சேலம் – திருப்புதல் தேர்வு-4-2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1 மதிப்பெண்கள் - 15 | |||||||||||||||||||||||||||
வினா.எண் | விடைக் குறிப்பு | மதிப்பெண் | |||||||||||||||||||||||||
1. | ஈ) பாடல்;கேட்டவர் | 1 | |||||||||||||||||||||||||
2. | ஆ. கொன்றை வேந்தன் | 1 | |||||||||||||||||||||||||
3. | இ) குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் | 1 | |||||||||||||||||||||||||
4. | அ) கருணையன் எலிசபெத்துக்காக | 1 | |||||||||||||||||||||||||
5. | ஈ) மழை முகம் காணாப் பயிர்போல | 1 | |||||||||||||||||||||||||
6. | இ) எடுத்துக்காட்டு உவமை அணி | 1 | |||||||||||||||||||||||||
7. | ஆ) பாரதியார் | 1 | |||||||||||||||||||||||||
8. | இ) எண் | 1 | |||||||||||||||||||||||||
9. | ஈ) இலா | 1 | |||||||||||||||||||||||||
10. | அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் | 1 | |||||||||||||||||||||||||
11. | அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது | 1 | |||||||||||||||||||||||||
12 . | ஆ. குமரகுருபரர் | 1 | |||||||||||||||||||||||||
13 . | ஈ. செங்கீரை | 1 | |||||||||||||||||||||||||
14 . | அ. எண்ணும்மை | 1 | |||||||||||||||||||||||||
15 | இ. காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது | 1 | |||||||||||||||||||||||||
பகுதி – 2 – பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||
16 | பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் | 1 1 | |||||||||||||||||||||||||
17. | v கூரான ஆயுதம் - உழைத்ததால் கிடைத்த ஊதியம். v பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் உழைத்ததால் கிடைக்கும் ஊதியமே. | 2 | |||||||||||||||||||||||||
18. | நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று | 2 | |||||||||||||||||||||||||
19 | Ø அறம் கூறும் மன்றங்கள். Ø துலாக்கோல் போல் நடுநிலையானது. Ø மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம். | 2 | |||||||||||||||||||||||||
20 | காலை நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!" என்றார் . | 2 | |||||||||||||||||||||||||
21. | செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல். | 2 | |||||||||||||||||||||||||
பிரிவு – 2 – பிரிவு - 2 |
| ||||||||||||||||||||||||||
22 | · ஐந்து வகைப்படும் · அவை ஏவல் விடை · வினா எதிர் வினாதல் விடை · உற்றது உரைத்தல் · உறுவது கூறல் விடை · ஏவல் விடை | 1 1 | |||||||||||||||||||||||||
23 | அ) வடித்த கஞ்சி – பெயரெச்சத் தொடர் ஆ) அடுக்குத் தொடர் | 1 1 | |||||||||||||||||||||||||
24. | அ) இயற்கை என்பதற்கு செயற்கை என்று எழுதினான். ஆ) மடு என்பதற்கு மாடு என எழுதினான் | 1 1 | |||||||||||||||||||||||||
25 | அ. அகச்சிகப்புக் கதிர்கள் ஆ. கதைச்சொல்லி | 1 1 | |||||||||||||||||||||||||
26 | “ அங்கே தேநீர் அருந்திவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டு இரு. நான் விரைவாக வந்துவிடுவேன்” “ அண்ணா! சண்முகத்தையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் அண்ணா ! அவனைப் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது” | 1 1 | |||||||||||||||||||||||||
27 | பொழிந்த – பொழி + த்(ந்) + த் + அ பொழி – பகுதி த் – சந்தி ; த் – ந் ஆனது விகாரம் த் – இறந்த கால இடைநிலை அ – பெயரெச்ச விகுதி | 1 1 | |||||||||||||||||||||||||
27 | செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ) மீளும் துயர் ஆ) எழுதிய கவிதை | 1 1 | |||||||||||||||||||||||||
28 | Ø வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகள் கொண்டது குறள் வெண்பா. எ.கா: எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. | 2 | |||||||||||||||||||||||||
பகுதி – 3 – பிரிவு - 1 | |||||||||||||||||||||||||||
29 | கிழக்கு – குணக்கு, கொண்டல் பயன் :குளிர்ச்சியாக வீசும் மழைக்காற்று. மேற்கு – குடக்கு, கோடை பயன் : வறண்டப் பகுதியிலிருந்து வெப்பக் காற்றாக வீசுகிறது. வடக்கு – வாடை குளிர்ச்சியான ஊதைக் காற்றாக வீசுகிறது. தெற்கு – தென்றல் வேகம் குறைந்து தென்றலாக வீசுகிறது. | 3 | |||||||||||||||||||||||||
30 | அ) சிந்தனை ஆற்றல் ஆ) மொழிபெயர்ப்பு,இசையமைப்பு,மகிழுந்து ஓட்டுதல் இ) செயற்கை நுண்ணறிவு | 3 | |||||||||||||||||||||||||
31 | வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின் கந்தை துணியால் துடைத்து, சாயக் குவளையில் கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும். | 3 | |||||||||||||||||||||||||
பகுதி -3 / பிரிவு - 2 | |||||||||||||||||||||||||||
32 | · மேல் மண் பதமாகிவிட்டது. · வெள்ளி முளைத்திடுது. · காளைகளை ஓட்டி விரைந்து செல். | 3 | |||||||||||||||||||||||||
33 | · சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படி பகைவரின் வலிமையை எதிர்கொள்ள முடியும். · மனத்தில் துணிவு இல்லாதவராய், அறிய வேண்டியவற்றை அறியாதவராய், பொருந்தும் பண்பு இல்லாதவராய், பிறருக்குக் கொடுத்து உதவாதவராய் இருந்தால் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும். | 3 | |||||||||||||||||||||||||
34அ | தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்ட தேம்பிழி மகரயாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ | 3 | |||||||||||||||||||||||||
34ஆ | அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. கா.ப.செய்கு தம்பி பாவலர் | 3 | |||||||||||||||||||||||||
பகுதி – 3 / பிரிவு - 3 | |||||||||||||||||||||||||||
35 | கொண்டுக் கூட்டுப் பொருள்கோள்: செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று கூட்டிப் பொருள்கொள்வது கொண்டுகூட்டுப் பொருள்கோளாகும். எ.கா : ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு ஆலத்து மேல குரங்கு,குளத்துள குவளை என்று கருத்தைக் கொண்டு அங்குமிங்கும் கொண்டு பொருள் கோள் அமைந்திருப்பதால் இது கொண்டுகூட்டுப் பொருள்கோள் எனப்படும். | 3 | |||||||||||||||||||||||||
36 | Ø அகவல் ஓசை பெற்று வரும். Ø ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும் Ø ஆசிரியத்தளை மிகுதியாக வரும். Ø வெண்டளை,கலித்தளை விரவி வரும். Ø மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும் | 3 | |||||||||||||||||||||||||
37 |
இக்குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது. | 3 | |||||||||||||||||||||||||
பகுதி - 4 | |||||||||||||||||||||||||||
38அ |
முன்னுரை : உலகில சிறந்ததாக கருதப்படுவது பொருள்,. அதனை அடைய வேண்டிய வழிகள், அதன் தன்மைகள், பாதுகாப்பு போன்றவற்றை பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைக் காண்போம். பொருள் : ü ஒரு பொருளாக மதிக்காத்தவரையும் மதிப்புடையவராக செய்வது செல்வம் ü அஃது இல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை. பொருளின் தன்மை : ü தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும். இன்பத்தையும் தரும். ü தன் கைப்பொருளைக் கொண்டு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப் போரை காண்பது போன்றது. பொருள் ஈட்டல் : ü மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும். ü ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும். அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதை விட வேறு இல்லை. முடிவுரை : பொருளானது ஒருவரை மதிப்புடையவராக மாற்றுகிறது. அந்த பொருளை நல்வழியில் ஈட்ட வேண்டும் என்பதனை வள்ளுவர் பொருள் செயல் வகை என்னும் அதிகாரத்தில் கூறியுள்ள கருத்துகளைக் கண்டோம். | 5 | |||||||||||||||||||||||||
38ஆ |
முன்னுரை : தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது; தாயையிழந்து தனித்து இருக்கும் துயரம் பெரிது. வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்போம். மலர்படுக்கை : · கருணையன் தன் கைகளைக் குவித்து, பூமித்தாயிடம் தன்னை அன்னையின் உடலை அன்போடு காக்க வேண்டும் எனக் கூறினான். · தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன் மேல் மலர்களையும், தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான். கருணையன் துயரம் : · தாய் கூறிய சொற்களை மழைநீராக உட்கொண்டு, தாயின் மார்பில் ஒரு மணிமாலையாக வாழ்ந்தேன். · நெற்பயிர் மழைநீர் இல்லாமல் வாடி காய்ந்து விட்டத்தைப் போல நானும் தாயை இழந்து வாடுகிறேன். தாயை இழந்த வலி : · மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலர் போல என் மனம் வாடுகிறது. · அம்பினால் துளைக்கப்பட்டு உண்டான புண்ணின் வலியால் தவிப்பது போன்று வாடுகிறேன். · துணையைப் பிரிந்த பறவையைப் போல வாடுகிறேன். · தனித்து விடப்பட்ட காட்டில் வழி தெரியாமல் வாடுகிறேன். கருணையன் அறியாதவை: · உயிர் பிழைக்கும் வழி அறியேன் · உடலின் தன்மையை அறியேன் · உடலுக்கு வேண்டிய உணவைத் தேடும் வழி அறியேன் · காட்டில் செல்வதற்கான வழிகளை அறியேன். பறவைகள், வண்டுகளின் அழுகை : · கருணையன் புலம்பியதைக் கண்டு… · பல்வேறு இசைகளை இயக்கியது போன்று… · தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் · மணம் வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் · பறவைகளும், வண்டுகளும் அக்காட்டினிலே அழுவது போன்று கூச்சலிட்டன, முடிவுரை : துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனங்கள் மனிதத்தின் முகவரிகள். சாதாரண உயிரினங்களுக்கும் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, வீரமாமுனிவர், கருணையன் தன் தாய் எலிசபெத் மறைவிற்கு தம் பூக்கள் போன்ற உவமைகளாலும், உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை இங்கு காண்டோம். | 5 | |||||||||||||||||||||||||
39அ | அனுப்புதல் பெறுதல் ஐயா – விளித்தல் பொருள் கடித விளக்கம் இப்படிக்கு நாள், இடம் உறைமேல் முகவரி; பெறுதல் | 1 1 1 1 1 | |||||||||||||||||||||||||
39ஆ | ஊர், நாள் அன்புள்ள – விளித்தல் கடித விளக்கம் இப்படிக்கு உறை மேல் முகவரி: பெறுநர் | 1 1 1 1 1 | |||||||||||||||||||||||||
40 அ) |
| 5 | |||||||||||||||||||||||||
41 | கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக | 5 | |||||||||||||||||||||||||
42அ | 1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின் மதிப்பைக் குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல். | 5 | |||||||||||||||||||||||||
42ஆ | சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. உழவனின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி, பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. | 5 | |||||||||||||||||||||||||
43 | செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1. மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி. அவனுக்குள்ளே சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன் 2. மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது 3 மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும் 4. சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். 5. சங்ககால அறங்கள் இயல்பானவை. | 5 | |||||||||||||||||||||||||
பகுதி - 5 | |||||||||||||||||||||||||||
43அ | முன்னுரை நாட்டு விழாக்கள் விடுதலை போராட்ட வரலாறு நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு முடிவுரை இக்குறிப்புகளுக்கு ஏற்றவாறு விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். | 8 | |||||||||||||||||||||||||
43ஆ |
| 8 | |||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான். Ø அவன் மிக சோர்வாக இருந்தான். Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான். கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. | 8 | |||||||||||||||||||||||||
44ஆ | குறிப்புகளைக் கொண்டு நாடகப் பாங்கில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் | 8 | |||||||||||||||||||||||||
45அ | குறிப்புச் சட்டம்
முன்னுரை : விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம். பிறப்பும், கல்வியும் : பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் மார்ச் 17,1962 இல் பிறந்தார். பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம் · டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம். · . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம். · பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். விண்வெளிப் பயணம்: · 1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார், · சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார். வீர மரணம் : · 2003இல் ஜனவரி 16ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல் மீண்டும் பயணம் செய்தார். · பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர். விருது: · பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. · 2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும். | 8 | |||||||||||||||||||||||||
45ஆ |
| 8 | |||||||||||||||||||||||||
Can not Xth fourth revision key get pdf. Check and correct it sir. Thank you sir.
ReplyDelete12355
ReplyDelete12355
ReplyDeleteSuper
ReplyDeleteNithish
ReplyDelete