அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். மார்ச் மாதம் முதல் தேர்வுக்குரிய மாதம். 10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கவிருக்கிறது. அந்த பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளவும். பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உயர் வகுப்புகளில் சேர வேண்டும். 2023- 24 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பதிவில் நீங்கள் காணவிருப்பது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முதன்முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அவர்கள் பயம் இல்லாமலும், பதற்றம் அடையாமலும் இருக்க வேண்டும். பொதுத் தேர்வு என்பது வேறு ஒரு மையத்தில் வேறு ஒரு ஆசிரியர் கண்காணிப்பில் எழுத உள்ளோம். மற்றபடி நீங்கள் படித்த புத்தங்களிலிருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இடமும் ஆசிரியரும் தான் புதிது. வினாத்தாளும், வினாக்களும், அதற்கான விடைகளும் உங்களுக்கு பழக்கப்பட்டது தான். அதை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அதாவது பத்தாம் வகுப்புக்கு இது வரை 6 அரசு பொதுத் தேர்வுகள் நடந்துள்ளன. அந்த 6 அரசு பொதுத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட வினாக்களை உங்கள் தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் மதிப்பெண் வாரியாக வினா வங்கியாக இங்கு வழங்கியுள்ளோம். இதனை நீங்கள் நகல் எடுத்து அதனை பயிற்சியாக மேற்கொள்ளவும். நிச்சயம் இந்த வினாத்தாளிலிருந்து உங்களுக்கு 40 முதல் 60 சதவீதம் வரை வினாக்கள் பொதுத் தேர்வில் இடம் பெறக் கூடும். ஆகவே நம்முடைய இந்த வலைதளத்தில் பதிவிடப்படும் வளங்களை சேகரித்து பயிற்சி பெறுங்கள். வெற்றி நிச்சயம்; இது சத்தியம்.
செப்டம்பர் 2020 முதல் புதிய பாடத்தில் அரசு பொதுத் தேர்வு நடந்துள்ளது. அதனை நாங்கள் மதிப்பெண் வாரியாக தொகுத்து பயிற்சி பெற pdf வடிவமாக வழங்கியுள்ளோம். உங்களின் தொடர் ஆதரவு எங்களின் ஊக்கமாகும். கீழ் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண் வாரியாக இணைப்புகளை சொடுக்கி உங்களுக்கு தேவையான pdf ஐ பதிவிறக்கம் செய்துக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கவும். மேலும் இந்த ஒரு மதிப்பெண் வினாக்களை உங்களின் hi -tech lab உதவியுடன் இணையம் வழியாக இணையத் தேர்வு எழுத வைக்கலாம். அதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளேன். பயிற்சி கொடுத்து மாணவர்களை அடுத்த நிலைக்கு உயர்த்த உங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.
அரசு பொது தேர்வு வினாத்தாள்கள்
செப்டம்பர் 2020 முதல் ஜூன் - 2023 வரை
ஆறு வினாத்தாள்கள் ம்திப்பெண் வாரியான
பயிற்சி கற்றல் வளங்கள்
- பகுதி - 1 - ஒரு மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு - click here
- பகுதி - 1 - ஒரு மதிப்பெண் - இணையத் தேர்வு - click here
- பகுதி - 2 - இரண்டு மதிப்பெண் வினாக்கள் - பிரிவு - 1 - click here
- பகுதி - 2 - இரண்டு மதிப்பெண் வினாக்கள் - பிரிவு - 2 - click here
- பகுதி - 3 - மூன்று மதிப்பெண் வினாக்கள் - பிரிவு - 1 - click here
- பகுதி - 3 - மூன்று மதிப்பெண் வினாக்கள் - பிரிவு - 2 - click here
- பகுதி - 3 - மூன்று மதிப்பெண் வினாக்கள் - பிரிவு - 3 - click here
- பகுதி - 4 - ஐந்து மதிப்பெண் வினாக்கள் - click here
- பகுதி - 5 - எட்டு மதிப்பெண் வினாக்கள் - click here
Tags:
CLASS10