THIRAN-EVALUATION TEST-QUESTION PAPER-4-2026

 

திறன் மதிப்பீடுத் தேர்வு – 2026

தமிழ்

THIRAN ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு :                                                                                     மதிப்பெண் : 25

மாதம் :                                                                                           காலம் : 40 நிமிடங்கள்

1. சொல்லைப் பிரித்து எழுதுக.                                                                                   2 × 1 = 2

அ) மிதிவண்டி = __________________ + __________________

ஆ) பூந்தோட்டம் = __________________ + __________________

2. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.                                                          2 × 1 = 2

அ)  பால் + __________     (குடித்தான் / பறந்தான் / ஓடினான்)

ஆ) கடலில் + __________   (மீன் / மயில் / குதிரை)

3. ஒரே பொருளைக் கொண்ட சொல்லைக் கண்டுபிடிக்க.                                            2×1=2

அ)  மகிழ்ச்சி   (துன்பம் / சந்தோஷம் / கோபம்)

ஆ)  வீடு   (இல்லம் / காடு / கடல்)

4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-                                                5×2=10

விக்னேஷ் தினமும் மாலை நேரத்தில் சிறிது நேரம் புத்தகம் படிப்பான். ஒரு நாள் அவன் தன் பள்ளி நூலகத்திற்குச் சென்றான். அங்கு பலவகையான கதைப் புத்தகங்களும் அறிவியல் நூல்களும் இருந்தன. அவன் தனக்குப் பிடித்த ஒரு விலங்குகள் பற்றிய புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினான். புத்தகத்தில் பல புதிய தகவல்களை அறிந்துகொண்டான். மறுநாள் அந்தத் தகவல்களைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டான். ஆசிரியர், “நல்ல புத்தகங்கள் நமக்கு புதிய அறிவையும் நல்ல எண்ணங்களையும் தருகின்றன” என்று கூறினார். அதனால் மாணவர்கள் தினமும் சிறிது நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும்.

அ) விக்னேஷ் தினமும் எப்போது புத்தகம் படிப்பான்?

ஆ) விக்னேஷ் எங்கு சென்றான்?

இ) விக்னேஷ் எந்த வகையான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தான்?

ஈ) புத்தகத்தைப் படித்ததால் விக்னேஷ் என்ன பெற்றுக்கொண்டான்?

 உ) மாணவர்கள் ஏன் புத்தகம் படிக்க வேண்டும்?

5. தவறைக் கண்டுபிடித்து திருத்துக                                                              2×2=4

          1.  பறவை வானில் நீந்துகிறது. தவறான சொல் :                      சரியான சொல்:     

2. மீன் கடலில் நடக்கிறது.       தவறான சொல் :                      சரியான சொல்:

6. படித்தல்                                                                                  மதிப்பெண் : 5

அ) தென்றல் மெதுவாக வீசியது.

ஆ) மாணவர்கள் கதை கேட்டனர்.

( ஒவ்வொரு தொடருக்கும் 1 மதிப்பெண் )

அ) சிட்டுக்குருவி    ஆ) மலைப்பாதை

இ) கடற்கரை      ஈ) தேனீ       உ) மயிலிறகு  ஊ) விண்மீன்

 (ஒவ்வொரு சொல்லுக்கும் ½ மதிப்பெண் )

 

15 விநாடிகளுக்குப் பின் தோன்றும் DOWNLOAD என்றப் பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


📚

இளந்தமிழ் - திறன் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post