பருவம் : 2 இயல் : 2
கலை, அழகியல் பூத்தொடுத்தல்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. போர் இல்லாத உலகில்
________ நிலவும்
அ) பதற்றம் ஆ) சாந்தம் இ)
சோர்வு ஈ) வெறுப்பு
2. முடிச்சிட்டால் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) முடிச்சி + இடல் ஆ) முடிச்சி + சிட்டால்
இ) முடிச்சு + இட்டால் ஈ) முடிச்சு + இடல்
3. நிற்பது + அறிந்தும். என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும்
சொல்.
அ) நிற்பதறிந்தும்
ஆ) நிற்பது அறிந்தும்
இ) நிற்பறிந்தும் ஈ) நிற்பதறிந்தோம்
குறுவினா
1. மலர்கள் எப்போது தரையில்
நழுவும்?
தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.
2. பூவின் சிரிப்பைப் பற்றிக்
கவிஞர் உமா மகேஸ்வரி கூறுவது யாது?
வாசலில் மரணம் நிற்பதறிந்தும் வருந்தாமல்
சிரிக்கிறது என பூவின் சிரிப்பைப் பற்றி கவிஞர் கூறுகிறார்.
சிந்தனை வினா
1. பூக்களைக் கொய்யும் போது உங்கள் உள்ளத்தில்
தோன்றும் எண்ணங்களை எழுதுக.?
Ø அழகாக இருக்கும் இந்த பூவைக்
கொய்து சாமிக்கு மாலையாக்குவேன்.
Ø வாசனை பூக்களைக் கொய்து
தலையில் சூடிக் கொள்ளத் தொடுப்பேன்.
Ø மருத்துவ குணம் கொண்டப்
பூக்களை பக்குவப்படுத்தி விற்பனை செய்வேன்.
பேசும் ஓவியங்கள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. குகை ஓவியங்களில் வணணம்
தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.
அ) மண்துகள் ஆ) நீர் வண்ணம்
இ) எண்ணெய்
வண்ணம் ஈ) கரிக்கோல்
2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு
வரையப்படும் ஓவியம் ___
அ) குகை ஓவியம் ஆ)
சுவர் ஓவியம்
இ) கண்ணாடி
ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்
3. ‘ கோட்டோவியம் ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__
அ) கோடு
+ ஓவியம் ஆ) கோட்டு + ஓவியம்
இ) கோட்
+ டோவியம் ஈ) கோடி + ஓவியம்
4. ‘ செப்பேடு ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___
அ) செப்பு
+ ஈடு ஆ) செப்பு + ஓடு
இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடு
5. எழுத்து + ஆணி என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) எழுத்து
ஆணி ஆ) எழுத்தாணி
இ) எழுத்துதாணி ஈ) எழுதாணி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர்
பாரதியார்
2. கலம்காரி ஓவியம் என்று
அழைக்கப்படுவது துணி ஓவியம்
3. மன்னர்களின் ஆணைகளையும்
அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் மீது பொறித்து பாதுகாத்தனர்.
குறுவினா.
1. ஓவியங்களின் வகைகள் யாவை?
குகை ஓவியம், துணி ஓவியம், சுவர் ஓவியம், ஓலைச்சுவடி
ஓவியம் ,செப்பேட்டு ஓவியம், தந்த ஓவியம், கண்ணாடி
ஓவியம்,
தாள் ஓவியம், கருத்துப்பட ஓவியம், நவீன ஓவியம்.
2. குகை ஓவியங்களில் இருந்து
நாம் அறியும் செய்திகள் யாவை?
பழந்தமிழரின் வாழ்க்கை முறைகள்.
3. தாள் ஓவியங்களை எவற்றைக்
கொண்டு வரைவர்?
கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம்
4. சுவர் ஓவியங்கள் காணப்படும்
இடங்களைக் கூறுக.
சித்தன்ன வாசல், தஞ்சைப் பெரியகோயில்
5. செப்பேட்டு ஓவியங்களில்
காணப்படும் காட்சிகள் யாவை?
நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள்,
விலங்குகள், குறியீடுகள்
சிறுவினா
1. கேலிச்சித்திரம் என்றால்
என்ன?
Ø மனித உருவங்களை விந்தையான
தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவது கேலிச்சித்திரம்.
2. ஓலைச் சுவடி ஓவியங்கள்
குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
Ø எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும்,
வண்ணப் பூச்சு ஓவியமாக வரையப்படும்.
Ø புராணம் மற்றும் இதிகாச
காட்சிகளாகவே இவை இருக்கும்.
Ø தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில்
இவை உள்ளன.
சிந்தனை வினா
1. தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது
ஏன்?
Ø கேரளாவில் யானைகள் மிகுதியாக
காணப்படுகின்றன.
Ø வயது முதிர்ந்த யானைகளும்,
தந்தங்களும் அதிக அளவில் காணப்படுகிறது.
தமிழ் ஒளிர் இடங்கள்
1. நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக
இருந்தால், வள்ளுவர் கோட்டம் / திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு
எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?
Ø சுற்றுலா வழிகாட்டியாக வள்ளுவர்
கோட்டத்தின் சிறப்புகளைக் கூறுவேன்.
Ø கோட்ம்பாக்கத்தில் வள்ளுவர்
கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
Ø இதன் கட்டுமானப் பணியைப்
பற்றிக் கூறுவேன்.
Ø திருவாரூர் தேர் போன்ற வடிவில்
அமைக்கப்பட்டு அதனை இரண்டு யானைகள் இழுத்து செல்வது போன்று கருங்கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Ø வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சிகள்
நடத்தும் இடங்களைப் பற்றிக் கூறுவேன்.
Ø வள்ளுவர் கோட்டத்தில்
1330 செதுக்கப்பட்டுள்ளதை விளக்குவேன்.
Ø அறத்துப் பால் – கருநிறப்
பளிங்கு கல் ; பொருட்பால் – வெண்ணிற பளிங்கு கல்; இன்பத்துப் பால் – செந்நிறப் பளிங்கு
கல் என அழகாக செதுக்கப்பட்டுள்ளதை விளக்குவேன்.
தொழிற் பெயர்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற
தொழிற்பெயர் எது?
அ) எழுது ஆ) பாடு இ) படித்தல் ஈ)
நடி
2. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
அ) ஊறு ஆ)
நடு இ) விழு ஈ) எழுதல்
பொருத்துக.
1. ஒட்டம் - முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடி -
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
3. சூடு -
விகுதி பெற்ற தொழிற்பெயர்
விடை
1. ஒட்டம் - விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி - முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு -
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
சிறுவினா
1. வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப்
பெயர்கள்?
விளக்கம்
தருக.
Ø விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்
Ø தல் என்ற விகுதி பெற்று
வருகிறது.
2. முதனிலை திரிந்த
தொழிற்பெயர் என்றால் என்ன?
சான்று
தருக
Ø முதனிலை திரிவதால் உருவாகும்
பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
Ø எ.கா : உணவின் சூடு
குறையவில்லை
o
சுடு
என்னும் பகுதியின் முதலெழுத்து நீண்டு சூடு திரிந்து தொழிற்பெயராக உள்ளன.
மொழியை ஆள்வோம்
கவிதையை நிறைவு செய்க
வானும் நிலவும் அழகு
வயலும் வரப்பும்
அழகு
பூவும் வண்டும் அழகு
தமிழும் இனிமையும் அழகு.
படம் உணர்த்தும் கருத்தை
ஐந்து வரிகளில் எழுதுக.
![]() |
Ø இயற்கையான விளையாட்டுகள்
இன்பம் கொடுக்கிறது.
Ø மரத்தில் கிளியொன்று உள்ளது.
Ø ஆற்றங்கரை ஓரம் இதமான காற்று
வீசும்.
Ø கைப்பேசி விளையாட்டுகளை
தவிர்த்து நண்பர்களுடன் விளையாடுவது ஆனந்தமாக உள்ளது.
Ø பட்டாம் பூச்சிகளின் சிறகசைப்பு
மென்மையை காட்டுகிறது.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை
ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் அமைக்க.
எ.கா: ஓவியக்கலை
ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும்
கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.
இசை : இசை முத்தமிழில் ஒன்று
மனதை மயக்குவது இசை
கட்டடக் கலை :
கட்டடக் கலையில் தமிழர்கள் சிறந்து
விளங்கினர்.
சிறந்த கலைகளில் ஒன்று கட்டடக்
கலை.
வண்ணங்கள் :
வண்ணங்கள் கண்ணைக் கவர்கிறது.
வானவில்லில் உள்ளது ஏழு
வண்ணங்கள்
இடைச்சொல் ‘ கு ‘ சேர்த்துத்
தொடரை மீண்டும் எழுதுக.
( எ.கா ) வீடு சென்றான்
– வீடு +கு+ சென்றான்= வீட்டிற்குச் சென்றான்
1. மாடு புல் கொடுத்தார்
மாடு + கு
+புல்+ கொடுத்தார் = மாட்டிற்குப் புல் கொடுத்தார்
2. பாட்டு பொருள் எழுது
பாட்டு + கு + பொருள்+எழுது
= பாட்டுக்குப் பொருள் எழுது..
3. செடி பாய்ந்த நீர்
செடி +கு +பாய்ந்த +நீர்
= செடிக்குப் பாய்ந்த நீர்
4. முல்லை தேர் தந்தான்
பாரி
முல்லை + கு + தேர் +தந்தான்
+ பாரி= முல்லைக்குத் தேர் தந்தான் பாரி.
5. சுவர் சாந்து பூசினாள்.
சுவர் + கு + சாந்து + பூசினாள்
= சுவருக்குச் சாந்து பூசினாள்.
கீழ்க்காணும் குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதுக.
எங்கள்
ஊர்
முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம்
– தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை
முன்னுரை
எங்கள் ஊரான சேலம் மாநகரத்தைப் பற்றி
நாம் இக்கட்டுரையில் காணலாம்.
அமைவிடம் :
தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள
மாநகரம் சேலம். தமிழகத்தின் ஐந்தாவது பெரிய
நகரம். தமிழகத்தின் வட மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம் :
சேலம் என்றால் மலைகள் சூழ்ந்த இடம்
என்பது பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப் போக்கில்
மருவியது எனவும் கூறுவர்.
தொழில்கள்
பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம்,
எஃகு, ஜவுளித் தொழில், விவசாயம் என பலவிதமான தொழில்கள் நடைபெற்று வருகிறது.
சிறப்பு
மிகு இடங்கள்:
காலங்கி சித்தர் கோவில், கந்தசுவாமி
கோவில், மூக்கனேரி,
கோட்டை மாரியம்மன்
கோவில், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, ஏற்காடு, மேட்டூர் அணை என சிறப்பு மிக்க இடங்கள்
பல உள்ளன.
திருவிழாக்கள்:
பல்வேறு கோவில்களில் பல்வேறு விதமான
பண்டிகைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஆடி மாதம் நடைபெறும் கோட்டை மாரியம்மன் பண்டிகை
மிகவும் பிரசித்திப் பெற்றது.
மக்கள்
ஒற்றுமை:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு சமயத்தினை
சேர்ந்த மக்களும், வேறு மதத்தை சார்ந்த மக்களும் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றனர்.
மற்ற மதத்தினரை மதிக்கும் மாண்பு அறிந்து சேலம் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து
வருகின்றனர்.
முடிவுரை
:
கூடி பல தொழில் செய்வோம் என்பதனைப்
பின்பற்றி சேலம் மக்கள் அனைவரும் அனைத்து சமயத்தாரையும், மதத்தினரையும் போற்றி பாதுகாத்து
நடந்துக் கொள்கின்றனர்.
மொழியோடு விளையாடு
பின்வரும் பத்திகளைப்
படித்து,
கேட்கப்பட்டுள்ள
வினாக்களுக்கு விடையளிக்க
சாலை
விபத்துகளைத் தவிர்க்கச் சாலை விதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட
வேண்டும். சாலையில் வாகனங்களை இடப் புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில்
விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக் கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி
சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு
வலது பக்க ம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின்
மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால்
முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள் கோடு
வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப்
பயன்படுத்தக் கூடாது.
ஒருவழிப்பாதை
என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே
வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக் கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின்
உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும்
நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை
ஒளிரச் செய்ய வேண்டும்.
வினாக்கள்
1. சாலையின் எந்தப் பக்கமாக
வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
இடப் புறம்
2. விட்டுவிட்டுப் போடப்படும்
வெள்ளைக் கோடு எதனைக் குறிக்கும்?
போக்குவரத்துக்காகச் சாலை சரி
சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.
3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை
முந்திச் செல்ல அனுமதி இல்லை?
இரட்டை
மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச்
சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
4. ஒருவழிப் பாதை எனப்படுவது
யாது?
ஒருவழிப்பாதை என்று
குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச்
செலுத்த வேண்டும்
5. வாகனங்களைப் பின்
தொடர்வதற்கான முறையைக் கூறு
வாகனத்தைப்
பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட
அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
கட்டங்களை
நிரப்புக.
|
வேர்ச்சொல் |
இறந்த காலம் |
நிகழ்காலம் |
எதிர்காலம் |
|
நட |
நடந்தான் |
நடக்கின்றான் |
நடப்பான் |
|
எழுது |
எழுதினான் |
எழுதுகின்றான் |
எழுதுவான் |
|
ஓடு |
ஓடினான் |
ஓடுகின்றான் |
ஓடுவான் |
|
சிரி |
சிரித்தாள் |
சிரிக்கின்றாள் |
சிரிப்பாள் |
|
பிடி |
பிடித்தார்கள் |
பிடிக்கின்றார்கள் |
பிடிப்பார்கள் |
|
இறங்கு |
இறங்கினான் |
இறங்குகின்றான் |
இறங்குவான் |
குறிப்புகளைக்
கொண்டு ‘ மா ‘ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களைக் கண்டறிந்து கட்டங்களை நிரப்புக.
1. முக்கணிகளுள்
ஒன்று - மா
2. கதிரவன்
மறையும் நேரம் – மாலை
3. பெருந்திரளான
மக்கள் கூடும் நிகழ்வு – மாநாடு
4. எழுத்துகளை
ஒலிக்க ஆகும் கால அளவு – மாத்திரை
5. அளவில் பெரிய நகரம் - மாநகரம்
படிப்போம்;
பயன்படுத்துவோம்!
1. aesthetics - அழகியல்
2. cartoon - கருத்துப்படம்
3. modern art- நவீன ஓவியம்
4. brush - தூரிகை
5. cave paintings - குகை
ஓவியங்கள்
![]() |
பருவம் : 2 இயல்
: 2
வாழ்வியல் திருக்குறள்
மனப்பாடக் குறள்கள்
1. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி
மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
2. எண்ணித் துணிக கருமம்
துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
3. இடும்பைக்கு இடும்பை
படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ
தவர் - திருவள்ளுவர்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. _____________ தீமை உண்டாகும்.
அ)
செய்யத்தகுந்த செயல்களைச் செய்வதால்
ஆ)
செய்யத்தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
இ) செய்யத்தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்
ஈ) எதுவும் செய்யாமல்
இருப்பதால்
2. தன்குடியைச் சிறந்த
குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.
அ) சோம்பல்
ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்
3. ‘எழுத்தென்ப’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) எழுத்து
+ தென்ப ஆ) எழுத்து + என்ப
இ) எழுத்து
+ இன்ப ஈ) எழுத் + தென்ப
4 . ’கரைந்துண்ணும்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) கரைந்து
+ இன்னும் ஆ) கரை + துண்ணும்
இ) கரைந்து + உண்ணும் ஈ) கரை +
உண்ணும்
5. கற்றனைத்து+ ஊறும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______.
அ) கற்றனைத்தூறும்
ஆ) கற்றனை தூறும்
இ)
கற்றனைத்தீறும் ஈ)
கற்றனைத்தோறும்
பொருத்துக.
1. கற்கும் முறை – செயல்
2. உயிர்க்குக் கண்கள் - காகம்
3. விழுச்செல்வம் - பிழையில்லாமல்
கற்றல்
4. எண்ணித் துணிக - எண்ணும் எழுத்தும்
5. கரவா கரைந்துண்ணும் - கல்வி
விடை
1. கற்கும் முறை – பிழையில்லாமல்
கற்றல்
2. உயிர்க்குக் கண்கள் - எண்ணும் எழுத்தும்
3. விழுச்செல்வம் - கல்வி
4. எண்ணித் துணிக - செயல்
5. கரவா கரைந்துண்ணும் - காகம்
குறுவினா
1. ‘நன்மை செய்வதிலும் தீமை
உண்டாகும்’ எப்போது?
ஒருவருடைய பண்பை அறிந்து அவருக்கு நன்மை
செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.
2. தீமை உண்டாக்கும் இரண்டு
செயல்களை எழுதுக.
Ø செய்யதகாத செயல்களை செய்வது.
Ø செய்யத்தக்க செயல்களைச்
செய்யாமல் விடுவது.
3. துன்பத்திற்குத் துன்பம்
உண்டாக்குபவர் யார்?
துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர்,
அந்த துன்பத்திற்கே துன்பம் உண்டாக்குபவர்.
4. எடுத்துக்காட்டு உவமை
அணி என்றால் என்ன?
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும்
வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.


