மாதிரி
காலாண்டுத் தேர்வு - 2025
மொழிப்பாடம் – தமிழ்
வகுப்பு : 8
நேரம்
: 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I
I ) சரியான விடையைத் தேர்வு
செய்க. 10×1=10
1. தன் அலையால் சங்கினைத்
தடுத்து நிறுத்திக் காக்கிறது – இத்தொடரில் தன் என்னும் சொல் ____ குறிக்கிறது.
அ) அணிகலனைக் ஆ) கடலைக் இ) கப்பலைக்
ஈ) தமிழைக்
2. இதழ்களைக்
குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ, ஆ
3. மலர்களிலிருந்து
வரும் ________ வண்டுகளை ஈர்க்கும்.
அ) மந்தம் ஆ) அந்தம் இ) சந்தம் ஈ) கந்தம்
4. கதிரவனின் மற்றொரு
பெயர் _________.
அ) புதன்
ஆ) ஞாயிறு இ) சந்திரன் ஈ) செவ்வாய்
5. நோய்கள்
பெருக மனிதன் _____________ விட்டு விலகியது தான் முதன்மைக் காரணமாகும்.
அ) வீட்டை
ஆ) உணவை இ) நாட்டை ஈ) இயற்கையை
6. ‘ கடல் ஓடா ‘ எனத்
தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி.
அ) எடுத்துக்காட்டு
உவமை அணி
ஆ) தற்குறிபேற்ற அணி
இ) உவமை அணி ஈ) பிறிதுமொழிதல்
அணி
7. அறியாமையை
நீக்கி அறிவை விளக்குவது _________
அ) விளக்கு
ஆ) கல்வி இ) விளையாட்டு ஈ) பாட்டு
8. மறைபொருளைக் காத்தம்
________ எனப்படும்
அ) சிறை ஆ) அறை இ) கறை ஈ) நிறை
9. பகைவன் + என்றாலும்
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்_____.
அ) பகைவென்றாலும் ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும் ஈ) பகைவனின்றாலும்
10. இன்றைய
கல்வி _____
நுழைவதற்குக்
கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ)
வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
II) கோடிட்ட இடங்களை நிரப்புக:- 5×1=5
11. உலக வாழ்விற்கு
மிகவும் இன்றியமையாதது _____ என்னும் அறிவுக்
கலை.
12. வல்லின
எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
13. இயற்கை _____ எனப்படுவது
பெரியபுராணம்.
14.
‘நடக்கிறது’ என்னும் வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்
_____
15. கல்விப்
பயிற்சிக்குரிய பருவம் ______________
III) பொருத்துக:-
5×1=5
16. தமிழ்த்தென்றல் –
பெரிய புராணம்
17. இயற்கை ஓவியம் - கம்பராமாயணம்
18. இயற்கைத் தவம் - திரு.வி.க
19. இயற்கைப் பரிணாமம் - சிந்தாமணி
20. இயற்கை அன்பு - பத்துப்பாட்டு
பகுதி – II
IV) அடிபிறழாமல் எழுதுக:-
4 + 2 = 6
21. அ) “ வாழ்க நிரந்தம்”
பாடலை அடிமாறாமல் எழுதுக. ( அல்லது )
ஆ) “மாமழைப் போற்றும் “ எனத்
தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
22, “ தக்கார் “ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக
பகுதி – III
V) எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
5×2=10
23. தமிழ்
எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
24. ஒலி
எழுத்து நிலை என்றால் என்ன?
25. சான்றோருக்கு
அழகாவது எது?
26. சிலப்பதிகாரக்
காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித் தொடங்குகிறது?
27. முறை,பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?
28. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
29. தமிழர் மருத்துவத்தில்
மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
VI) எவையேனும் ஐந்து
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
5×2=10
30. எழுத்துகளின்
பிறப்பு என்றால் என்ன?
31. வியங்கோள்
வினைமுற்று விகுதிகள் யாவை?
32.மயங்கொலி எழுத்துகள் யாவை?
33.தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?
34. மெய்யெழுத்துகள்
எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
35. ண,ன,ந
ஆகிய எழுத்துகள் ( ஒலிகள் ) பிறக்கும் முறையைக் கூறுக.
36. தெரிநிலை
வினைமுற்று எவற்றைக் காட்டும்?
VII) எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 5×3=18
37. நமக்கு இருக்க வேண்டிய பண்புநலன்களாக நல்லந்துவனார் கூறுவன யாவை?
38. தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
39. ஏட்டில்
எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
40. இயற்கையைப் போற்றும் வழக்கம் ஏற்படக் காரணமாக
எவற்றைக் கருதுகிறீர்கள்?
41. பள்ளிக்
குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
42. தமிழையும்
கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
43. தமிழ்வழிக்
கல்வி பற்றித் திரு. வி. க. கூறுவனவற்றை எழுதுக.
பகுதி – IV
VIII) எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 5×2=10
44. சொற்களை ஒழுங்குப்படுத்தி
முறையான தொடராக்குக..
அ) கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து
ஆகும்.
ஆ) ஏகலை கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
45. தொடரில் உள்ள
மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக..
அ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம்
வீசின.
ஆ) தேர்த் திருவிலாவிற்குச் செண்றனர்.
46. கோடிட்ட
இடத்தை நிரப்புக.
வலியில் நிலைமையான் வல்லுருவம்
___________
புலியின் தோல்_______ மேய்ந் தற்று.
47. படிப்போம்;
பயன்படுத்துவோம்.
அ) MEDICINAL PLANT ஆ)
REFORM
48. பின்வரும்
தொடர்களில் உள்ள இடங்களில் நிறுத்தற்குறிகளை இடுக.
அ) திருக்குறள் அறம் பொருள் இன்பம் என்னும்
முப்பால் பகுப்புக் கொண்டது.
ஆ) திரு.வி.க. எழுதிய பெண்ணின் பெருமை
என்னும் நூல் புகழ் பெற்றது.
49. சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
அ) சிரம் என்பது _______________ ( தலை/தளை
)
ஆ) இலைக்கு வேறுபெயர் __________ ( தளை
/ தழை )
IX) கடிதம் எழுதுக:- 1×5=5
50. அ) கலைத்திருவிழாப் போட்டியில் மாநில அளவில் முதல்
பரிசு பெற்ற தோழியைப் பாராட்டிக் கடிதம் எழுதுக ( அல்லது )
ஆ) பலத்த புயலால்
சேதமடைந்த சாலைகளை செப்பனிட்டுத் தருமாறு மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் வரைக.
பகுதி -V
X) அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க.
3×8=24
50. அ) எழுத்துகளின் தோற்றம் குறித்து
எழுதுக. ( அல்லது )
ஆ) தமிழர்
மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
51 . அ) தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து
இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ. “வெட்டுக்கிளியும்
சருகுமானும்” – கதையைச் சுருக்கி எழுதுக.
52. அ) கட்டுரை எழுதுக :- “ இயற்கையைப் பாதுகாப்போம் “ ( அல்லது )
ஆ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை – நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை – முடிவுரை.
CLICK HERE TO PDF