10TH-TAMIL-REVISION QUESTION AND MODEL PUBLIC EXAM-10-2026

 


               பத்தாம் வகுப்புபொதுத்தேர்வு-வினாத்தாள்-102026

நேரம் : 3.00 மணி                                              தமிழ்                                         மதிப்பெண்கள் : 100

பகுதி – 1  (மதிப்பெண்கள் : 15)

கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தோந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்                                                                                   15 x 1 = 15

1. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது -

அ) குலைப்பெயர் வகை                                           ஆ) மணிப்பெயர் வகை         

இ) கிளைப்பெயர் வகை                                            ஈ) இலைப்பெயர் வகை

2. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும்                                  ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்                                        ஈ) வானத்தையும் பேரொலியையும்

3. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” – இப்பாடலடிகள் இடம்பெற்று நூல்

அ) நற்றிணை                                                            ஆ) குறுந்தொகை

இ) சிலப்பதிகாரம்                                                      ஈ) புறநானூறு

4.“பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க" என்று

(அ) கருணையன், எலிசபெத்துக்காக                               (ஆ) எலிசபெத், தமக்காக

(இ) கருணையன், பூக்களுக்காக வேண்டினார்      .           (ஈ) எலிசெபெத், பூமிக்காக

5. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது

அ) சுட்டி         ஆ) கிண்கிணி           இ) குழை        ஈ) சூழி

6. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறள்          ஆ) கம்பராமாயணம்        இ) கலித்தொகை   

 ஈ) சிலப்பதிகாரம்

7.படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம்           ஆ) நீவிர்                    இ) அவர்         ஈ) நாம்

8. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

(அ) உதியன், சேரலாதன்                                         (ஆ) அதியன் : பெருஞ்சாத்தன்

(இ) பேகன், கிள்ளிவளவன்                                       (ஈ) நெடுஞ்செழியன் ; திருமுடிக்காரி

9. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

10. "கத்துங் குயிலோசை - சற்றே வந்து

காதிற் படவேணும்'' – பாரதியார்   - இப்பாடலடியில் இடம்பெற்றுள்ள வழுவமைதி

(அ) திணை வழுவமைதி                              (ஆ) பால் வழுவமைதி

(இ) மரபு வழுவமைதி                                     (ஈ) கால வழுவமைதி

11. நன்மொழி என்பது -

அ) பண்புத்தொகை                                                   ஆ) உவமைத்தொகை                     

இ) அன்மொழித்தொகை                                          ஈ) உம்மைத்தொகை

 

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.

பகர்வென திரிதிரு நகரவீதியும்

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்,

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

12. இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது ?

 (அ நீதிவெண்பா                                                       (ஆ) புறநானூறு         

(இ) மணிமேகலை                                                     (ஈ) சிலப்பதிகாரம்

13. பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக

(அ) பகர்வனர் .பட்டினும்                                           (ஆ) பட்டினும், கட்டினும்

(இ) கட்டும் தூசும்                                                      (ஈ) பட்டினும், மயிரினும்

14.காருகர் பொருள் தருக

(அ) உழவர்                                                                 (ஆ) நெசவாளர்         

(இ) பொற்கொல்லர்                                                   (ஈ) காவலர்

15. இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருள்கள்

(அ) பூக்களும், சந்தனமும்                                        (ஆ) பூக்களும் : அகிலும்

(இ) அகிலும் சந்தனமும்                                           (ஈ) பட்டும், சந்தனமும்

பகுதி – II   ( மதிப்பெண்கள் : 18)

பிரிவு -1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்   21-வது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.                                                                                          4 x 2 = 8

16. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க

(அ) கிரேக்க அறிஞர் ஹிப்பாலஸ் என்பவர் பருவக் காற்றின் பயனை உலகிற்கு உணர்த்தினார்.

(ஆ) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி     ஆட்டமாகும்.

18. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

19. சரயு ஆறு பாயும் இடங்களைப் பட்டியலிடுக.

20. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்  யாவர்?                           

 21.செயற்கை' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                 5 x 2 = 10

22.."கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க!

       உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது" - பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

23. எண்ணுப்பெயர்களைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக.

அ. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

ஆ.ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி

24..இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

         அ. மடு – மாடு  ஆ. தான்  -   தாம்

25. பகுபத உறுப்பிலக்கணம் தருக - “அறியேன்”

26. படிப்போம்; பயன்படுத்துவோம்.                            (அ) Conversation         (ஆ) Storm

27.தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க..

          1. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

          2. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

28.குறள்வெண்பாவின் இலக்கணத்தை எடுத்துக்காட்டுடன் எழுதுக.

பகுதி - III (மதிப்பெண்கள் : 18)

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.  2 x 3 = 6

29.'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர், உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால்தான் 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

அ) விருந்தினர் என்போர் யாவர்?

ஆ)  விருந்து குறித்துத் தொல்காப்பியர் கூறியது யாது?"

இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.

31. "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும 34 -ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                                             2 x 3 = 6

32. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக                                                                                                                                                                                     33. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?.

34. அடிபிறழாமல் எழுதுக

(அ) ''மாற்றம்'' எனத்தொடங்கி "சாலை" என முடியும் காலக்கணிதப் பாடல்            (அல்லது)

(ஆ) தூசும் துகிரும் எனத் தொடங்கும் சிலப்பதிகார பாடல்

பிரிவு - 3

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்      2 x 3 = 6

35. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

36. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

         கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக

37. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

   தியற்கை அறிந்து செயல். - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

                                                             

                                                பகுதி - IV (மதிப்பெண்கள் : 25)

குறிப்பு : அனைத்து வினாக்களுககும் விடையளிக்கவும்                                         5 x 5 =25

38. (அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

                                                          அல்லது

        (ஆ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக்

          குறள்வழி விளக்குக

  39. () மாவட்ட அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.( அல்லது )

(ஆ நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41. வீட்டு எண் : 21, வ.உ. சிதம்பரனார் தெரு, கரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த வெற்றிச்செல்வனின் மகன் குணசேகரன் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை குணசேகரனாகக் கருதி கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்புச் சேர்க்கை விண்ணப்பப்படிவத்தினை நிரப்புக.

42. (அ) பள்ளியிலும் வீட்டிலும் நீங்கள் நடந்துகொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக ( அல்லது)

(ஆ) மொழி பெயர்க்கவும்

        Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the neces sunlight, seasonal rains and the fertility of the soil Among these eler of nature, sunlight was considered indispensable by the ancient Tami

                   பகுதி - V (மதிப்பெண்கள் : 24)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்                                  3 x 8 = 24

43. (அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.

அல்லது

     (ஆ) போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் நாடகக் கலைஞர் திரைக் கலைஞர்  இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

44. (அ) "பிரும்மம்" கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.  ( அல்லது )

  (ஆ) 'கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே' - என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட  புத்தகம். அச்சிறுமியின் வாழ்ககையில் கலவிச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின்  கருத்துகளை விவரிக்கவும்

45. (அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக்  கட்டுரையாக்குக.

குறிப்புகள் : முன்னுரை  - கலைத்திருவிழா அமைவிடம் பலவித போட்டி அரங்குகள் - நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் -  அடைந்த உணர்வுகளும் நன்மைகளும்  - முடிவுரை  ( அல்லது )

         (ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக

                முன்னுரை சாலைப் பாதுகாப்பு உயிர்ப் பாதுகாப்புசாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான  நெறிகள் – விபத்துக்கான காரணங்கள் – விபத்துகளைத் தவிர்ப்போம் - விழிப்புணர்வு தருவோம் -    நமது கடமைகள் - முடிவுரை

 மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

click here

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறத் தவறும் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறவும், 40 மதிப்பெண் பெறும் மாணவர்கள் அதிகப்பட்ச மதிப்பெண் 70+  பெற சிறப்பு வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post