6TH-TAMIL-TERM-2-UNIT-1-LESSON-1-AASARAKKOVAI

🌟 6ஆம் வகுப்பு தமிழ் – ஆசாரக்கோவை | பாடம் 1

பருவம் 1-இயல்- 1


✅ சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1️⃣ பிறரிடம் நான் --------- பேசுவேன்

  • அ) கடுஞ்சொல்

  • ஆ) இன்சொல்

  • இ) வன்சொல்

  • ஈ) கொடுஞ்சொல்

2️⃣ பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது --------- ஆகும்

  • அ) வம்பு

  • ஆ) அமைதி

  • இ) அடக்கம்

  • ஈ) பொறை

3️⃣ அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

  • அ) அறிவுடைமை

  • ஆ) அறிவுஉடைமை

  • இ) அறியுடைமை

  • ஈ) அறிஉடைமை

4️⃣ இவை + எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

  • அ) இவைஎட்டும்

  • ஆ) இவையெட்டும்

  • இ) இவ்வெட்டும்

  • ஈ) இவ்எட்டும்

5️⃣ நன்றியறிதல் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் ---------

  • அ) நன்றி + யறிதல்

  • ஆ) நன்றி + அறிதல்

  • இ) நன்று + அறிதல்

  • ஈ) நன்று + யறிதல்

6️⃣ பொறையுடைமை சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் ---------

  • அ) பொறுமை + உடைமை

  • ஆ) பொறை + யுடைமை

  • இ) பொறு + யுடைமை

  • ஈ) பொறை + உடைமை


🔹 குறுவினா 

1️⃣ எந்த உயிருக்கும் செய்யக்கூடாதது எது?

  • எவ்வுயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது.

2️⃣ நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?

  • நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ள வேண்டும்.


🔹 சிறுவினா 

ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள்:

  • பிறர் செய்த உதவியை மறவாதிருத்தல்

  • பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்

  • இனிய சொற்களைப் பேசுதல்

  • எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்

  • கல்வி அறிவு பெறுதல்

  • எல்லோரையும் சமமாகப் பேணுதல்

  • அறிவுடையவராய் இருத்தல்

  • நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல்


🔹 சிந்தனை வினா 

1️⃣ உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகள்:

  • பணிவு

  • துணிவு

  • இரக்கம்

  • எளிமை

  • நேர்மை

2️⃣ நல்ல ஒழுக்கங்களை விதையாக பின்பற்றுவதின் காரணம்:

வித்து என்பது விதை. விதையிலிருந்து செடி வளர்ந்து மரமாகி நிற்பது போல, இளம் வயதிலேயே நல்ல ஒழுக்கங்களை விதையாக பின்பற்றினால் சமூகத்தில் நாம் மேன்மையடைவோம்.



"ஆசாரக்கோவை – எளிய தமிழ் வார்த்தைகளில் நற்பண்புகள் மற்றும் அறிவு கற்றுக்கொள்ள எளிய வழி!" 💡 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post