ஏழாம் வகுப்பு - இரண்டாம் பருவம்
தமிழ்
பருவம் : 2 இயல் : 1
கல்வி அழியாச்செல்வம்
மனப்பாடப்பாடல்
வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற்
கேடில்லை
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சைமற்று அல்ல பிற - சமணமுனிவர்
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச்
சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் _____
அ) வீடு ஆ)
கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
2. கல்வியைப் போல் _____ செல்லாத செல்வம் வேறில்லை.
அ)
விலையில்லாத ஆ) கேடில்லாத
இ) உயர்வில்லாத
ஈ) தவறில்லாத
3. ‘வாய்த்தீயின்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __
அ) வாய்த்து + ஈயீன்
ஆ) வாய் + தீயின்
இ) வாய்த்து +தீயின் ஈ) வாய் + ஈயீன்
4. ‘கேடில்லை ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___
அ) கேடி +
இல்லை ஆ) கே +இல்லை
இ) கேள்வி +
இல்லை ஈ) கேடு + இல்லை
5. எவன் + ஒருவன் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)
எவன்ஒருவன் ஆ) எவன்னொருவன்
இ) எவனொருவன்
ஈ) ஏன்னொருவன்
குறுவினா
1. கல்விச் செல்வத்தின்
இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக.
Ø பிறரால் களவாடப்படாது
Ø கொடுத்தாலும் குறையாது.
Ø அரசனாலும் கவர முடியாது.
சிறுவினா
1. கல்விச் செல்வம்
குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Ø பொருள் போல் வைத்திருப்பினும்
பிறரால் கொள்ளப்படாது.
Ø ஒருவருக்கு வாய்க்கும்படி
கொடுத்தாலும் குறையாது.
Ø அரசனாலும் கவர முடியாது.
Ø ஒருவர் தம் குழந்தைகளுக்கு
சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வி,
சிந்தனை வினா
1. ‘கல்விச் செல்வம் அழியாத
செல்வம் எனப்படுவது ஏன்?’
– சிந்தித்து
எழுதுக.
Ø பொருள் போல் வைத்திருப்பினும்
பிறரால் கொள்ளப்படாது.
Ø ஒருவருக்கு வாய்க்கும்படி
கொடுத்தாலும் குறையாது.
Ø அரசனாலும் கவர முடியாது.
Ø ஒருவர் தம் குழந்தைகளுக்கு
சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் கல்வி,
இதனால்
கல்விச் செல்வம் அழியாத செல்வமாக உள்ளது.
தேயிலைத்
தோட்டப் பாட்டு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. மக்களுக்கு வருமானம்
கொடுத்து அவர்களைக் காப்பாற்றியது___
அ) பற்றுவரவு ஆ) சிக்கனம்
இ) கைத்தொழில் ஈ) கப்பல்
2. முற்காலத்தில் இந்திய
மக்கள் துன்பப்பட்டதற்குக் காரணம் __ இல்லாமை
அ) விளையாட்டு ஆ) கல்வி இ) கலைகள் ஈ)
முயற்சி
3. நாடெங்கும் என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) நா + டெங்கும் ஆ) நாடு + எங்கும்
இ) நா +எங்கும் ஈ) நாடு + எங்கும்
4. குறை + எனவே என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_
அ) குறையெனவே ஆ) குறைஎனவே
இ) குறையனவே ஈ) குறைவெனவே
குறுவினா
இந்திய நாடு எவற்றில் சிறந்து
விளங்கியது?
அரிய சேமிப்புப் போல் அமைந்த செல்வங்கள்
நிறையப் பெற்றுச் சிறந்து விளங்கியது இந்திய நாடு.
சிறுவினா
1. மக்கள் விலங்குகளைப்
போல வாழக் காரணம் என்ன?
அந்தியர்கள், நாம் ஏமாந்திருந்த நேரம்
பார்த்து, நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம் மக்களை விலங்குகளைப் போல வாழச் செய்தனர்.
2. மக்கள் குறையில்லாமல்
வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?
Ø உயர்வான கல்வியைக் கற்க
வேண்டும்.
Ø ஊரில் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
சிந்தனை
வினா
1. கூலித்தொழிலாளர்களின்
வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?
Ø நியாயமான ஊதியம் வழங்க வேண்டும்.
Ø வேலைவாய்ப்பும், வேலைப்
பாதுகாப்பும் ஏற்படுத்த வேண்டும்.
Ø அவர்களின் குழந்தைகளுக்கு
நல்ல கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்.
Ø மருத்துவ வசதிகள் மற்றும்
காப்பீடு வழங்க வேண்டும்.
வாழ்விக்கும்
கல்வி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. காலத்தின் அருமையைக்
கூறும் திருக்குறள் அதிகாரம் ______
அ) கல்வி ஆ) காலம் அறிதல்
இ)
வினையறிதல் ஈ) மடியின்மை
2. கல்வியில்லாத நாடு ________ வீடு.
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ)
கதவில்லாத ஈ)
வாசலில்லாத
3. ‘பள்ளித் தலமனைத்தும் கோயில்
செய்குவோம்’ என்று பாடியவர் _
அ)
திருக்குறளார் ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
4. ‘உயர்வடைவோம்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) உயர் +
வடைவோம் ஆ) உயர் +
அடைவோம்
இ) உயர்வு +
வடைவோம் ஈ) உயர்வு + அடைவோம்
5. இவை + எல்லாம் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______
அ)
இவைஎல்லாம் ஆ) இவையெல்லாம்
இ)
இதுயெல்லாம் ஈ)
இவயெல்லாம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
1. செல்வம் - கல்விச்செல்வம் என்றும் அழியாதது.
2. இளமைப்பருவம் – கல்வி பயிலுவதற்கு ஏற்ற
பருவம் இளமைப்பருவம்
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து
படிக்க வேண்டும்.
குறுவினா
1. மனிதப் பிறவிக்கும் பிற
உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
|
மனித பிறவி |
பிற உயிரினங்கள் |
|
Ø எதிர்காலம் பற்றிக் கூறமுடியாது. Ø அருமையான பிறவி |
Ø எதிர்காலம் பற்றிக் கூற முடியும். |
2. கல்வி அறிவு இல்லாதவர்கள்
பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
கல்வியறிவு இல்லாதவர்களை விலங்கு என்று
கூறுகிறார்.
3. நூல்களை எவ்வாறு படிக்க
வேண்டும்?
படிக்க வேண்டிய
நூல்களை நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.
சிறுவினா
1. கல்வியே அழியாத செல்வம்
என்பதை விளக்குக.
Ø மரம், பணம், அணிகலன் இவையெல்லாம்
அழியக் கூடியது.
Ø நாம் கற்றக் கல்வி என்றுமே அழிவில்லாதது.
Ø கேடில் விழுச்செல்வம் கல்வி
ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
2. கல்வியையும் விளக்கையும்
திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Ø விளக்கு : இருளாக இருக்கும்
இடத்தை ஒளிமையமாக மாற்றும்.
Ø ஒருவன் கற்ற கல்வியைப் பலருக்கும்
அளிக்க வேண்டும்.
Ø பலருக்கும் ஒளி தருவது தான்
கல்வி.
Ø கல்வி இல்லாத நாடு விளக்கில்லாத
வீடு.
சிந்தனை வினா
1. நல்ல நூலின் இயல்புகளாக
நீங்கள் கருதுவன யாவை?
Ø மையப் பொருள் தெளிவாக அமைய
வேண்டும்.
Ø உண்மைக்கு மாறான கருத்துகள்
இருக்கக் கூடாது.
Ø புரியும் வண்ணம் சொற்கள்
எழுதப்பட்டிருக்க வேண்டும்.
Ø எளிமை, தெளிவு என அமைய வேண்டும்.
Ø ஆழ்ந்த சிந்தனையை உருவாக்க
வேண்டும்.
பள்ளி
மறுதிறப்பு
1. மதிவாணன் பள்ளிக்குச்
செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.
Ø மதிவாணன் கோடைவிடுமுறையில்
அக்கா வீடு, அத்தை வீடு சென்று பொழுது கழித்தான்,
Ø நண்பன் கவின், மதிவாணனிடம்,
“ வா, பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்க
பணம் சம்பாதிக்கலாம் என அழைத்தான்.
Ø மதிவாணனுக்கு வாழ்க்கை முழுவதும்
தொழிலாளியாக இருக்க வேண்டுமா எனச் சிந்தித்தான்.
Ø படிக்கிற வயதில் வேலையா?
அப்துல் கலாம், அம்பேத்கர் விளம்பரப் பலகையைக் கண்டான்.
Ø இவர்களைப் போல நாமும் நன்றாகப்
படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என ஆழ்ந்து சிந்தித்தான்,
Ø மதிவாணன் பேருந்து நிலையத்தில்
நின்று இருந்த போது, கல்வியறிவு இல்லாத முதியவர் அங்கு வந்த நின்ற பேருந்து நல்லூர்
போகுமா எனக் கேட்டார்.
Ø பேருந்து கூட்டத்தில் ஒரு
சிறுவன் முகத்தைத் திருப்பினான்.
Ø ஒரு சிறுவன் இதுக் கூட படிக்கத்
தெரியாதா என்றான், மற்றவர்கள் அனைவரும் சிரித்தனர்.
Ø மதிவாணன் அப்பெரியவரிடம்
நல்லூர் பேருந்து வந்தால் கூறுகிறேன் எனக் கூறினான்.
Ø முதியவரின் அவமானம் கண்டு
கல்வி அறிவு இல்லையெனில் நாமும் அவமானப்பட வேண்டியது தான் என எண்ணி வேலைக்குப் போவதை
விடுத்து பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்தான்.
இலக்கியவகைச் சொற்கள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. எல்லார்க்கும் எளிதில் பொருள்
விளங்கும் சொல் ________
அ) இயற்சொல்
ஆ) திரிசொல்
இ) திசைச்
சொல் ஈ) வடசொல்
2. பலபொருள் தரும் ஒருசொல்
என்பது ___________
அ)
இயற்சொல் ஆ) திரிசொல்
இ) திசைச்
சொல் ஈ) வடசொல்
3. வடமொழி என்று
அழைக்கப்படும் மொழி ___________
அ) மலையாளம்
ஆ) கன்னடம்
இ) சமஸ்கிருதம்
ஈ) தெலுங்கு
பொருத்துக.
|
1. இயற்சொல் – பெற்றம் 2. திரிசொல் - இரத்தம் 3. திசைச் சொல் - அழுவம் 4. வடசொல் - சோறு |
விடை 1. இயற்சொல் –சோறு 2. திரிசொல் - அழுவம்
3. திசைச் சொல்- பெற்றம் 4. வடசொல் - இரத்தம் |
குறுவினா
1. இயற்சொல்லின் நான்கு
வகைகள் யாவை?
Ø பெயர் இயற்சொல்
Ø வினை இயற்சொல்
Ø இடை இயற்சொல்
Ø உரி இயற்சொல்
2. குங்குமம், கமலம் என்பன எவ்வகை
வடசொற்கள்?
குங்குமம் – தற்பவம்
கமலம் - தற்சமம்
3. இலக்கிய வகைச் சொற்கள்
எத்தனை வகைப்படும்?
அவை
யாவை?
இலக்கிய வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்.
|
Ø இயற்சொல் |
Ø திசைச்சொல் |
|
Ø திரிசொல் |
Ø வடசொல் |
4. திரிசொல்லின் வகைகள்
குறித்து விளக்குக.
Ø கற்றோருக்கு மட்டுமே விளங்குபவை
Ø ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
o
வங்கம்,
அம்பி,நாவாய் – கப்பல்
Ø பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
o
இதழ்
– பூவின் இதழ், உதடு, கண்இமை, பனையேடு, நாளிதழ்
5. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச்
சொற்கள்?
விளக்குக
Ø பண்டிகை ,
கேணி – திசைச்சொல்.
o வடமொழி தவிர
பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள்.
மொழியை ஆள்வோம்
கீழ்க்காணும் சொற்களை அறுவகைப்
பெயர்களாக வகைப்படுத்துக.
நல்லூர்
, வடை , கேட்டல், முகம் , அன்னம், செம்மை, காலை,
வருதல் , தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது,
ஐந்து
மணி , விளையாட்டு,
புதன்.
|
பொருள் |
இடம் |
காலம் |
சினை |
குணம் |
தொழில் |
|
பாரதிதாசன் வடை அன்னம் |
நல்லூர் பள்ளி சோலை |
காலை ஐந்து மணி புதன் |
முகம் தோகை இறக்கை |
செம்மை பெரியது |
கேட்டல் வருதல் |
பின்வரும்
தொடர்களில் பொருத்தமான இடங்களில் ‘ ஆல் ‘ என்னும் உருபைச் சேர்த்து எழுதுக:-
1. கல்லணை
கரிகாலன் கட்டப்பட்டது.
கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது.
2. அறிஞர்
அண்ணா தமது பேச்சுவன்மை மக்களைக் கவர்ந்தார்.
அறிஞர் அண்ணா தமது பேச்சுவன்மையால்
மக்களைக் கவர்ந்தார்.
3. திருக்குறள்
குறள் வெண்பா என்னும் பாவகை ஆன நூல்.
திருக்குறள் குறள் வெண்பா என்னும் பாவகையால்
ஆன நூல்.
4. மற்றவர்களுக்கு
என் முடிந்த உதவிகளைச் செய்வேன்,
மற்றவர்களுக்கு என்னால் முடிந்த
உதவிகளைச் செய்வேன்,
5. அவர் களிமண்
பானை வனைந்தார்.
அவர் களிமண்ணால் பானை வனைந்தார்.
கடிதம் எழுதுக.
உங்கள்
பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புதல்
ஊர்ப் பொதுமக்கள்,
வளையசெட்டிப்பட்டி,
சேலம் – 637102.
பெறுதல்
நூலக ஆணையர்,
பொது நூலகத் துறை,
சென்னை – 600001.
ஐயா,
பொருள்
:- எங்கள்
பகுதியில் நூலகம் அமைத்து தர வேண்டுதல் – சார்பு.
வணக்கம். எங்கள் ஊர் கோரணம்பட்டியில்
500 குடும்பங்களுக்கு மேல் வாழ்கிறோம். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், போட்டித்
தேர்வுக்கு படிப்போர், புத்தக ஆர்வலர்கள் என
பலர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை அமைத்துத் தர
வேண்டுகிறோம்.
நன்றி இப்படிக்கு,
ஊர்
பொதுமக்கள்.
உறைமேல் முகவரி
பெறுதல்
நூலக ஆணையர்,
பொது நூலகத் துறை,
சென்னை – 600001.
மொழியோடு விளையாடு
கீழே உள்ள
குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.
1. காலையில்
பள்ளி மணி - அடிக்கும்
2. திரைப்படங்களில்
விலங்குகள் நடிக்கும் காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்
3. கதிரவன்
காலையில் கிழக்கே உதிக்கும்
4. நாள் தோறும் செய்தித்தாள் படிக்கும்
வழக்கம் இருக்க வேண்டும்.
ஓர் எழுத்துச் சொற்களால்
நிரப்புக.
1. ஆ புல்லை
மேயும் 4. ஈ பறக்கும்.
2. தீ சுடும் 5. பூ மணம் வீசும்.
3. நா பேசும்
பின் வரும் எழுத்துகளுக்குப்
பொருள் எழுதுக.
எ.கா : தா – கொடு
தீ - நெருப்பு வை
- வைக்கோல்
பா - பாட்டு மை - அஞ்சனம்
தை – துணி தை, தை மாதம்
பின் வரும் சொற்களை இரு
பொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.
எ.கா : ஆறு
1. ஈ ஆறு கால்களை
உடையது.
2. தஞ்சாவூரில் காவிரி ஆறு
பாய்கிறது
விளக்கு : 1. பாடப்பொருளை விளக்கு
2. அறியாமையை அகற்றுவது கல்வி எனும் விளக்கு
படி : 1. அதிகாலையில் படி
2. பேருந்தில் படியில்
நின்று பயணம் செய்யக் கூடாது.
சொல் : 1. இனிய சொல் பேசுவது
நன்மை பயக்கும்.
2. பெரியோர் சொல் படி நடக்க வேண்டும்.
கல் : 1. கல் கொண்டு எறியக் கூடாது.
2. இளமையில் கல்
மாலை : 1. பூக்களால் தொடுப்பது மலர் மாலை.
கதிரவன் மறையும் மாலையில்
மறையும்.
இடி: 1. பெரியோர் குற்றங்களை
இடித்துரைப்பர்.
2. வானில் கருமேகங்கள் திரண்டால் இடி
இடிக்கும்.
படிப்போம் பயன்படுத்துவோம்.
1.
SUMMER VACATION - கோடைவிடுமுறை
2.
CHILD LABOUR - குழந்தை தொழிலாளர்
3. DEGREE - பட்டம்
4. LITERACY - கல்வியறிவு
5. MORAL – நீதி
6.
UNIFORM – சீருடை
7. GUIDANCE – வழிகாட்டுதல்
8.
DISCIPLINE – ஒழுக்கம்
