6th Std Tamil – தமிழ்நாட்டில் காந்தி | All Questions & Answers-25-26

   

தமிழ்நாட்டில் காந்தி

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                        

1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்_

அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்

2. காந்தியடிகள் _____________ அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.

அ) நாமக்கல் கவிஞர்            ஆ) பாரதிதாசன்

இ) உ.வே.சாமிநாதர்              ஈ) பாரதியார்

பொருத்துக

1. இலக்கிய மாநாடு - பாரதியார்  ( சென்னை )

2. தமிழ்நாட்டுக் கவிஞர் - சென்னை ( பாரதியார்)

3. குற்றாலம் - ஜி.யு.போப் ( அருவி )

4. தமிழ்க் கையேடு - அருவி ( ஜி.யு.போப் )

 

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. ஆலோசனை காந்தியடிகள் ஆலோசனை செய்தார்

2. பாதுகாக்க பெண்களை நாம் பாதுகாக்க வேண்டும்.

3. மாற்றம் மாற்றம் ஒன்றே மாறாதது

4. ஆடம்பரம் காந்தியடிகள் ஆடம்பரத்தை வெறுத்தார்.

குறுவினா

1. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?

            மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் அனுமதி இல்லாத காரணம்.

2. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

Ø  தென்னாப்பிரிக்காவில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கினார்.

Ø  ஜி,யு,போப் எழுதிய “ தமிழ்கையேடு “ தமிழ்மொழியை கற்கும் ஆர்வத்தைத் தூண்டியது.

சிறுவினா

1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக.

Ø  1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்தார்.

Ø  மதுரைக்கு செல்லும் போது மக்கள் இடுப்பில் ஒரு துணி மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார்.

Ø  அன்று முதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார்.

2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக.

Ø  ஜி.யு.போப் எழுதிய  “ தமிழ்க்கையேடு “ தமிழ் கற்கும் ஆர்வத்தை உண்டாக்கியது.

Ø  1937 – இல் சென்னை இலக்கிய மாநாட்டில் உ.வே.சாமிநாதரின் வரவேற்புரை கேட்டு மகிழ்ந்தார்.

Ø  “ இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆர்வத்தை உண்டாகிறது “ என்றுக் கூறினார்.

சிந்தனை வினா

காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை?

Ø  எளிமை

Ø  தூய்மை

Ø  சிக்கனம்

Ø  நேர்மை

Ø  அமைதி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post