www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 1
தலைப்பு : புயலிலே ஒரு தோணி!
அறிமுகம் :
Ø
நீங்கள் இதுவரை
கேட்டறிந்த சில இயற்கை சீற்றங்கள் குறித்து கூறுக எனக் கூற வைத்து ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø கதை நிகழ்வுகளைச்
சுவையுடன் படிக்கவும், அது போன்ற படைப்புகளை உருவாக்கவும் முனைதல்
Ø புயலின் கோரக்காட்சிகளை கதையின்
வாயிலாக அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø ஆசிரியர் பற்றி கூறல்
Ø இயற்கையின் சீற்றங்கள் பற்றி கூறல்
Ø இயற்கை சீற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றி கூறல்
Ø புனைவு கதையில் இடம் பெற்றுள்ள அடுக்குத்
தொடர்களையும், ஒலிக்குறிப்புச் சொற்களையும் கூறல்
Ø கதையினை அதன் உணர்வு அடிப்படையில் வாசித்தல்
Ø காணொளி காட்சியாக ஒளிபரப்புதல்
கருத்துரு வரைபடம் :
புயலிலே ஒரு தோணி!
விளக்கம் :
புயலிலே ஒரு தோணி
·
புலம் பெயர்ந்த தமிழர்கள்
இந்தோனேசியாவிலிருந்து கப்பலில் செல்லும் போது கண்ட புயல் அனுபவம்
·
ப.சிங்காரம் குறிப்பு:
ஊர் :
சிங்கம்புணரி
வேலைக்காக
இந்தோனேசியா சென்றார். அச்சமயம் தென் கிழக்காசிய போர் மூண்டது. அச்சூழலில்
.அப்பகுதியில் கடலில் நடைபெறும் புயல் அனுபவத்தை கற்பனைகளோடு “ கடற்கூத்து “
என்னும் பெயரில் எழுதியுள்ளார்
·
அடுக்குத் தொடர்கள், வருணைனைக்
காட்சிகள்
·
ஒலிக்குறிப்புச் சொற்கள்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø கதை பகுதியினை பிழையின்றி வாசித்தல்
Ø கதைப் பகுதியினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø கதைப் பகுதியில் இடம்
பெறும் அடுக்குத் தொடர்களையும், ஒலிக்குறிப்புச் சொற்களை அறிதல்
Ø முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள், சில முக்கிய வினாக்களை
அறிதல்
Ø காணொளி மூலம் புயலின் அனுபவத்தை வகுப்பறையில் பெறுதல்
மதிப்பீடு :
LOT :
Ø புயலிலே
ஒரு தோணி கதையின் ஆசிரியர் __________
Ø பாடப்பகுதி
நிகழும் புயல் நிகழ்வுகள் நடைபெறும் நாடு எது?
MOT :
Ø பாடப்பகுதியில்
உள்ள அடுக்குத் தொடர்கள் யாவை?
Ø பாடப்பகுதியில் உள்ள வருணனைச் சொற்களைக் கூறுக
HOT
:
Ø நீங்கள் எதிர்கொண்ட இயற்கை இடர் குறித்து கூறுக.
Ø பாடப்பகுதியில் பதற்றத்தை வெளிப்படுத்த அடுக்குத்
தொடர்களும், ஒலிக்குறிப்புச் சொற்களும் எவ்வாறு பயன்பட்டுள்ளன என்பதுக் குறித்து
கூறுக.
குறைதீர் கற்றல் :
Ø பாடப்பகுதிகளை சிறு பகுதிகளாக பிரித்து கற்பித்தல்
Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு கற்பித்தல்
கற்றல் விளைவுகள் : புயலிலே ஒரு தோணி!
T1009
குறிப்புகளைக் கொண்டு படைப்புகளை உருவாக்குதல் அனுபவங்கள் வழி வெளிப்படும் எண்ணங்களை
வருணித்தும் விவரித்தும் எழுதுதல்
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை