THIRAN-EVALUATION TEST-QUESTION PAPER-3-2026

 

திறன் மதிப்பீடுத் தேர்வு – 2026

தமிழ்

THIRAN ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு :                                                                                     மதிப்பெண் : 25

மாதம் :                                                                                            காலம் : 40 நிமிடங்கள்

1. குறிப்பைப் படித்து சரியான சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.                              2 × 1 = 2

அ) மழைக்காலத்தில் வானில் தோன்றும் வண்ணமயமான வளைவு. ( வானவில்/ மழை )

ஆ) இரவில் வானத்தில் தோன்றும் அழகான பொருள்.( சூரியன் / நிலவு )

2. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து தொடரை நிறைவு செய்க.                              2 × 1 = 2

அ) வானில் __________ பறக்கிறது.      (மீன் / பறவை / பூனை)

ஆ) தோட்டத்தில் அழகான __________ மலர்ந்தது.    (பூக்கள் / கற்கள் / புத்தகம்)

3. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைப் பயன்படுத்தி முழுமையான தொடரை எழுதுக..       2×1=2

அ) சிறுவன் – பந்து – விளையாடுதல்  

ஆ) சிறுமி – ஓவியம் – வரைதல்

4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-                                                5×2=10

ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, மீனா சாலையோரத்தில் ஒரு சிறுவன் தன் புத்தகப் பையைத் தூக்க முடியாமல் சிரமப்படுவதைக் கண்டாள். அவனிடம் சென்று உதவி செய்யலாமா என்று கேட்டாள். சிறுவனும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். மீனா அவனுடைய புத்தகப் பையைச் சிறிது தூரம் தூக்கிச் சென்றாள். பின்னர் இருவரும் நண்பர்களாகினர். வீட்டிற்குச் சென்ற மீனா, தான் செய்த உதவியைத் தன் தாயிடம் கூறினாள். “சிறிய உதவியாக இருந்தாலும், பிறருக்கு மகிழ்ச்சி தருவது நல்ல பண்பு” என்று தாய் பாராட்டினார்.

அ) மீனா சாலையோரத்தில் யாரைக் கண்டாள்?

ஆ) சிறுவன் ஏன் சிரமப்பட்டான்?

இ) மீனா சிறுவனுக்கு எவ்வாறு உதவினாள்?

ஈ) மீனா நடந்த செய்தியை யாரிடம் கூறினாள்?

          உ) தாய் எவ்வாறு பாராட்டினார்?

5. விடுகதைக்கு விடைக் காண்க.                                                                  2×2=4

          1.  நான் இரவில் வானத்தில் தோன்றுவேன் ; நான் ஒளி தருவேன்.                   

2. எனக்கு இறக்கைகள் உள்ளன; நான் வானில் பறப்பேன்.

6. படித்தல்                                                                                  மதிப்பெண் : 5

அ) சூரியன் காலையில் உதிக்கிறது.

ஆ) சிறுவர்கள் மகிழ்ச்சியாகப் பாடினர்.

( ஒவ்வொரு தொடருக்கும் 1 மதிப்பெண் )

அ) அருவி    ஆ) வண்ணத்துப்பூச்சி

இ) நண்பர்கள்  ஈ) மிதிவண்டி       உ) நிலவு  ஊ) இனிப்பு (ஒவ்வொரு சொல்லுக்கும் ½ மதிப்பெண் )

15 விநாடிகளுக்குப் பின் தோன்றும் DOWNLOAD என்றப் பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

📚

இளந்தமிழ் - திறன் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post