மாதிரி முதல் பருவம் – தொகுத்தறித் தேர்வு – 2025
6 -ஆம் வகுப்பு — தமிழ்
⏰ நேரம் : 2.00 மணி | 📊 மதிப்பெண் : 60
பிரிவு - I
அ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி (8×1=8)
ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக (4×1=4)
9. நாம் சிந்திக்கவும் சிந்தித்தை வெளிப்படுத்தவும் உதவுவது _____________
10. பறவைகள் இடம் பெயர்வதற்கு _____________ என்று பெயர்
11. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது _____________
12. கல்வியானது நமது ____________ துணையாய் அமைகிறது
இ) பொருத்துக (4×1=4)
13. விளைவுக்கு - பால்
14. அறிவுக்கு - வேல்
15. இளமைக்கு - நீர்
16. புலவர்க்கு - தோள்
ஈ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி (5×2=10)
17. பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
18. கல்வியை ஏன் போற்றிக் கற்க வேண்டும்?
19. நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
20. எழுத்துகளுக்கு தொடக்கமாக அமைவது எது?
21. தூக்கணாங்குருவியின் கூடுகளைக் கவிஞர் ஏன் புல் வீடுகள் என்று குறிப்பிடுகிறார்?
22. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
23. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக
உ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி (3×3=9)
24. சிட்டுக்குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு தருக
25. கல்லாதவர்களுக்கு ஏற்படும் இழப்புகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
26. காமராசரின் கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
27. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் இனியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?
ஊ) அடிமாறாமல் எழுதுக (4+2=6)
28. ”தமிழுக்கும் அமுதென்று“ எனத் தொடங்கும் பாடலை எழுதுக
29. தற்று……என முடியும் திருக்குறளை எழுதுக.
எ) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி (1×7=7)
30. அ) கிழவனும் கடலும் என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் எழுதுக.
(அல்லது)
ஆ) இயற்கையைக் காப்போம் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
ஏ) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி (1×7=7)
31. விடுப்பு வேண்டி உன் வகுப்பாசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக.
(அல்லது)
32. உங்கள் பகுதியில் பழுது அடைந்துள்ள தெருவிளக்குகளைச் சரி செய்ய வேண்டி, உதவி மின்பொறியாளருக்கு விண்ணப்பம் எழுதுக.
ஐ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5×1=5)
33. பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) முத்து தம் __________ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
ஆ) பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _____________ என்று பெயர் (பரவை / பறவை)
34. நம் தலைவர்களின் பிறந்தநாளுக்குரிய விழாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக
(ஆசிரியர் நாள், கல்வி வளர்ச்சி நாள், இளைஞர் நாள், குழந்தைகள் நாள்)
அ) காமராசர் ________________________
ஆ) அப்துல் கலாம் _____________________
35. படிப்போம்; பயன்படுத்துவோம்
அ) TOUCH SCREEN ஆ) EDUCATION
36. சொற்களைச் சொந்த தொடரில் அமைத்து எழுதுக
அ) தனிச்சிறப்பு ஆ) நாள்தோறும்
37. இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
நூல், மொழி, கோல், மீன், நீதி, எழுது, கண், வெளி, தமிழ், மணி, மாலை, விண்
