மெல்லக் கற்போருக்கான கடிதம்
3. நாளிதழ் ஒன்றின்
பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட
வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
ஆசிரியர் அவர்கள்,
தினத்தந்தி நாளிதழ்,
சேலம் – 636001.
ஐயா,
பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் –
சார்பு
வணக்கம். பொங்கல் பண்டிகைக்காக “உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம்” என்ற கட்டுரையை எழுதியுள்ளேன். அந்த கட்டுரையை இத்துடன் இணைத்து
அனுப்பியுள்ளேன். தயவுசெய்து அதை பொங்கல் மலரில் வெளியிட வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு: கட்டுரை
இப்படிக்கு,
இடம் : சேலம்
தங்கள்உண்மையுள்ள,
நாள் : 04-03-2025 அ அ அ அ அ.
உறை மேல் முகவரி:
ஆசிரியர்
அவர்கள்,
தினத்தந்தி நாளிதழ்,
, சேலம்
– 636001.
