6th Std Tamil – பாஞ்சை வளம் | All Questions & Answers-25-26

 

பாஞ்சை வளம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.ஊர்வலத்தின் முன்னால் ________________ அசைந்து வந்தது.

   அ. தோரணம்  ஆ. வானரம்     இ. வாரணம்               ஈ. சந்தனம்

2.பாஞ்சாலங்குறிச்சியில்  ___________ நாயை விரட்டிடும்

   அ. முயல்      ஆ. நரி              இ. பரி        ஈ. புலி

3. மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ___________

  அ. மெத்தை விரிக்கப்பட்ட வீடு              

  ஆ. படுக்கையறை உள்ள வீடு                                            

  இ. மேட்டுப்பகுதியில் உள்ள வீடு                                        

  ஈ. மாடி வீடு

4. “ பூட்டுங்கதவுகள் “ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______________

   அ. பூட்டு + கதவுகள்          ஆ. பூட்டும் + கதவுகள்            

    இ. பூட்டின் + கதவுகள்     ஈ. பூட்டிய + கதவுகள்

5 . “ தோரணமேடை “ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______________                                                                                                            

     அ. தோரணம் + மேடை     ஆ. தோரண + மேடை            

     இ. தோரணம் + ஒடை        ஈ. தோரணம் + ஓடை

6.  வாசல் + அலங்காரம் – என்பதனைச் சேர்த்தெழுத கிடைக்கும் சொல்_________

    அ. வாசல்அலங்காரம்         ஆ. வாசலங்காரம்                 

    இ. வாசலலங்காரம்                ஈ. வாசலிங்காரம்

ஆ. பொருத்துக:-

1. பொக்கிஷம்        -      அழகு

2. சாஸ்தி               -      செல்வம்

3. விஸ்தாரம்          -      மிகுதி

4. சிங்காரம்            -      பெரும்பரப்பு

விடை

1. பொக்கிஷம்        -      செல்வம்

2. சாஸ்தி               -      மிகுதி

3. விஸ்தாரம்          -     பெரும்பரப்பு

4. சிங்காரம்            -      அழகு

குறு வினா

1. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.

Ø  பல சுற்றுகளாக இருக்கும்.

Ø  மிதில்களுடன் வலிமையாக கட்டப்பட்டிருக்கும்

2. பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?

Ø  பூஞ்சோலைகள், சந்தன மரச்சோலைகள், ஆறுகள், வயல்கள், பாக்குத் தோப்புகள் அந்நாட்டிற்கு அழகு சேர்க்கும்

சிறுவினா

1. பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?

Ø  மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.

Ø  மதில்கள் கொண்ட மாடி வீடுகள்.

Ø  கதவுகள் நேர்த்தியாகவும், செல்வம் நிறைந்தவையாக இருக்கும்.

 

2. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.

Ø  முயலானது நாயை எதிர்த்து விரட்டும்.

Ø  பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று நீர் குடிக்கும்.

சிந்தனை வினா

நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் என்ன ?

Ø  ஆங்கிலேய ஆட்சிக்கு அடங்காமல் துணிச்சலுடன் எதிர்த்ததால்,

Ø  நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ததால்,

Ø  மக்களை அநியாயத்திலிருந்து காத்ததால்,

Ø  கட்டபொம்மன் நாட்டுப்புறக்கதைப் பாடல்களில் பெரிதும் புகழப்படுகிறார்.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post