www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 5
தலைப்பு : பன்முகக் கலைஞர்
அறிமுகம் :
Ø தமிழகத்தில் உழவர் சந்தை, சமத்துவபுரம் இவற்றால் மக்கள் அடையும் நன்மைகள் குறித்து கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதன் மூலம் சமூகத்திற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்க முன்வருதல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø கலைகள் பற்றிக் கூறல்
Ø கலைஞரின் கலைத்திறனைப் பற்றிக் கூறல்
Ø கலைஞரின் பன்முகத்திறன் பற்றிக் கூறல்
Ø கலைஞர் செயல்படுத்திய இன்றைய நலத்திட்டங்கள் குறித்துக் கூறல்
Ø தமிழ்செம்மொழிக்காக கலைஞர் ஆற்றிய செயல்கள் பற்றி கூறல்
கருத்துரு வரைபடம் :
பன்முகக் கலைஞர்
விளக்கம் :
பன்முகக் கலைஞர்
Ø 1924இல் ஜூன்-3இல் கலைஞர் முத்துவேலருக்கும்,அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாம் மகவாக பிறந்தவர்.
Ø இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட மாணவர்களைத் திரட்டி “ வாருங்கள் போருக்குச் சென்றிடுவோம்” என முழங்கியப்படி போராட்டம் நடத்தினார்.
Ø பட்டுக்கோட்டை அழகிரி, அண்ணா ஆகியோரின் பேச்சில் ஈடுபாடு கொண்டார். “ நட்பு “ என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.
Ø மேடை நாடகங்கள் பல எழுதியுள்ளார்.
Ø திரைப்படங்களிலும் பல படங்களுக்கு வசனங்களையும், திரைகதைகளும் எழுதியுள்ளார்.
Ø மாணவ நேசன் என்னும் இதழை நடத்தியுள்ளார்.
Ø தமிழார்வம் காரணமாக பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் அவர் உரை எழுதியுள்ளார்.
Ø அறிஞர் கூடும் கவிஅரங்கத்தை மக்கள் கூடும் கவியரங்கமாக மாற்றியவர்.
Ø கட்டுமானப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார்.
Ø முத்தமிழிலும் தன் முத்திரையைப் பதித்ததால் முத்தமிழ் அறிஞர் என போற்றப்பட்டார்.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்
Ø சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø சீர் பிரித்து வாசித்தல்
Ø கலைஞர் பற்றி அறிதல்
Ø கலைஞரின் போராட்டப் பண்புகளை அறிதல்
Ø கலைஞரின் பேச்சுக்கலையைப் பற்றி அறிதல்
Ø நாடகத்திலும், திரைப்படங்களிலும் அவரின் வசனங்கள், கதைகளை அறிதல்
Ø கட்டுமானத்தில் கலைஞரின் ஈடுபாட்டினைக் காணுதல்
Ø கலைஞரின் எழுத்து பற்றி அறிதல்.
மதிப்பீடு :
LOT :
Ø கலைஞர் என்ற பாராட்டுப் பெயர் கொண்டவர்__________
Ø கலைஞரின் பிறப்பு பற்றிக் கூறுக
MOT :
Ø மாணவநிலையில் கலைஞரின் போராட்டப் பண்பினைக் கூறுக.
Ø இளையத்தலைமுறைகளுக்கு கலைஞர் கூறுவது யாது?
HOT :
Ø கலைஞரின் திரைப்படங்களை வகைப்படுத்திக் கூறுக.
Ø கலைஞர் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்கு போன்று நீங்கள் எப்படிப்பட்ட பங்கினை அளிப்பீர்கள்?
கற்றல் விளைவுகள் : பன்முகக் கலைஞர்
T1027 கலைகளில் பன்முக வல்லவராகத் திகழ்ந்த ஆளுமை ஒருவரைப் பற்றி அறிவதன் மூலம் சமூகத்திற்கு தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்க ஊக்கமளித்தல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை

