சேலம் மாவட்டம்
ஒன்பதாம் வகுப்பு – முழு ஆண்டுத் தேர்வு - 2025
மொழிப்பாடம் விடைக்குறிப்பு
|
வி.எண் |
விடைக்குறிப்பு |
மதிப்பெண் |
|
பகுதி – 1
15×1=15 |
||
|
1 |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
2 |
ஆ. களர்நிலம் |
1 |
|
3 |
இ. முல்லை |
1 |
|
4 |
ஆ. ஏமாங்கத நாடு |
1 |
|
5 |
ஈ. புலரி |
1 |
|
6 |
அ. மாமல்லபுரம் |
1 |
|
7 |
ஈ. அ,ஆ,இ அனைத்தும் |
1 |
|
8 |
இ.மலையாளம் |
1 |
|
9 |
இ.வளர்க |
1 |
|
10 |
இ.போக்கு |
1 |
|
11 |
இ. எண்ணும்மை |
1 |
|
பாடலைப் படித்து
வினாக்களுக்கு விடையளி |
||
|
12 |
இ.திருத்தக்கத் தேவர் |
1 |
|
13 |
ஆ.தேமாங்கனி - ஏமாங்கதம் |
1 |
|
14 |
ஈ.சீவக சிந்தாமணி |
1 |
|
15 |
அ.புகழ்7 |
1 |
|
பகுதி – 2 / பிரிவு -1
4×2=8 |
||
|
16 |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
|
17 |
தமிழ், மலையாளம், கன்னடம் , துளு ( ஏதேனும் நான்கு) |
2 |
|
18 |
குளம், குட்டை, ஏரி, கிணறு |
2 |
|
19 |
விஜய நகர மன்னர் காலம் |
2 |
|
20 |
கேப்டன் தாசன், ஜானகி, அப்துல் காதர், இராஜாமணி,
சிதம்பரம், லெட்சுமி |
2 |
|
21 |
எனைத்தானும் நல்லவை
கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். |
2 |
|
பகுதி – 2 / பிரிவு -2
5×2=10 |
||
|
22 |
அசை இரண்டு வகைப்படும். 1. நேர் அசை, 2. நிரை அசை |
2 |
|
23 |
கார் அறுத்தான் கார் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்ததால் காலவாகு
பெயர் ஆயிற்று. |
2 |
|
24 |
பூக்கும் – பூ + க் + க் + உம் பூ – பகுதி க் – சந்தி க் – எதிர்கால இடைநிலை உம் – வினைமுற்று விகுதி |
2 |
|
25 |
அ) பெருங்கடல் ஆ) உலகப்போர் |
2 |
|
26 |
அ) சென்றனர் ஆ)
திருத்துவேன் |
2 |
|
27 |
அ) பவளவிழியும் பரிசுக்கு உரியவள் ஆ) குழலிக்கும் பாடத் தெரியும். |
2 |
|
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
மாற்று வினா |
||
|
|
அ) வேறுபடுத்துவது ஆ) புதுப்பித்துக் கொள்ளும் |
2 |
|
28 |
அ) கண்ணன் எவ்வளவு முயன்றும் வெற்றி என்பது
எட்டாக்கனியாக உள்ளது. ஆ) இல்லாத ஒன்றை விரும்புவது ஆகாயத் தாமரை
பறிப்பது போன்றது. |
2 |
|
பகுதி – 3 / பிரிவு -1
2×3=6 |
||
|
29 |
Ø
ஒளவையார் Ø
ஒக்கூர்
மாசாத்தியார் Ø
காவற்பெண்டு Ø
ஆதிமந்தி Ø
பாரி
மகளிர் Ø
நச்செள்ளையார் |
3 |
|
30 |
இந்திய தேசிய இராணுவத்திலிருந்து 45 வீரர்கள் நேதாஜியால்
தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான
சிறப்பு பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப்
பிரிவின் பெயர் தான் டோக்கியோ கேடடஸ். |
1 1 1 |
|
31 |
v காங்கேயம் மாடுகள் v சிவப்பு v ஏறுதழுவுதல் |
3 |
|
பகுதி – 3 / பிரிவு -2
2×3=6 |
||
|
32 |
வானவில்லை ஒப்பிட்டு பெரியபுராணம்
கூறும் செய்தி |
3 |
|
33 |
ஏமாங்கத நாட்டில் ஆயிரங்கணக்கில்
உள்ளவை |
3 |
|
34அ |
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான் றி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்
தினரே |
3 |
|
34ஆ |
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே! |
3 |
|
பகுதி – 3 / பிரிவு -3 2×3=6 |
||||||||||||||||||||||||||
|
35 |
|
3 |
||||||||||||||||||||||||
|
36 |
Ø பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை,
போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன. Ø துணைவினைகள், முதல் வினையைச் சார்ந்து
அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன. Ø பேச்சு மொழியிலேயே துணை வினைகள் ஆதிக்கம்
உள்ளது. |
1 1 1 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
|
பகுதி – 4
5×5=25 |
||
|
38அ |
Ø தமிழ்,
அமுதை விட மேலானது. Ø இனிக்கும்
சுவையான கனியை விட சிறப்பானது Ø முத்தமிழாகவும்
விளங்குகிறது. Ø அறிவுக்கு
தேனாகவும் விளங்குகிறது. Ø தமிழின்
சிறப்பு அறிந்து குறவஞ்சி, பள்ளு என நூல்கள் இயற்றி சிறப்புச் செய்துள்ளனர்
புலவர்கள். Ø தாழிசை,
துறை , விருத்தம் என மூவகை பாவினங்களைக் கொண்டுள்ளது தமிழ்மொழி Ø என்றும்
சிந்தா மணியாய் தமிழ் விளங்குகிறது. |
5 |
|
38ஆ |
ü வாழ்வில்
உயர முயற்சியுடன் செயல்படும்ங்கள் ü முயன்றால்
பூமி ஒன்றும் பாரமில்லை ü குறைபாடுகளை
களைய வாருங்கள். ü முன்னோர்
சொன்னவற்றை எல்லாம் செயல்படுத்திட வாருங்கள் ü துணிந்து
செயல்பட்டால் துன்பம் வராது. ü கடமைகளில்
பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள். ü அறிவை
மறந்த உணர்ச்சி கூடாது. ü இனமும்
மொழியும் காத்திட செயல்படுங்கள். |
5 |
|
39அ |
அனுப்புநர் பெறுநர் விளித்தல், பொருள் கடிதச் செய்தி இப்படிக்கு, |
1 1 1 1 1 |
|
39ஆ |
அனுப்புநர் பெறுநர் விளித்தல், பொருள் கடிதச் செய்தி இப்படிக்கு, உறை மேல் முகவரி |
1 1 1 1 1 |
|
40அ |
காட்சிக்குப் பொருத்தமான கவிதை எழுதி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|
41 |
அஞ்சலக வங்கியில் பணம் செலுத்தும்
படிவம்.அனைத்து தளங்களும் சரியான பதிவு செய்திருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
42அ |
ஒருமுறை புத்தரும், அவருடைய
சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன்
துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன்
காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக
இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப்
பார்த்தனர்.அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று
படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும்
இதைப்போலத்தான், ஏரியை
அழுக்கும், சேறும்
கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம்
அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து
போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து
எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும். |
5 |
|
42ஆ |
என்னை மகிழ்ச் செய்த பணிகள் பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
மாற்று வினா |
||
|
|
மானாமதுரை ஒரு அழகான பேரூர்.
நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த
கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள்
மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின்
இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது. |
5 |
|
பகுதி – 5
3×8=24 |
|||
|
43அ |
முன்னுரை ஏறுதழுவுதல் போற்றப்படக்
காரணங்கள் முடிவுரை முன்னுரை : ஏறுதழுவுதல் முல்லை, மருத நிலங்களில்
கால்கொண்டு தமிழர் தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ளது. ஏறுதழுவுதல்,
தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று
போற்றப்படுவதற்கான காரணங்களை இக்கட்டுரையில் காண்போம். ஏறுதழுதல்
: இளைஞர்களின் வீரத்தைப் பெருமிதப்படுத்தும்
பண்பாட்டு நிகழ்வு ஏறுதழுவுதல். சங்ககாலத் தமிழர்கள் இயற்கையை சார்ந்தும், பிற உயிர்களோடு
இணைந்தும் வாழ்ந்தனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஏறுதழுதலும் ஒன்று. வெளிநாடுகளில்
ஏறுதழுவுதல் : ü ஸ்பெயின்
காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது. ü காளை
கொன்று அடக்குபவனே வீரன் ü வென்றாலும்
தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு. ü இவை
வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது. போற்றப்படக் காரணம்
: ü தமிழகத்தில் ஏறு
தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது. ü நிகழ்வின் தொடக்கத்திலும்
முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர். ü எவரும் அடக்க முடியாத
காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர். ü அன்பையும் வீரத்தையும்
ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப்
போற்றப்படுவர். முடிவுரை : தமிழர்களின் பண்பாட்டுத்
திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையுடையது. வீரவுணர்வை
நினைவூட்டும் ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும்
வலியுறுத்தும் பண்பாட்டு குறியீடு ஆகும். இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது
நம் ஒவ்வொருவரின் கடமையாகும். |
8 |
|
|
43ஆ |
முன்னுரை தூண்கள் இராணுவத்தில் தமிழ்ப்பெண்கள் இரண்டாம் உலகப் போரில் தமிழர் நேதாஜியின் பாராட்டு முடிவுரை முன்னுரை: இந்திய தேசிய இராணுவம் இந்திய
விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தூண்களாகத்
திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் எனில் மிகையாகாது. தூண்கள்: இந்திய தேசிய இராணுவப்படை, பிரித்தானிய அரசை எதிர்த்த போது
தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி,
இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்த்த
பெருமைக்குரிய தமிழர் ‘பசும்பொன் முத்துராமலிங்கதேவர்’ ஆவார். பசும்பொன் அவர்களின் தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு
வியந்த தில்லான் என்பவர், “இந்திய
தேசிய இராணுவத்தின் இதயமும், ஆத்மாவும்
தமிழர்கள் தான்” என்றார். இராணுவத்தில்
தமிழ்ப் பெண்கள்: இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி
பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் டாக்டர் லட்சுமி என்ற
தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள் பெருமளவில் பங்கேற்றார்கள். இதில்
தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். இரண்டாம்
உலகப்போரில் தமிழர்: இரண்டாம் உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக்
கண்டு ஆங்கிலப் பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார். நேதாஜியின்
பாராட்டு: இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும்
செய்த தியாகங்களையும் கண்டு வியந்த நேதாஜி,
“நான் மறுபடியும் பிறந்தால் ஒரு
தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும்”
என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம் நம் தமிழரின் இராணுவப்பணி
அமைந்திருந்தது. முடிவுரை: தாயக நலனுக்காக தம் இன்னுயிரை
ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம் இன்னுயிரைத் தியாகம் செய்த
முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், , நாட்டுப்பற்றையும்,
போற்றுவதோடு, இராணுவ வீரர்களையும்
அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற
சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத சக்திகளைத்
தடுப்பதும் நம் கடமைகளாகும். |
8 |
|
|
44அ |
அன்பும்
கண்டிப்பும் உடைய மனைவி குழந்தைகளுக்குப்
பரிமாறுதல் மனித
நேயம் நாய்
குட்டிகளுக்கும் தாயாகிறாள் முடிவுரை முன்னுரை: தாய்மை வழியே
மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத்
தாயின் வழி புலப்படுத்துகிறார். அன்பும் கண்டிப்பும்
உடைய மனைவி: தூங்கிக்
கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும்
மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல்
உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள். செல்வந்தன்
தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன்
குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கண்களால் இப்படி ஒரு
பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார்.
குழந்தைகளுக்குப் பரிமாறுதல்: குழந்தைகள் அம்மா
வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப்
புரிந்துகொள்கிறாள். சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள்
காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள்.. மனிதநேயம் : அவள்
சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக்
கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான்
மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர்
உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள். நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்: எச்சில்
கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத்
தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு
சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு
குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது முடிவுரை: வறுமையிலும்
அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம்
கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச்
சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார். |
8 |
|
|
44ஆ |
முன்னுரை கடிதச்
செய்தி முடிவுரை முன்னுரை கருத்து பரிமாற்றங்கள் எவ்வாறாக இருப்பினும் உயர்வான
கருத்தும், உயிர்ப்புள்ள மொழியுமே செய்தி அளிப்பவருக்கும் பெறுவருக்குமான உறவுப்
பாலத்தை உறுதியாக இருக்க துணை நிற்பவை கடிதங்கள். மொழியின்
விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள
கடிதச் செய்திகளை இக்கட்டுரையில் காண்போம் கடிதச் செய்தி நா.முத்துக்குமார் அவர்கள் தன்
மகனுக்கு எழுதிய கடிதத்தின் செய்திகளைக் காண்போம். ·
உலகம் இப்படித்தான் அழ வேண்டும். இப்படி தான் சிரிக்க
வேண்டும். ·
வாழ்க்கை முழுக்க நீ வெவ்வேறு வடித்தில் நடிக்க வேண்டும். ·
கல்வியில் தேர்ச்சி கொள். இதேநேரம் அனுபவங்களிடம் இருந்து
அதிகம் கற்றுக் கொள். ·
இறக்கும் வரை இங்கு வாழ சூத்திரத்தைக்
கற்றுக் கொள். ·
மாநகரத்தில் வாழும் நீ கொடிய பல தேள் பல வடிவத்தில்
இருக்கும், உனக்கான காற்றை நீயே உருவாக்கிக் கொள். ·
கிடைத்த வேலையை விட, பிடித்த வேலையைச் செய். ·
யாராவது கேட்டால் இல்ல எனினும் கடன் வாங்கியாவது உதவி செய். ·
உலகில் மேலானது நட்பு மட்டுமே. நண்பர்களைச்
சேர்த்துக் கொள். ·
உன் வாழ்க்கை நேராகும் முடிவுரை நாளைக்கும் நாளை உன் பேரன் பேத்திகளுடன்
ஏதோ ஊரில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் போது என் நினைவு வந்தால் இந்த கடிதத்தை
மீண்டும் எடுத்துப் படித்துப்பார். உன் கண்களில் இருந்து உதிரும் கண்ணீர்த் துளியில்
வாழ்ந்து கொண்டு இருப்பேன். |
8 |
|
|
45அ |
மூவலூர்
இராமாமிர்தம் o தமிழகத்தின்
சமூகச் சீர்திருத்தவாதி o எழுத்தாளர் o திராவிட இயக்க செயல்பாட்டாளர் o தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் o
தமிழக அரசு எட்டாம்
வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி
வருகிறது. முத்து
லட்சுமி : o தமிழகத்தின்
முதல் பெண் மருத்துவர். o இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் o சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் ·
சட்ட மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி ·
அடையாற்றில் அவ்வை இல்லம்,
புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர். நீலாம்பிகை
அம்மையார் o மறைமலையடிகள்
மகள் நீலாம்பிகை அம்மையார் o தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர். o தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை,
முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன இவர் எழுதிய நூல்கள். |
8 |
|
|
45ஆ |
குறிப்புச்
சட்டம்
முன்னுரை : இன்றைய உலகில் சாலைகள்
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக உள்ளன. வேலை, கல்வி, வணிகம் போன்ற அனைத்து செயல்களும் சாலைகளின் மூலம்
நடைபெறுகின்றன. எனவே சாலை பாதுகாப்பு மிகவும் அவசியமானதாகும். சாலைகளின்
வகைகள் : சாலைகள் பல வகைகளாகப்
பிரிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways), மாநில
நெடுஞ்சாலைகள் (State
Highways), மாவட்டச் சாலைகள் மற்றும் கிராமப்புறச் சாலைகள் ஆகியவை
முக்கியமானவையாகும். இவை ஒவ்வொன்றும் போக்குவரத்து தேவைகளுக்கேற்ப
அமைக்கப்பட்டுள்ளன. வேகக்
கட்டுப்பாடு : சாலை பாதுகாப்பில் வேகக்
கட்டுப்பாடு மிக முக்கியமானது. அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது விபத்துகளுக்குக்
காரணமாகிறது. எனவே அரசு நிர்ணயித்துள்ள வேக வரம்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளி பகுதிகள்,
நகரப் பகுதிகளில் மெதுவாக ஓட்டுவது அவசியம். சாலை
விதிமுறைகள் : சாலை விதிமுறைகளை பின்பற்றுவது
அனைவரின் கடமையாகும். சிக்னல்கள்,
போக்குவரத்து அடையாளங்கள்,
ஜெப்ரா கடவு (Zebra
Crossing) போன்றவற்றை மதிக்க வேண்டும். ஹெல்மெட், சீட்
பெல்ட் அணிவது உயிரைக் காக்கும். மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவது தவிர்க்கப்பட
வேண்டும். முடிவுரை
: சாலை பாதுகாப்பு என்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். நாம் சாலை விதிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்பாக பயணம் செய்தால் விபத்துகளைத் தவிர்க்கலாம். “பாதுகாப்பே முதன்மை” என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்ல சமூகத்தை உருவாக்கும். |
8 |
|
ஒன்பதாம் வகுப்பு
மாணவர்கள் 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டில் தமிழ்ப் பாடத்தில் அதிக பட்ச மதிப்பெண் பெற
உதவுவது உங்கள் இளந்தமிழ் வழிகாட்டி. வழிகாட்டிப் பற்றிய விபரங்களுக்கு
80724-26391 என்ற எண்ணிற்கு தொடர்புக் கொள்ளவும்.
pdf link


