மாதிரி
முதல் இடைத் தேர்வு – 2025
8 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம்
: 1.30 மணி மதிப்பெண்
: 50
அ.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×1=5
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
__________
அ)
வைப்பு ஆ) கடல் இ)
பரவை ஈ) ஆழி
2.
தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை _____________ அணிந்துள்ளாள்
அ) மாலையாக ஆ) ஆடையாக இ) அணிகலன்களாக ஈ)
மகுடமாக
3 நோய்கள் பெருக மனிதன் ___________ விட்டு விலகியதுதான் முதன்மைக்
காரணம்
அ) வீட்டை ஆ) உணவை இ) நாட்டை ஈ)
இயற்கையை
4.
கிழிந்து + எழில்
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
கிழிந்துஎழில் ஆ) கிழிந்தெழில் இ) கிழிந்தொழில் ஈ) கிழிந்தழில்
5.
“ வல்லுருவம் “
என்பதனைச் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ)
வல் + உருவம் ஆ) வன்மை + உருவம் இ) வல்ல + உருவம் ஈ) வல்லு + உருவம்
ஆ.கோடிட்ட
இடத்தை நிரப்புக :- 3×1=3
6. கடைச்சங்க
காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் _ _ _ _ _ என அழைக்கப்பட்டன.
7.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் ______.
8.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _____.
இ.
பொருத்துக. 4×1/2=2
9.
க்,ங் - நாவின் முதல், அண்ணத்தின் அடி
10.
சிலப்பதிகாரம் - சித்த
மருத்துவம்
11.
உலோகம் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
12.
ட்,ண் - இளங்கோவடிகள்
ஈ.அடிமாறாமல்
எழுதுக:- 3+2=5
11.
“ வாழ்க நிரந்தரம் “ எனத் தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை எழுதுக.
12.
தன்குற்றம் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
உ. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி:- 5×2=10
13. தமிழ் எங்குப் புகழ்கொண்டு
வாழ்கிறது?
14.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
15.
இயற்கை போற்றத்தக்கது ஏன்?
16.
பட்டமரத்தின் கிளைகளுக்கு உவமையாகக் கூறப்படுவது எது?
17. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியது யாவை?
18.
ண,ன,ந ஆகிய எழுத்துகள் ( ஒலிகள் ) பிறக்கும் முறையைக் கூறுக
19.
சான்றோருக்கு அழகாவது எது?
ஊ.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 2×3=6
20.
தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
21.
இல்பொருள் உவமையணியை சான்றுடன் விளக்குக.
22.
ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
எ. எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:- 2×2=4
23.
படிப்போம்:பயன்படுத்துவோம்: அ) MEDICAL PLANT
ஆ) VOWEL
24. திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக
தொடங்கற்க
எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்டபின் அல்லது
25.
ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
மா தேன் மலர் செம்மை சிட்டு கனி குருவி இலை
காய் கூடு முட்டை மரம்
ஊ. விரிவாக விடையளிக்கவும். 3×5=5
26.
அ, எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக அல்லது )
ஆ. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர்
கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக
27.
அ) எனது தாய்மொழி என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. ( அல்லது )
ஆ) “ வெட்டுக்கிளியும் சருகுமானும் “ கதையைச்
சுருக்கி எழுதுக.
28.
அ).நான் விரும்பும் கவிஞர் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக (அல்லது )
ஆ) விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற உங்கள்
நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.