மாதிரி முதல் இடைத் தேர்வு – 2025
9 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:- 8×1=8
1. தமிழ்விடுதூது ______ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்
2. பகுதி,விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
அ) வென்றார் ஆ) நடந்த இ) வளர்க ஈ) பொருந்திய
3 நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) இலஞ்சி ஆ) அகழி இ) ஆறு ஈ) புலரி
4. தமிழர் பாரம்பரிய நாள் _________________
அ) ஜனவரி -14 ஆ) பிப்ரவரி -21 இ) மார்ச் -21 ஈ) மே – 14
5. பழமொழியை நிறைவு செய்க : கற்றோர்க்குச் சென்ற ____________
அ) கல் ஆ) சொல்லாடம் செய்யாத இ) இடமெல்லாம் சிறப்பு ஈ) செந்தமிழும் நாப் பழக்கம்
6. அடுபோர் – இலக்கணக் குறிப்பு தருக.
அ) உவமைத் தொகை ஆ) அன்மொழித்தொகை இ) வினைத் தொகை ஈ) பண்புத் தொகை
7. ‘ மல்லல் மூதூர் வயவேந்தே ‘ – இத்தொடரில் “ மல்லல் “ என்னும் சொல்லின் பொருள் யாது?
அ) பெரிய ஆ) வளம் இ) மறுமை ஈ) பூவரசு மரம்
8. தூது இலக்கியத்தை உ.வே.சா.முதன்முதலில் பதிப்பித்த ஆண்டு_______.
அ) 1930 ஆ) 1940 இ) 1950 ஈ) 1960
ஆ. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க:- 5×2=10
9. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – குறிப்புத் தருக
10. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
11. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?
12. தென் திராவிட மொழிகள் ஏதேனும் நான்கினைக் கூறுக
13. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
14. படிப்போம், பயன்படுத்துவோம்.
அ) WATER MANAGEMENT ஆ) LEXICON
15. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.
அ) வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் ______________( கலந்து கொள் )
ஆ) தவறுகளைத் ____________( திருத்து )
இ. ஏவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி 3×3=9
16. மூன்று என்னும் எண்ணுப் பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
17. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
18. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
19. தமிழ்விடுதூது உணர்த்தும் தமிழின் சிறப்புகளை எழுதுக
20. செம்மொழிக்குரிய தகுதிப்பாடுகள் யாவை?
ஈ. ஏவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2×5=10
21. பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
22. பள்ளி வேலை நேரம் முடிவதற்கு முன்பு வீட்டிற்குச் செல்ல வேண்டி வகுப்பாசிரியருக்கு அனுமதிக் கடிதம் எழுதுக.
23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
உ) அடிபிறழாமல் எழுதுக 1×5=5
24. அ) “ தித்திக்கும் முதல் நாச்சிந்துமே “ முடிய உள்ள தமிழ்விடுதூது பாடலை எழுதுக ( அல்லது )
ஆ) “ நீர்இன்று அமையா “ எனத் தொடகும் புறநானூறு பாடலை எழுதுக.
ஊ) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க. 1×8=8
25. அ) புலம் பெயர்ந்த மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க ( அல்லது )
ஆ) தண்ணீர் கதையை கருபொருள் குன்றாமல் சுருக்கித் தருக
CLICK HERE TO GET PDF