யாவை?

33)   சொல் என்பது யாது?

34)   சொல்லின் பண்புகள் யாவை?

35)   தொடர் மொழியை உதாரணத்துடன் விளக்குக.

36)   பொது மொழியை உதாரணத்துடன் விளக்குக.

37)   தொழிற்பெயர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

38)   விகுதிப்பெற்ற தொழிற்பெயர் என்பது யாது?

39)   எதிர்மறை தொழிற்பெயரை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

40)   முதனிலைத் தொழிற்பெயரைச் சான்றுடன் விளக்குக.

41)   முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பது யாது?

42)  வினையாலணையும் பெயரை விளக்குக.

43)   தொழிற்பெயருக்கும்,வினையாலணையும் பெயருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அட்டவணைப்படுத்துக.

44)  காண்,சிரி,படி,தடு வினையடியை விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக.

45)  நடத்தல், பிறத்தல், அறிதல் இவற்றை எதிர்மறை தொழிற்பெயராக மாற்றுக.

 

இயல் -2

46)   பாரதியாரின் பணிகளைக் கூறுக.

47)  பாரதியார் இயற்றிய நூல்கள் யாவை?

48)  சொற்றொடர் என்பது யாது?

49)  தொகை நிலைத் தொடர் என்றால் என்ன?

50)   தொகை நிலைத் தொடர்களின் வகைகள் யாவை?

51)   உருபும்,பயனும் உடன் தொக்கத் தொகையைச் சான்றுடன் விளக்குக.

52)  வினைத்தொகை என்பது யாது? எடுத்துக்காட்டுத் தருக.

53)   பண்புத்தொகையைச் சான்றுடன் விவரி

54)  இரு பெயரொட்டுப் பண்புத்தொகையை சான்றுடன் விவரி

55)  உவமைத் தொகை என்பது யாது? எடுத்துக்காட்டுத் தருக.

56)   உம்மைத் தொகையைச் சான்றுடன் விளக்குக.

57)  அன்மொழித் தொகையை சான்றுடன் விவரி.

 

இயல் – 3

58)  தொகா நிலைத் தொடர் என்றால் என்ன?

59)  தொகா நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

60)   எழுவாய்த் தொடரை விளக்குக.

61)    விளித்தொடர் என்பது யாது?

62)  வினைமுற்றுத் தொடரை சான்றுடன் விவரி.

63)   பெயரெச்சத் தொடர் என்றால் என்ன?

64)   வினையெச்சத்தொடர் எவ்வாறு அமையும்?

65)   வேற்றுமைத் தொடரை விளக்குக.

66)    இடைச் சொல்த் தொடர் என்பது யாது?

67)   உரிச்சொல் தொடர் என்பது யாது?

68)   அடுக்குத் தொடர் என்பது யாது?

69)   கூட்டுநிலை பெயரெச்சம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

 

இயல் – 4

70)   நாலாயிர திவ்விய பிரபந்தம் – நூற் குறிப்பு தருக.

71)    குலசேகர ஆழ்வார் வித்துவக்கோடு இறைவனிடம் வேண்டுவது யாது?

72)  இன்றைய நவீன மருத்துவ முறைகள் பற்றி கூறுக.

73)   இன்றைய நிலையில் எந்தெந்த மருத்துவ முறைகள் உள்ளன?

74)  இரு திணைகள் யாவை?

75)  திணையின் உட்பிரிவு வகைகள் குறித்து எழுதுக.

76)   உயர்திணைக்குரிய பால்பகுப்புகளை அட்டவணைப்படுத்துக.

77)   அஃறிணைக்குரிய பால்பகுப்புகளை அட்டவணைப்படுத்துக.

78)   மூவிடங்கள் யாவை?

79)   மூவிடங்களை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

80)   வழு என்பது யாது?

81)    வழாநிலை என்பது யாது?

82)  வழுவமைதி என்பது யாது?

83)   வழு,வழாநிலைகளைஅட்டவணைக் கொண்டு வேறுப்படுத்திக் காட்டுக.

84)  திணை வழுவமைதியை உதாரணத்துடன் விளக்குக.

85)  பால் வழுவமைதியை உதாரணத்துடன் விளக்குக.

86)   இட வழுவமைதியை உதாரணத்துடன் விளக்குக.

87)   கால வழுவமைதியை உதாரணத்துடன் விளக்குக.

88)  மரபு வழுவமைதியை உதாரணத்துடன் விளக்குக.

89)   கீழ்க்காணும் தொடர்களில் உள்ள வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

a.      அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்

b.      “ இந்த கண்ணன் ஒன்று செய்தானென்றால் அனைவரும் ஏற்பர்” என்று கூறினான்

c.      சிறு வயதில் இந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.

d.      செல்வன் இளவேலன் இந்த சிறு வயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்.

90)   அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றி எழுதுக:-

a.      தந்தை,” மகனே ! நாளை உன்னுடைய் தோழன் அழகனை அழைத்து வா! “ என்று சொன்னார். ( ஆண்பாலை பெண்பாலாக மாற்றி எழுதுக )

b.      அக்கா நேற்று வந்தது. அக்கா புறப்படும் போது அம்மா வழி அனுப்பியது ( வழுவை வழாநிலையாக மாற்றி எழுதுக )

c.      “ இதோ முடித்து விடுவேன் “ என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். ( வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக. )

d.      அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை.( படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக,தன்மையை படர்க்கையாக மாற்றுக.)

e.      குழந்தை அழுகிறான், பார். ( வழுவை வழாநிலையாக மாற்றுக.)

 

இயல் – 5

 

91)    நூல்களை நாடிச் சென்று அறிவு பெற வேண்டும் என்பதனை இலக்கியங்கள் எவ்வாறு உணர்த்துகின்றன?

92)  கல்வியை எவ்வாறு கற்க வேண்டும் என்பதனை நீதிவெண்பா எவ்வாறு விவரிக்கிறது?

93)   சதாவதானம் என்றால் என்ன?

94)  க.ப.செய்கு தம்பி பாவலர் பற்றிய குறிப்பு எழுதுக.

95)  க.ப.செய்கு தம்பி பாவலர் சதாவதானி பட்டம் பெற்ற நிகழ்வினைக் கூறுக.

96)   எதிர்காலத்தில் நீ பயில விரும்பும் கல்வி எது? ஏன்?

97)   மொழியின் வளர்ச்சி குறித்து நன்னூலார் கருதுவது யாது?

98)   வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

99)   அறிவினா என்பதனை எடுத்துக்காட்டு விளக்குக.

100) அறியா வினாவை உதாரணத்துடன் விளக்குக.

101)  ஐய வினா என்பது யாது? உதாரணம் தருக.

102)  கொளல் வினாவிற்கு உதாரணம் தந்து விளக்குக.

103) கொடை வினா என்பது யாது?

104)  ஏவல் வினா என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக.

105)  விடையின் வகைகளை கூறுக.

106)  வெளிப்படை விடைகள் யாவை?

107)  குறிப்பு விடைகள் என்பவை யாவை?

108)  சுட்டு விடை என்பது யாது? உதாரணம் தருக:-

109)  மறை விடை என்பது யாது? உதாரணம் தருக:-

110)   நேர் விடை என்பது யாது? உதாரணம் தருக:-

111)   ஏவல் விடை என்பது யாது? உதாரணம் தருக:-

112)  வினா எதிர் வினாதல் விடை என்பது யாது? உதாரணம் தருக:-

113)   உற்றது உரைத்தல் விடை என்பது யாது? உதாரணம் தருக:-

114)  உறுவது கூறல் விடை என்பது யாது? உதாரணம் தருக:-

115)  இனமொழி விடை என்பது யாது? உதாரணம் தருக:-

116)   பொருள்கோள் என்றால் என்ன?

117)   பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

118)  ஆற்றுநீர் பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

119)   நிரல்நிறை பொருள்கோள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

120)  முறை நிரல்நிறை பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

121)  எதிர் நிரல்நிறை பொருள்கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

122)    கொண்டுக் கூட்டு பொருள் கோளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

123) வினா வகையையும், விடை வகையையும் சுட்டுக:- 

            a.      “ காமராசர் நகர் எங்கே இருக்கிறது? “ இந்த வழியாக செல்லுங்கள் “ – என்று விடையளிப்பது. 

            b.      “ எனக்கு எழுதி தருகிறாயா?” என்ற வினாவுக்கு “ எனக்கு யார் எழுதி தருவார்கள் ?” என்று விடையளிப்பது.

இயல் – 6

 

124)  “ கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் “ – என பாரதியார் பெருமைப்பட காரணம் யாது?

125)   ஆறு எவ்வாறு இயற்கையின் ஓவியமாக விரிகிறது என கம்பர் கூறுகிறார்?

126) கோசல நாட்டின் சிறப்புக் குறித்து கம்பன் கூறுவது யாது?

127)    இராமனின் மாநிற மேனியை கம்பன் எவ்வாறெல்லாம் விவரிக்கிறார்?

128)     சந்த இன்பம் குறித்து பாரதியார் யாது கூறுகிறார்?

129)    வேடன் வருத்தப்பட காரணம் யாது?

130)  கும்பகருணனை என்னக் கூறி எழுப்புகிறார்கள்?

131)   கம்பராமாயணம் – குறிப்பு வரைக.

132) கம்பர் – பற்றி குறிப்பு வரைக.

133)  கம்பருக்கு வழங்கப்படும் பட்டப்பெயர்கள் யாவை?

134)  முதற்பொருள் என்பது யாது?

135)  நிலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

136)  ஐவகை நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

137)  அகத்திணைகள் யாவை?

138)  அகத்திணை என்றால் என்ன?

139)  அன்பின் ஐந்திணைகள் யாவை?

140)  பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?

141)  பெரும் பொழுது என்பது யாது?

142)  பெரும் பொழுதின் வகைகள் யாவை?

143)  சிறு பொழுது என்பது யாது?

144)  சிறு பொழுதின் வகைகள் யாவை?

145)  எற்பாடு – என்பது என்ன?

146) ஐவகை நிலங்களுக்கான பொழுதுகளை அட்டவணைப்படுத்துக.

147) கருப்பொருள் என்றால் என்ன?

இயல் – 7

148) 1906 ஆம் ஆண்டு மிகவும் சிறப்புடைய ஆண்டாக கருதப்படக் காரணம் யாது?

149) ஞானப்பிரகாசனம் எப்போது சிவஞானியாக மாறினார்?

150)  மா.பொ.சி. இளமையில் பயின்ற பாடங்கள் எவை?

151)  ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் யாவை?

152)   மா.பொ.சி எப்போது எதற்காக சிறையிலிடப்பட்டார்?

153)  1942 ஆகஸ்ட் 8 வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் என கருத காரணம் யாது?

154)   சிலப்பதிகாரம் குறித்து மா.பொ.சியின் கருத்து யாது?

155)   மார்ஷல் நேசமணி குறித்து எழுதுக.

156) கடல் கடந்த தமிழ் வணிகம் குறித்து கிடைத்த அரிய கையெழுத்து அரிச்சுவடிக் கூறும் செய்தி யாது?

157) மா.பொ.சி – குறிப்பு வரைக.

158) கல் இலக்கியம் என்பது யாது?

159) இரண்டாம் இராச ராச சோழன் பெற்ற பட்டங்கள் யாவை?

160)  மெய்க்கீர்த்தி வழியே அறியப்படும் இராச இராச சோழனின் ஆட்சி சிறப்பு சிலவற்றை கூறுக.

161)   காருகர்,பாசவர்,மண்ணீட்டாளர்,துன்னகாரர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

162)குழலிலும்,யாழிலும் காணப்படும் ஏழு இசைகள் யாவை?

163)  உரைபாட்டு மடை என்பது யாது?

164) சிலப்பதிகாரம் – நூற் குறிப்பு தருக.

165) இளங்கோவடிகள் – பற்றி குறிப்பு தருக.

166)  புறத்திணை என்பது யாது?

167)  புறத்திணை வகைகள் யாவை?

168)  வெட்சித் திணை என்றால் என்ன?

169)  கரந்தைத் திணை என்பது யாது?

170)  ஆநிரை பற்றிய திணைகள் யாவை?

171)   வஞ்சித் திணை என்பது யாது?

172)   காஞ்சி திணை என்பது யாது?

173)  போர் பற்றிய திணைகள் யாவை?

174) நொச்சித் திணை என்பது யாது?

175) உழிஞைத் திணை என்பது யாது?

176)  மதில் பற்றிய திணைகள் யாவை?

177) வாகைத் திணை என்பது யாது?

178) பாடாண் திணை என்பது யாது?

179) தும்பைத் திணை பற்றிக் கூறுக.

180)  பொதுவியல் திணை என்பது யாது?

181)  கைக்கிளை பற்றிக் கூறுக.

182)  பெருந்திணை பற்றிக் கூறுக.

இயல் – 8

183)  சங்க காலத்தில் மானிட அறம் எவ்வாறு இருந்தது?

184) அறநெறி காலம் என்பது யாது?

185) சங்க கால அறம் குறித்து திறனாய்வாளர் ஆர்னால்டு அவர்களின் கருத்து யாது?

186)  சங்க கால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணி சேரி முடமோசியார் யாது கூறுகிறார்?

187) சங்க காலத்தில் மன்னர்களுடைய அறத்தின் குறியீடுகள் யாவை?

188) குற்றங்களுக்கான தண்டனை எவ்வாறு வழங்க வேண்டும் என ஊன் பொதி பசுங்குடையார் கூறுகிறார்?

189) மதுரைக் காஞ்சியும், மாங்குடி மருதனாரும் அமைச்சர்கள் பற்றி கூறிய செய்திகள் யாவை?

190)  போர் அறம் பற்றி புறப்பாடல் கூறுவது யாது?

191)   வள்ளல்கள் எவ்வாறெல்லாம் போற்றப்பட்டனர்?

192)   பெருஞ்சாத்தனை நக்கீரர் எவ்வாறு போற்றுகிறார்?

193)  சேரலாதன் இயல்பு குணம் பற்றி நச்செள்ளையார் கூறுவது யாது?

194) அதியன் குறித்து ஔவையார் கூற்று யாது?

195) ஈதல் குறித்து கலித்தொகை கூறுவது யாது?

196)  சீன நாட்டு தாவோவியம் உதவி குறித்து கூறுவது யாது?

197) வாய்மை பேசும் நா -வை இலக்கியங்கள் எவ்வாறு வகைப்படுத்துகின்றன?

198) நாக்கு ஓர் அதிசய திறவுகோல் என்பது குறித்து கூறுக.

199) ஜென் தத்துவம் எவ்வாறு உருவானது?

200)  போதி தர்மர் குறித்து எழுதுக.

201)  கவிஞன் என்பவன் யார்?

202)  கவிஞர் கண்ணதாசன் குறித்து எழுதுக.

203)   யாப்பின் உறுப்புகள் யாவை?

204)    நால்வகை பாக்கள் யாவை?

205)   பாக்களுக்குரிய நால்வகை ஓசைகள் யாவை?

206)   செப்பலோசை குறித்து எழுதுக.

207)  அகவலோசை குறித்து எழுதுக.

208)   துள்ளலோசை குறித்து எழுதுக.

209)   தூங்கலோசை குறித்து எழுதுக.

210)   வெண்பாவின் வகைகள் யாவை?

211)  ஆசிரியப்பாவின் வகைகள் யாவை?

212)  வெண்பாவின் பொது இலக்கணம் பற்றிக் கூறுக.

213) ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் பற்றிக் கூறுக.

214)  பாவோசையை புலவர் குழந்தை எவ்வாறு வகைப்படுத்துகிறார்?

இயல் – 9

215)  எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

216) அசோகமித்திரன் ஜெயகாந்தன் குறித்து கூறிய கருத்துகள் யாவை?

217) ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு செய்த நூல்கள் யாவை?

218)  ஜெயகாந்தன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் சிலவற்றைக் கூறுக.

219)  ஜெயகாந்தன் எழுதிய புதினங்கள் சிலவற்றைக் கூறுக.

220) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பற்றி ஜெயகாந்தன் எழுதிய கவிதை வரிகள் எழுதுக.

221)    இயேசு கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?

222)   இஸ்மத் சன்னியாசி என்ற பட்டம் பெற்றவர் யார்?

223)  இஸ்மத் சன்னியாசி பட்டத்தின் பொருள் யாது?

224)   இஸ்மத் சன்னியாசி என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது? வழங்கப்பட காரணம் யாது?

225)  தேம்பாவணி – நூற் குறிப்பு தருக.

226)   வீரமா முனிவர் – பற்றி குறிப்பு தருக.

227)   வீரமா முனிவர் எழுதிய நூல்கள் யாவை?

228)   தற்குறிப்பேற்ற அணி – விளக்குக.

229)   தீவக அணி என்றால் என்ன?

230)   தீவக அணியின் வகைகள் யாவை?

231)    நிரல் நிறை அணியை விளக்குக.

232)   தன்மையணியை விளக்குக.

233)    தன்மை அணியின் வகைகள் யாவை?

 

 குறிப்பு : 

இந்த வினாக்கள் - PDF வழங்கப்படவில்லை. மாணவர்கள் வினாக்களைப் பார்த்து எழுதிக் கொள்ளவும்.

 

 

 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post