மாதிரிகாலாண்டுத்
தேர்வு - 2025
மொழிப்பாடம் – தமிழ்
வகுப்பு : 9
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
குறிப்புகள் : I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
II) கொடுக்கப்பட்ட
நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
அ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 15×1=15
1. பின்வருவனவற்றில்
அளபெடை இடம் பெறாத தொடர் எது?
அ) குக்கூஉ எனக் குயில் கூவியது ஆ) கொக்கரக்கோஒ எனச் சேவல் கூவியது
இ) அண்ணாஅ என அழைத்தான் ஈ) ஓடி வா ஓடி வா
2. தோரண வீதியும்,
தோமறு கோட்டியும் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்.
அ) ஏவல் வினைமுற்று ஆ) வினைத் தொகை இ) எண்ணும்மை ஈ)
பண்புத் தொகை
அ.
ஆராயாமை, ஐயப்படுதல் ஆ.
குணம், குற்றம் இ. பெருமை, சிறுமை
ஈ. நாடாமை,
பேணாமை
4. பெயரடை இடம்பெறாத
தொடரைக் காண்க.
அ) நல்ல நண்பன் ஆ)
இனிய வணக்கம் இ) எந்த ஓவியம்? ஈ) கொடிய விலங்கு
5. மணிமேகலை காப்பியத்தின்
ஆசிரியர் யார்?
அ) இளங்கோவடிகள் ஆ) கம்பர் இ) சீத்தலைச் சாத்தனார் ஈ) சேக்கிழார்
6. மல்லல் மூதூர் வயவேந்தே
– கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
7. தொடரைக் கொண்டு
பழமொழியை நிறைவு செய்க : கல்லாடம் படித்தவரோடு________
அ) சொல்லாடல் செய்யாதே ஆ) சென்ற இடமெல்லாம் சிறப்பு
இ) கல் ஈ) செந்தமிழும் நாப் பழக்கம்
8. தண்டமிழ் ஆசான்
என அழைக்கப்படுபவர் ____
அ) இளங்கோவடிகள் ஆ) சீத்தலைச் சாத்தனார் இ) குடபுலவியனார் ஈ) சேக்கிழார்
9. நீர்இன்று
அமையா யாக்கைக்கு எல்லாம் – இவ்வடிகளில் “ யாக்கை “ என்பதன் பொருளைத் தேர்க
அ. உடம்பு ஆ. உணவு இ. உயிர் ஈ. உடைமை
10. “ தண்ணீர் தேசம்
“ என்ற நூலை எழுதியவர்_______________
அ) கோமல்
சுவாமிநாதன் ஆ) வைரமுத்து இ) இறையன்பு ஈ) மா.கிருஷ்ணன்
11. வாதவூரடிகள் என அழைக்கப்படுபவர்___________
அ) ஆண்டாள் ஆ)
பெரியாழ்வார் இ) மாணிக்க வாசகர் ஈ) ஞானசம்பந்தர்
பாடலைப் படித்து
வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
காடெல்லாம்
கழைக்க ரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம்
கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம்
மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம்
நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்*
12.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. தமிழ்விடுதூது ஆ. புறநானூறு இ.
பெரியபுராணம் ஈ. நாலடியார்
13.
இப்பாடலை இயற்றியவர்___________
அ.
குடபுலவியனார் ஆ. சேக்கிழார் இ. கவிஞர் தமிழொளி ஈ. சமண முனிவர்கள்
14.
‘ கழை ‘ என்பதன் பொருள்__________
அ. சோலை ஆ.
பக்கம் இ. கரும்பு
ஈ. சிறுகிளை
15.
‘ கருங்குவளை‘ – என்பதன் இலக்கணக் குறிப்பு
அ.
பண்புத் தொகை ஆ. வினைத் தொகை இ. உம்மைத் தொகை ஈ. உவமைத்தொகை
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )
பிரிவு – 1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
4×2=8
(21 ஆவது வினாவிற்கு
கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழ் மக்களின் வாழ்வியலைச்
சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன.
ஆ. நிலத்தில் நீரைப் பெருக்கியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த
புகழையும் பெறுவர்.
17. கண்ணி என்பதன் விளக்கம் யாது?
18. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் சுட்டும் பெயர்களைக் குறிப்பிடுக.
19. நிலையான வானத்தில்
தோன்றி மறையும் காட்சிக்குப் பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?
20. உங்கள் பள்ளியைச்
சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
21. எனைத்தானும் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
22. அளபெடை எத்தனை
வகைப்படும்? அவை யாவை?
23. பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில்
எழுதுக.
அ) இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத்
தமிழ் _______ ( திகழ் )
ஆ) உலகில் மூவாயிரம் மொழிகள்
_________ ( பேசு )
24. வீணையோடு வந்தாள்,
கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.
25. படிப்போம்; பயன்படுத்துவோம்
அ) LEXICON ஆ) EXCAVATION
26. பொருள்
எழுதி தொடர் அமைக்க.:- அலை - அழை
27. ஒரு
தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக: குவிந்து
– குவித்து
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
அந்தாதிச் சொற்களை
உருவாக்குக.
அ. அத்தி ஆ.
குருவி
28. காலவாகு
பெயர்-குறிப்புத் தருக.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. திராவிட மொழிகளின்
பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை எழுதுக.
30. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?
31. பத்தியைப்
படித்து பதில் தருக
தென்னிந்தியாவின்
அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன. தமிழக மாட்டினங்களின்
தாய் இனம் என்று 'காங்கேயம்' கருதப்படுகிறது.
பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதம் வளர்ந்த பிறகு
சாம்பல் நிறத்துக்கு மாறிவிடுகின்றன. பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்தில்
இருக்கின்றன. மிடுக்கான தோற்றத்துக்குப் பெயர்பெற்ற காங்கேயம் இனக் காளைகள்
ஏறுதழுவுதல் நிகழ்விற்கும் பெயர் பெற்றுள்ளன. அத்துடன், ஏர் உழுவதற்கும் வண்டி
இழுப்பதற் கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அ). மிடுக்கானத் தோற்றத்திற்கும் ஏறுதழுவுதலுக்கும் பெயர்
பெற்றவை எவை ?
ஆ). தமிழக
மாட்டினங்களின் தாய் இனம் என்று கருதப்படுவது யாது?
இ). மேற்கண்ட
பத்தி எதைக் குறிப்பிடுகிறது?
பிரிவு – II
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க
வேண்டும்.)
32. திருப்பாவை
குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
33. நிலைத்த புகழைப்
பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?
34. அ) “ தித்திக்கும்
“ எனத் தொடங்கும் தமிழ்விடுதூது அடிமாறாமல் எழுதுக (அல்லது )
ஆ) “நீரின்றி அமையா” எனத் தொடங்கும் புறநானூறு
பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. அளவையாகு பெயர்களின் வகைகளை விளக்குக.
36. பகுபத உறுப்புகளை விளக்குக.
37. சொற்பொருள் பின்வருநிலையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க.
5×5=25
38. அ) பெரியபுராணம்
காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய
செயல்களைத் தொகுத்து எழுதுக.
39. பள்ளி நேரம் முடிவதற்கு
முன்பே வீட்டிற்குச் செல்ல அனுமதி வேண்டி வகுப்பாசிரியருக்கு விண்ணப்பம் வரைக.(
அல்லது )
ஆ. பள்ளியில் நடைபெற்ற
இலக்கிய மன்ற விழா நிக ந் ழ்ச்சிகளைத் திரட்டித்
தொகுப்புரை உருவாக்குக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41.படிவம் நிரப்புக.
இராமன் மகள், மேகதர்ஷினி என்பவர் தன்னுடைய அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கில் ரூ 2000 பணத்தை எடுக்க விரும்புகிறார். தேர்வர் தம்மை மேகதர்ஷினியாக நினைத்து உரியப் படிவத்தை நிரப்புக
42. அ) பா நயம் பாராட்டுக
கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்
காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.
ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல
ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத
ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். – கவிமணி ( அல்லது )
ஆ) என் பொறுப்புகள்…
அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) ஆசைப்படும் பொருட்களை முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.
இ)__________________
ஈ)__________________
உ)__________________
ஊ)___________________
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பிழை நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தெளலீஸ்வரம் அணையைக் கட்டியது.
2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்
3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
4. நீலனும் மாலனும் அவரசகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.
5. சூறாவளியின் போது
மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியத்தால் தப்பிப்பான்.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும்
விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க. ( அல்லது )
ஆ) வேளாண்மை நீரை
அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.
44. அ 'தண்ணீர்’
கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக. ( அல்லது )
ஆ
புலம் பெயர்ந்த தமிழர்களின் அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு
தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக விவரிக்க.
45. அ) குறிப்புகளைக்
கொண்டு “ இயற்கையைக் காப்போம் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை – இயற்கை - மாசுபாடு
- காடுகள், நதி, உயிரினங்கள் - பசுமை வளர்ப்பு - நமது
கடமைகள் - எதிர்கால பாதுகாப்பு - முடிவுரை ( அல்லது )
ஆ)
குறிப்புகளைக் கொண்டு” நீரின்
இன்றியமையாமை” என்னும் தலைப்பில் கட்டுரை
எழுதுக.
முன்னுரை
– நீரின்றி இயங்காது உலகு – நீரின் இன்றியமையாமை – நீர் நிலைகள் – நீர் பற்றாக்குறை
ஏற்படக் காரணம் - நீரைச் சேமித்தல் – நிலத்தடி
நீர் மட்டம் – முடிவுரை