10ம் வகுப்பு தமிழ் : தரமற்ற உணவு மற்றும் அதிக விலை குறித்து உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் – Public Exam Model

 

மெல்லக் கற்போருக்கான கடிதம்

2. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர், சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுத்தல்சார்பு

          நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் சாம்பார் சாதம் சாப்பிட்டேன். அது கெட்டுப் போனதாகவும், அதிக விலை வாங்கியதாகவும் இருந்தது. ஆதாரங்களுடன் இணைத்துள்ளேன்; நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                                                   தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                                   அ அ அ அ அ.

இடம் : சேலம்         

நாள் : 04-03-2025

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post