7ஆம் வகுப்பு தமிழ் – முதல் பருவம்-2026
தமிழ் – புத்தக மதிப்பீடு வினாக்கள்
இயல் 1 – அமுதத் தமிழ்
1. எங்கள் தமிழ்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் ______.
அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்
- ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது ______.
அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும் ஈ) குர + ஆகும்
- ‘வான் + ஒலி’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் ______.
அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானலி
குறுவினா
- தமிழ்மொழியின் பண்புகளாக
நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
- தமிழ்மொழியைக் கற்றவரின்
இயல்புகளை எழுதுக.
சிறுவினா
- ‘எங்கள் தமிழ்’ என்னும் பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும்
கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
சிந்தனை வினா
- கவிஞர், தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?
மதிப்பீடு
- “எங்கள் தமிழ்” பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
- கொடுக்கப்பட்டுள்ள நாமக்கல்
கவிஞரின் பாடலைப் படித்துச் சுவைக்க.
2. ஒன்றல்ல இரண்டல்ல
மதிப்பீடு
கீழ்க்கண்ட செயல்பாடுகள்
- தமிழுக்குக் கொடை கொடுத்த
வள்ளல்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுக.
- தமிழில் உள்ள பல்வேறு
இலக்கிய வடிவங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- படைவெற்றி கொண்டவனைப்
பாடும் இலக்கியம் ______.
அ) கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி
- வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்
- ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
______.
அ) இரண்டு + டல்ல ஆ) இரண் + அல்ல
இ) இரண்டு + இல்லை ஈ) இரண்டு + அல்ல
- ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது ______.
அ) தந்து + உதவும் ஆ) தா + உதவும்
இ) தந்து + தவும் ஈ) தந்த + உதவும்
- ‘ஒப்புமை + இல்லாத’ என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் ______.
அ) ஒப்புமைஇல்லாத ஆ) ஒப்பில்லாத இ) ஒப்புமையில்லாத ஈ) ஒப்புஇல்லாத
குறுவினா
- தமிழ்நாட்டின் இயற்கை
வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
- ‘ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள்
குறித்த செய்திகளை எழுதுக.
சிறுவினா
- தமிழுக்கு வளம் சேர்க்கும்
இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
சிந்தனை வினா
- தமிழில் அற இலக்கியங்கள்
மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
3. பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- மொழியின் முதல்நிலை கேட்கல், ______ ஆகியனவாகும்.
அ) படித்தல் ஆ) பேசுதல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
- ஒலியின் வரிவடிவம் ______.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல்
ஈ) பாட்டு
- தமிழின் கிளைமொழிகளுள்
ஒன்று ______.
அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
- பேச்சுமொழியை ______ வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய ஆ) உலக இ) நூல்
ஈ) மொழி
சரி / தவறு
- மொழி காலத்திற்கு ஏற்ப
மாறுகிறது.
- எழுத்துமொழி காலம் கடந்தும்
நிலைத்து நிற்கிறது.
- பேசுபவரின் கருத்திற்கு
ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
- எழுத்துமொழியில்
உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
- பேச்சுமொழி சிறப்பாக அமையக்
குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.
வகைப்படுத்துக
- பேச்சுமொழி, எழுத்துமொழி பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும்
ஊடகங்களை வகைப்படுத்துக:
வானொலி தொலைக்காட்சி செய்தித்தாள் நூல்கள் திரைப்படம் மின்னஞ்சல்
குறுவினா
- மொழியின் இரு வடிவங்கள்
யாவை?
- பேச்சுமொழி என்றால் என்ன?
- வட்டாரமொழி எனப்படுவது யாது?
சிறுவினா
- பேச்சுமொழிக்கும்
எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளில் நான்கினை விளக்குக.
- கிளைமொழிகள் எவ்வாறு
உருவாகின்றன?
சிந்தனை வினா
- இலக்கியங்கள் காலம்
கடந்தும் அழியாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
4. ஆளுக்கு ஒரு வேலை – பொம்மலாட்டம்
மதிப்பீடு
- உங்கள் பகுதியில் வழங்கி
வரும் சொலவடைகளைத் தொகுத்து வருக.
- பாடப்பகுதியில்
இடம்பெற்றுள்ள சொலவடைகளில் ஏதேனும் ஐந்தினைத் தேர்ந்தெடுத்து, சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
5. குற்றியலுகரம், குற்றியலிகரம்
மதிப்பீடு
- ஒன்று முதல் பத்து வரையுள்ள
எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுக; அவற்றில் குற்றியலுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
- குற்றியலுகை எண்ணுப்
பெயர்களைக் குற்றியலுகை வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
- குற்றியலுகை எண்ணுப்
பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடிக்குக.
- எடுத்துக்காட்டு:
ஒன்று – 1
+ ½ + ½ = 2
- கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகையை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச்
சொற்களைத் திரட்டுக.
கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகை வகையின் அடிப்படையில்
வகைப்படுத்துக:
ஆறு,
எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து.
பொருந்தாத சொற்களை எடுத்தெழுதுக:
- பசு, விடு, ஆறு, கரு
- பாக்கு, பஞ்சு, பாட்டு,
பத்து
- ஆறு, மாசு, பாகு, அது
- அரசு, எய்து, மூழ்கு,
மார்பு
- பண்பு, மஞ்சு, கண்டு,
எஃகு
குறுவினா
- ‘குற்றியலுகரம்’ என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம்
தருக.
- குற்றியலிகரம் என்றால் என்ன?
இயல் 1 – மொழியை ஆள்வோம்
கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக –
“தாய்மொழிப் பற்று”
குறிப்புகள்:
- மொழி பற்றிய விளக்கம்
- தாய்மொழி
- தாய்மொழிப் பற்று
- தாய்மொழிப் பற்று கொண்ட
சான்றோர்
- நமது கடமை
- முடிவுரை
மொழியோடு விளையாடு
- தொகைச் சொற்களை
விரித்து எழுதுக:
- முக்கனி
- முத்தமிழ்
- நாற்றிசை
- ஐந்திணை
- அறுசுவை
- இரு பொருள்
கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக:
- மழலை
பேசும் ______
அழகு.
- இனிமைத்
தமிழ் ______
எமது.
- அன்னை
தந்தையின் கைப்பிடித்துக் குழந்தை ______ பழகும்.
- அறிஞர்
அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்குமொழி ______.
- நீ
அறிந்ததைப் பிறருக்குச் ______.
- எழுத்துகள்
தொடர்ந்து நின்று பொருள் தருவது ______.
- உழவர்கள்
நாற்று ______
வயலுக்குச் செல்வர்.
- குழந்தையை
மெதுவாக ______
என்போம்.
படிப்போம்; பயன்படுத்துவோம்
Media Periodical
Linguistics Puppetry
Phonology Orthography Journalism
Dialogue
இயல் 2 – இயற்கை
காடு
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- வாழை, கன்றை ______.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
- ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது ______.
அ) காடு + தொல்லாம் ஆ) காடு + எல்லாம்
இ) கா + தொல்லாம் ஈ) கான் + எல்லாம்
- ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் ______.
நயம் அறிக
- பாடலில் உள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
குறுவினா
- காட்டுப்பூக்களுக்கு எதனை
உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
- காட்டின் பயன்களாகக் கவிஞர்
சுரதா கூறுவன யாவை?
சிறுவினா
- ‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் சுரதா
கூறுவனவற்றை எழுதுக.
சிந்தனை வினா
- காட்டை இயற்கை விடுதி என்று
கவிஞர் சுரதா கூறக் காரணம் என்ன?
7. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- நாவற்பழத்திற்கு உவமையாகக்
கூறப்படுவது ______.
அ) பச்சை இலை ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
- ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ______.
அ) மண் ஒட்டிய பழங்கள் ஆ) சூடான பழங்கள்
இ) வேகவைத்த பழங்கள் ஈ) சுடப்பட்ட பழங்கள்
- ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ) பெயர + றியா ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா ஈ) பெயர + அறியா
- ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ) மன + மில்லை ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை ஈ) மனம் + இல்லை
- ‘நேற்று + இரவு’ என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல் ______.
அ) நேற்றுஇரவு ஆ) நேற்றிரவு இ) நேற்றுரவு ஈ) நேற்இரவு
குறுவினா
- நாவல் மரம் எத்தனை
தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
- சிறுவர்களுக்கு நாவற்பழம்
கிடைக்க உதவியோர் யாவர்?
சிறுவினா
- நாவல் மரம் பற்றிய
நினைவுகளாகக் கவிஞர் ராஜமார்த்தாண்டன் கூறுவன யாவை?
சிந்தனை வினா
- பெருங்காற்றில் வீழ்ந்த
மரத்தை கவிஞர் ராஜமார்த்தாண்டன் ஏன் பார்க்க விரும்பவில்லை?
8. தமிழரின் கப்பற்கலை
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- தமிழர்கள் சிறிய
நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ______.
அ) கலம் ஆ) வங்கம் இ) நாவாய்
ஈ) ஓடம்
- தொல்காப்பியம் கடற்பயணத்தை ______ வழக்கம் என்று கூறுகிறது.
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
- கப்பலை உரிய திசையில்
திருப்புவதற்குப் பயன்படும் கருவி ______.
அ) சுக்கான் ஆ) நங்கூரம்
இ) கண்ணடை ஈ) சமுக்கு
கோடிட்ட இடங்களை நிரப்புக
- காற்றின் உதவியால்
செலுத்தப்படுபவை ______
கப்பல்கள் எனப்பட்டன.
- கப்பல் ஓரிடத்தில் நிலையாக
நிற்க உதவுவது ______.
- உயரமான கோபுரத்தின்
உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு ___
பொருத்துக
- எரா – திசைகாட்டும் கருவி
- பருமல் – அடிமரம்
- மீகாமன் – கப்பலைச்
செலுத்துபவர்
- காந்த ஊசி – குறுக்கு மரம்
குறுவினா
- தோணி என்னும் சொல்லின்
பெயர்க்காரணத்தைக் கூறுக.
- கப்பல் கட்டும்போது
மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் அல்லது பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?
- கப்பலின் உறுப்புகள்
சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
சிறுவினா
- சிறிய நீர்நிலைகளையும்
கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.
- பண்டைத் தமிழரின் கப்பல்
செலுத்தும் முறை பற்றி எழுதுக.
- கலங்கரை விளக்கம் –
சிறுகுறிப்பு வரைக.
சிந்தனை வினா
- தற்காலத்தில் மக்கள்
வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன்?
9. விலங்குகள் உலகம்
- ஏதேனும் மூன்று
வனவிலங்குகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
10. நால்வகைக் குறுக்கங்கள்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- ‘வெட்கை’ என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும்
மாத்திரை அளவு ______.
அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டு
- மகரக்குறுக்கம் இடம்பெறாத
சொல் ______.
அ) போன்ம் ஆ) மருண்ம் இ) பழம் விழுந்தது ஈ) பணம்
கிடைத்தது
- சொல்லின் முதலில் மட்டுமே
இடம் பெறுவது ______.
அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக் குறுக்கம் ஈ) ஆய்தக் குறுக்கம்
குறுவினா
- ஔகாரம் எப்போது முழுமையாக
ஒலிக்கும்?
- சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய
இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
- மகரக்குறுக்கத்துக்கு
இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
11. இயல் 2 –
திருக்குறள்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- வாய்மை எனப்படுவது ______.
அ) அன்பாகப் பேசுதல் ஆ) தீங்குதராத
சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல் ஈ) சத்தமாகப்
பேசுதல்
- ______
செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்னன் ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன் ஈ)
செல்வந்தன்
- ‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ) பொரு + செல்வம் ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம் ஈ) பொரும் + செல்வம்
- ‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ) யா + எனின் ஆ) யாது + தெனின் இ) யா + தெனின் ஈ)
யாது + எனின்
- ‘தன் + நெஞ்சு’ என்பதனைச் சேர்த்து எழுதுக.
அ) தன்நெஞ்சு ஆ) தன்னெஞ்சு இ) தானெஞ்சு ஈ) தனெஞ்சு
- ‘தீது + உண்டோ’ என்பதனைச் சேர்த்து எழுதுக.
அ) தீதுண்டோ ஆ) தீதுஉண்டோ இ) தீதிண்டோ ஈ) தீயுண்டோ
- ‘கண்நின்று’ எனத் தொடங்கும் குறளில் அமைந்துள்ள
முரண்தொடைக் சொற்கள்
அ) கண்நின்று – முன்னின்று ஆ) கண்நின்று – சொல்லினும்
இ) சொல்லினும் – சொல்லற்க ஈ) கண்அற - சொல்லற்க
குறுவினா
- எப்போது தன் நெஞ்சே தன்னை
வருத்தும்?
- வாழும் நெறி யாது?
- உலகத்தார் உள்ளங்களில்
எல்லாம் இருப்பவன் யார்?
- சொற்பொருள் பின்வருநிலை அணி
எவ்வாறு வரும்?
இயல் 2 – மொழியை ஆள்வோம்
கடிதம் எழுதுக:
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
மொழியோடு விளையாடு
கொடுக்கப்பட்டுள்ள
சொற்களை இணைத்துப் புதிய சொற்களை அமைக்குக:
வாழை தயிர் கூடு திடல் பாட்டு குருவி கொய்யா சோறு பழம் பறவை விளையாட்டு கூட்டம் அவலை போட்டி காய்
- எடுத்துக்காட்டு: வாழை +
காய் = வாழைக்காய்
படிப்போம்; பயன்படுத்துவோம்
Parable Natural Resource
Forestry Conservator of Forest
இயல் 3 – நாடு, சமூகம்
12. விடுதலைத் திருநாள்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- வானில் முழுநிலவு அழகாக ______ அளித்தது.
அ) தயவு ஆ) தரிசனம் இ) துணிவு ஈ) தயக்கம்
- இந்த ______ முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.
அ) வையம் ஆ) வானம் இ) ஆழி
ஈ) கானகம்
- ‘சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ) சீவ + நில்லாமல் ஆ) சீவன் + நில்லாமல்
இ) சீவன் + இல்லாமல் ஈ) சீவ + இல்லாமல்
- ‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ) விலம் + கொடித்து ஆ) விலம் + ஒடித்து
இ) விலன் + ஒடித்து ஈ) விலங்கு + ஒடித்து
- ‘காட்டை + எரித்து’ என்பதனைச் சேர்த்து எழுதுக.
அ) காட்டைஎரித்து ஆ) காட்டையெரித்து
இ) காடுஎரித்து ஈ) காடுயெரித்து
- ‘இதம் + தரும்’ என்பதனைச் சேர்த்து எழுதுக.
அ) இதந்தரும் ஆ) இதம்தரும் இ) இதத்தரும் ஈ) இதைத்தரும்
குறுவினா
- பகத்சிங் கண்ட கனவு யாது?
- இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?
சிறுவினா
- இந்தியத்தாய் எவ்வாறு
காட்சியளிக்கிறாள்?
சிந்தனை வினா
- நாட்டுப்பற்றை வளர்க்கும்
வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?
13. தேசியம் காத்த செம்மல் – பசும்பொன் உ. முத்துராமலிங்கத்
தேவர்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- முத்துராமலிங்கத்தேவர்
முதன்முதலில் உரையாற்றிய இடம் ______.
அ) தூத்துக்குடி ஆ) காரைக்குடி இ) சாயல்குடி ஈ) மன்னார்குடி
- முத்துராமலிங்கத்தேவர்
நடத்திய இதழின் பெயர் ______.
அ) ராஜாஜி ஆ) நேதாஜி இ) காந்திஜி
ஈ) நேருஜி
- ‘தேசியம் காத்த செம்மல்’ என பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டியவர் .
அ) ராஜாஜி ஆ) பெரியார்
இ)
திரு.வி.க.
ஈ) நேதாஜி
குறுவினா
- முத்துராமலிங்கத்தேவரைப்
பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
- முத்துராமலிங்கத்தேவரின்
பேச்சுக்கு வாய்ப்பூட்டுச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கக் காரணம் யாது?
- முத்துராமலிங்கத்தேவர்
பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
சிறுவினா
- நேதாஜியுடன்
முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்பு பற்றி எழுதுக.
- தொழிலாளர் நலனுக்காக
முத்துராமலிங்கத்தேவர் செய்த தொண்டுகள் யாவை?
சிந்தனை வினா
- சிறந்த தலைவருக்குரிய
பண்புகள் எவை என நீங்கள் கருதுகிறீர்கள்?
14. கப்பலோட்டிய
தமிழர் – வ.உ.
சிதம்பரனார்
மதிப்பீடு
- வ.உ. சிதம்பரனாரின் உரையை
வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.
15. ஓரெழுத்து ஒருமொழி,
பகுபதம், பகாப்பதம்
மதிப்பீடு – பகுபதம்
/ பகாப்பதம்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
- நன்னூலின்படி தமிழிலுள்ள
ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ______.
அ) 40 ஆ) 42 இ) 44 ஈ) 46
- ‘எழுதினான்’ என்பது ______.
அ) பெயர்ப் பகுபதம் ஆ) வினைப் பகுபதம்
இ) பெயர்ப்
பகாப்பதம்
ஈ) வினைப் பகாப்பதம்
- பெயர்ப் பகுபதம் ______ வகைப்படும்.
அ) நான்கு ஆ) ஐந்து இ) ஆறு ஈ) ஏழு
- காலத்தைக் காட்டும் பகுபத
உறுப்பு ______.
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
பொருத்துக
- பெயர்ப் பகுபதம் –
வாழ்ந்தான்
- வினைப் பகுபதம் – மன்
- இடைப் பகாப்பதம் – நனி
- உரிப் பகாப்பதம் – பெரியார்
சரியான பகுபத உறுப்பை எழுதுக
‘போவாள் – போ + வ் + ஆள்’
- போ – ______
- வ் – ______
- ஆள் – ______
‘நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்’
- நட – ______
- க் – ______
- கின்று – ______
- ஆன் – ______
பிரித்து எழுதுக
- பார்த்தான்
- பாடுவார்
குறுவினா
- ஓரெழுத்து ஒருமொழி என்றால்
என்ன?
- பதத்தின் இருவகைகள் யாவை?
- பகுபத உறுப்புகள் எத்தனை
வகைப்படும்?
அவை யாவை?
- விகுதி எவற்றைக் காட்டும்?
- பெயர்ப் பகுபதம் எத்தனை
வகைப்படும்?
அவை யாவை?
இயல் 3 – மொழியை ஆள்வோம
பயிற்சிகள்
பின்வரும் தொடர்களில் எழுவாய், பயனிலை, செயப்படுபொருளை எடுத்து எழுதுக.
- வீரர்கள் நாட்டைக்
காத்தனர்.
- பொதுமக்கள்
அந்நியத்துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.
- கொற்கைத் துறைமுகத்தில்
பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.
- திருக்குறளை எழுதியவர் யார்?
- கபிலர் குறிஞ்சிப்பாட்டை
எழுதிய புலவர்.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக. நான் கவிதை எழுதுவேன்.
- கீழ்க்கண்ட
தலைப்பில் கட்டுரை எழுதுக:
“நான் விரும்பும் தலைவர்”
இயல் 3 – மொழியோடு விளையாடு
- இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.
- வீடு
கட்டினான் → வீடு + ஐ + கட்டினான்
→ வீட்டைக் கட்டினான்
- கடல் பார்த்தாள் – ______
- புல் தின்றது – ______
- கதவு தட்டும் ஓசை – ______
- பாடல் பாடினாள் – ______
- அறம் கூறினார் – ______
- அகம் என முடியும் சொற்களை எழுதுக.
- எடுத்துக்காட்டு:
நூலகம்
- இரண்டு சொற்களை
இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
கண் அழகு கண்ணழகு கண்ணுண்டு
மண் உண்டு
விண்
பண்
- கோடிட்ட
இடங்களைத் தமிழ் எண்ணைக் கொண்டு நிரப்புக:
- எனது
வயது ______.
- நான்
படிக்கும் வகுப்பு ______.
- தமிழ்
இலக்கணம் ______
வகைப்படும்.
- திருக்குறளில்
______
அதிகாரங்கள் உள்ளன.
- இந்தியா
______
ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.
இயல் 3 – படிப்போம்; பயன்படுத்துவோம்
Ballad Elocution
Courage Unity
Sacrifice
Slogan Political Genius Equality
