THIRAN-EVALUATION TEST-QUESTION PAPER-2-2026

 

திறன் மதிப்பீடுத் தேர்வு-2 – 2026

தமிழ்

THIRAN ( Targeted Help for Improving Remediation & Academic Nurturing )

வகுப்பு :                                                                                      மதிப்பெண் : 25

மாதம் :                                                                                            காலம் : 40 நிமிடங்கள்

1. அகர வரிசைப்படுத்துக :-                                                                                            2×1=2

           மாடு   கல்   பூ   சங்கு   நாய்     மரம்   ஆடு    தாமரை        குடம்            பல்

2. சொற்களை முறைப்படுத்தித் தொடர் அமைக்க            .                                          2×1=2

         அ) சென்றான்  பள்ளிக்கு  குமார்  இன்று

          ஆ) சாப்பிடுகிறாள்  மாம்பழம்  ரம்யா  இனிப்பான

3. படத்திற்குப் பொருத்தமானத் தொடரைத் தேர்க.                                                  2×1=2

அ) சிறுவன் மரம் நடுகிறான்

ஆ) சிறுவன் மரத்தில் விளையாடுகிறான்

இ) சிறுவன் செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறான்.

அ) சிறுமி பூந்தோட்டத்தில் பூக்களைப் பறிக்கிறாள்

ஆ) சிறுமி செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறாள்.

இ) சிறுமி பூமாலைத் தொடுக்கிறாள்

4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க:-                                                5×2=10

ஒரு நாள் அருண் தனது பள்ளிக்குச் சென்றான். பள்ளியின் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளைகள் உடைந்து கிடந்தன. அதன் அருகில் குப்பைகளும் கிடந்தன. இதைக் கண்ட அருண், தன் நண்பர்களுடன் சேர்ந்து குப்பைகளை அகற்றினான். பின்னர் ஆசிரியரிடம் இதைப் பற்றிக் கூறினான். ஆசிரியர் மாணவர்களைப் பாராட்டினார். மரங்கள் நமக்கு நிழலையும் தூய காற்றையும் தருகின்றன. எனவே, நாம் மரங்களைப் பாதுகாத்து, மேலும் பல மரங்களை வளர்க்க வேண்டும் என்று ஆசிரியர் கூறினார்.

அ) அருண் பள்ளிக்குச் சென்றபோது என்னக் கண்டான்?

ஆ) அருண் தனது நண்பர்களுடன் சேர்ந்து என்ன செய்தான்?

இ) மரங்கள் நமக்கு தரும் இரண்டு நன்மைகள் யாவை?

ஈ) ஆசிரியர் மாணவர்களை ஏன் பாராட்டினார்?

உ) மரங்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?

5. விடைக்கேற்ற வினா அமைக்க.                                                                 2×2=4

          1. குமார் காலையில் பூங்காவிற்குச் சென்றான்.                            

2. லதா தன் தம்பிக்கு ஒரு புத்தகம் கொடுத்தாள்.

6. படித்தல்                                                                                             மதிப்பெண் : 5

அ) கண்ணகி மதுரைக்குச் சென்றாள்.

ஆ) வள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

( ஒவ்வொரு தொடருக்கும் 1 மதிப்பெண் )

அ) மலை     ஆ) கிளி       இ) தோட்டம்
ஈ) மழை       உ) விளக்கு  ஊ) நண்பன் (ஒவ்வொரு சொல்லுக்கும் ½ மதிப்பெண் )

15 விநாடிகளுக்குப் பின் தோன்றும் DOWNLOAD என்றப் பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

📚

இளந்தமிழ் - திறன் வினாத்தாள் PDF பதிவிறக்கம்

PDF கோப்பை பாதுகாப்பாகப் பதிவிறக்கம் செய்ய 15 விநாடிகள் காத்திருக்கவும்.

15

Preparing your download...

⬇ DOWNLOAD PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post