இளந்தமிழ்
ஆறாம் வகுப்பு
பருவம் : 3 இயல் : 1
பாரதம் அன்றைய நாற்றங்கால்
மனப்பாடப்பாடல்
*புல்வெளி
யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம்!
கல்லைக் கூட காவிய மாக்கிக்
கட்டி நிறுத்திய கலைக்கூடம்! (புதுமைகள்)
அன்னை நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய நாடுகள்பசிதீர
அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின் ஊன்று கோலாக
புதுமைகள் செய்த தேசமிது
பூமியின் கிழக்கு
வாசலிது!*
- தாராபாரதி
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர்
குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம் ஆ) திருக்குறள்
இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
2. காளிதாசனின் தேனிசைப் பாடல்கள்
எதிரொலிக்கும் இடம்
அ) காவிரிக்கரை ஆ) வைகைக்கரை
இ) கங்கைக்கரை ஈ) யமுனைக்கரை
3. கலைக்கூடமாகக் காட்சி தருவது
அ) சிற்பக்கூடம் ஆ) ஓவியக்கூடம்
இ) பள்ளிக்கூடம் ஈ) சிறைக்கூடம்
4. நூலாடை என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது
அ) நூல்+ஆடை ஆ) நூலா+டை
இ) நூல்+ லாடை ஈ) நூலா+ஆடை
5. எதிர்+ஒலிக்க என்பதைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்
அ) எதிரலிக்க ஆ) எதிர்ஒலிக்க
இ) எதிரொலிக்க ஈ) எதிர்ரொலிக்க
ஆ ) நயம் அறிக
1. பாரதம் அன்றைய நாற்றங்கால்
என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
தெய்வ – நெய்த
; மெய்களை – மெய்யுணர்வு
2. பாரதம் அன்றைய நாற்றங்கால்
என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
புதுமை – பூமி;
காளிதாசன் - காவிரி
3. பாரதம் அன்றைய நாற்றங்கால்
என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக
தேசமிது – வாசலிது
; நூலாடை - மேலாடை
குறுவினா
1. தாராபாரதியின் பாடலில்
இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
காளிதாசன்
, கம்பன்
2. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை
இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
மேற்கு
மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம் கேட்கும்.
சிந்தனை
வினா
1. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு
மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக.
Ø நமது சக்தியை நாட்டின் வளர்ச்சிக்குப்
பயன்படுத்த வேண்டும்.
Ø பெற்றோர், ஆசிரியர் கூறுவதனைக்
கேட்க வேண்டும்.
Ø நம்மால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு
செய்ய வேண்டும்.
