6TH-TAMIL-THIRAN-3RD-TERM-ANSWER KEY-2026

 


6ம் வகுப்பு தமிழ் – மூன்றாம் பருவத் தேர்வு – 2026 – திறன் 2026

உத்தேச விடைக்குறிப்பு

மொத்த மதிப்பெண் : 60                                                               வகுப்பு : 6

1. அகரவரிசைப்படுத்தி எழுதுக: (3)

மாங்காய், மிருதங்கம், மூன்று, மொச்சை, மோதிரம், மௌவல்.

2. சொற்களுக்குள் சொல்லைக் கண்டறிந்து எழுதுக: (2 X 1 = 2)

·        ) பச்சைக்கிளி

·        ஆ) மெத்தை

3. படத்தையும் சொற்களையும் இணைத்துத் தொடர் எழுதுக: (4 X 1 = 4)

·        அ) குரங்கு மரத்திற்கு மரம் தாவும்.

·        ஆ) விளக்கு ஒளியைக் கொடுக்கும்.

·        இ) வேப்பிலை கசப்புச் சுவையுடையது.

·        ஈ) புத்தகம் படித்தால் அறிவு பெறலாம்.

4. சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக: (3 X 2 = 6)

·        அ) என் பெயர் அகிலா. நான் மூன்றாம் வகுப்பில் படிக்கிறேன்.

·        ஆ) என் வீட்டில் மல்லிகைச் செடி உள்ளது. அவை பூக்கள் தரும்.

·        இ) என் தம்பி சுற்றுலா சென்றுள்ளான். அவர்கள் நாளை வருகிறார்கள்.

5. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து நிரப்புக: (3 X 2 = 6)

அ) மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது.

 கரும்பிலிருந்து வெல்லம் கிடைக்கிறது.

ஆ) கடலில் அலை அதிகமாக உள்ளது.

 விழாவிற்கு நண்பர்களை அழை.

     இ) வைகாசிக்கு அடுத்த மாதம் ஆனி.

 சுவரில் அடிப்பது ஆணி.

6. உரிய வினாச்சொல் கொண்டு வினாத்தொடரை நிறைவு செய்க: (3 X 2 = 6)

1.    உன் வகுப்பு ஆசிரியர் யார்?.

2.   கோடை விடுமுறை எப்பொழுது?.

3.   மரங்கொத்திப் பறவை எனப் பெயர் வந்தது ஏன்?.

7. 'காய்' என முடியும் ஐந்து சொற்களை உருவாக்கி எழுதுக: (5 X 1 = 5)

1.    மாங்காய்.

2.   பாகற்காய்.

3.   வெண்டைக்காய்.

4.   வாழைக்காய்.

5.   அவரைக்காய்.

8. தொடர்களை வரிசைப்படுத்தி எழுதுக: (5 X 1 = 5)

1.    இன்று புதிய வகுப்பிற்குச் சென்றேன்.

2.   வகுப்பில் நண்பர்களைச் சந்தித்தேன்.

3.   அனைவரும் ஆர்வமாக அமர்ந்தோம்.

4.   ஆசிரியர் எங்களை வரவேற்று வாழ்த்துகள் கூறினார்.

5.   மாலை மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.

9. தொடருக்குள் இரண்டு தொடர்களை உருவாக்கி எழுதுக: (3 X 2 = 6)

·        ) 1. மழை நன்றாகப் பெய்தது.

·           2. அணைகள் நிரம்பின.

·        ஆ) 1. நாளை சிறுவர் மன்றம் நடைபெறும்.

·           2.  பள்ளி மைதானத்தில் நடைபெறும்.

·        இ) 1. அவர்கள் மரங்களை நட்டனர்.

·         2. சாலையோரம் நிழல் தரும் மரங்கள்.

10. சரியான இணைப்புச்சொல் கொண்டு நிரப்புக: (5 X 1 = 5)

·        அ) அகிலா எழுதி முடித்துவிட்டாள் ஆனால் கமலா எழுதவில்லை.

·        ஆ) இன்று என் தம்பி பள்ளிக்கு வரவில்லை ஏனெனில் அவனுக்கு உடல் நலமில்லை.

·        இ) பசி அதிகமாக இருந்தது அதனால் உடனே சாப்பிட்டேன்.

·        ஈ) கயிறு அறுந்து விட்டது ஆகையால் பட்டம் கீழே விழுந்தது.

·        உ) மழை பெய்தது ஆகையால் குடை பிடித்தேன்.

11. உரைப்பகுதியைப் படித்து விடை எழுதுக: (4 X 2 = 8)

1.    அடிக்கோடிட்ட சொல் எதைக் குறிக்கிறது? - நடனம்.

2.   'தீமை' என்ற சொல்லின் எதிர்ச்சொல் (நன்மை) உள்ள தொடர்: இது உடல் மற்றும் மன நலத்திற்கு நன்மை பயக்கும்.

3.   உரைப்பகுதியின் கருத்திற்குப் பொருந்தாத படம்: ஆ) விளையாடும் படம் (நொண்டி விளையாடும் சிறுவர்கள்).

4.   பாரம்பரிய நடனங்கள்: பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி, கதக், ஒடிசி.

12. படத்தைப் பார்த்து இரண்டு தொடர்கள் எழுதுக: (2 X 2 = 4)

1.    சிறுவனும் சிறுமியும் தோட்டத்தில் செடிகள் நடுகிறார்கள்.

2.   சிறுவன் பூவாளியால் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுகிறான்.


மொத்த மதிப்பெண்கள்: 60

WWW.TAMILVITHAI.COM | WWW.KALVIVITHAIGAL.COM

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post