ஏழாம் வகுப்பு - முதல் பருவம்
தொகுத்தறி தேர்வு - 2025
வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வினாத்தாளின் கடைசியில் உள்ள பொத்தானில் START என்பதை அழுத்தவும்
மாதிரி முதல்பருவம் – தொகுத்தறித் தேர்வு – 2025
7 -ஆம் வகுப்பு — தமிழ்
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :- (5×1=5)
1. ஒலியின் வரிவடிவம் ________________ ஆகும்.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
அ) நன்னீர் ஆ) தண்ணீர் இ) முந்நீர் ஈ) கண்ணீர்
3. முத்துராமலிங்கர் நடத்திய இதழின் பெயர் ____________.
அ) இராஜாஜி ஆ) நேதாஜி இ) காந்திஜி ஈ) நேருஜீ
அ) இராஜாஜி ஆ) நேதாஜி இ) காந்திஜி ஈ) நேருஜீ
4. குரலாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ___________.
அ) குரல்+யாகும் ஆ) குரல்+ஆகும் இ) குர+லாகும் ஈ) குர+ஆகும்
அ) குரல்+யாகும் ஆ) குரல்+ஆகும் இ) குர+லாகும் ஈ) குர+ஆகும்
5. வாழை, கன்றை __________ ____________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக :- (5×1=5)
6. வாய்மை எனப்படுவது __________
7. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது __________ குறுக்கம்
8. மொழியின் முதல் நிலை கேட்டல், __________ ஆகியனவாகும்
9. ‘நெறி’ என்னும் சொல்லின் பொருள் __________
10. காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை __________ கப்பல்கள் எனப்பட்டன
இ. பொருத்துக :- (4×1=4)
11. பொன்னன் - தொழிற்பெயர்ப் பகுபதம்
12. நாடன் - சினைப்பெயர்ப் பகுபதம்
13. கண்ணன் - பொருட்பெயர்ப் பகுபதம்
14. உழவன் - இடப்பெயர்ப் பகுபதம்
ஈ. ஏவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி :- (6×2=12)
15. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
16. காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன யாவை?
17. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
18. மொழியின் இரு வடிவங்கள் யாவை?
19. முத்துராமலிங்கர் பெற்றிருந்த பல்துறை ஆற்றலைப் பற்றி எழுதுக.
20. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
21. குற்றியலிகரம் என்றால் என்ன?
22. கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
உ. எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளி :- (2×3=6)
23. ‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
24. கலங்கரை விளக்கம் – சிறு குறிப்பு வரைக.
25. இந்தியத்தாய் எவ்வாறு காட்சி அளிக்கிறாள்?
26. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளுள் நான்கினை விளக்குக.
ஊ. அடிமாறாமல் எழுதுக :- (2+4=6)
27. ‘உள்ளத்தால்’ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
28. ‘அருள் நெறி’ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
எ. கடிதம் எழுதுக :- (1×5=5)
29. அ) நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
ஏ. கட்டுரை எழுதுக :- (1×7=7)
30. அ) நான் விரும்பும் தலைவர் (அல்லது) ஆ) தாய் மொழி பற்று என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
ஐ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :- (5×2=10)
31. தொகைச் சொற்களை விரித்து எழுதுக :- அ) முக்கனி ஆ) முத்தமிழ்
32. விடுகதைக்கு விடை எழுதுக:
வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல.
தவமிருப்பேன்; முனிவரல்ல.
நான் யார்?
வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல
மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல.
தவமிருப்பேன்; முனிவரல்ல.
நான் யார்?
33. இடைச்சொல் ‘ஐ’ சேர்த்து தொடரை எழுதுக :-
அ) கடல் பார்த்தாள் ஆ) புல் தின்றது
அ) கடல் பார்த்தாள் ஆ) புல் தின்றது
34. படிப்போம்; பயன்படுத்துவோம் :-
அ) NATURAL RESOURCE ஆ) MEDIA
அ) NATURAL RESOURCE ஆ) MEDIA
35. சரியான பகுபத உறுப்பை எழுதுக :-
போவாள் – போ + வ் + ஆள்
போ - ___________
வ் - ___________
ஆள் - ___________
போவாள் – போ + வ் + ஆள்
போ - ___________
வ் - ___________
ஆள் - ___________
PDF Timer Download
00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி