மாதிரி முழு ஆண்டுப் பொதுத் தேர்வு – 2025
மொழிப்பாடம் – தமிழ்
வகுப்பு : 8
நேரம் : 2.30 மணி மதிப்பெண் : 100
பகுதி – I
I ) சரியான விடையைத் தேர்வு செய்க. 10×1=10
1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____.
அ) வைப்பு ஆ) கடல் இ) பரவை ஈ) ஆழி
2. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு ______ விருது வழங்கியது.
அ) பத்மஸ்ரீ ஆ) பாரத ரத்னா இ) பத்மவிபூசண் ஈ) பத்மபூசன்
3. செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.
அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
4. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு _____.
அ) காவிரி ஆ) பவானி இ) நொய்யல் ஈ) அமராவதி
5. விழுந்ததங்கே ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
அ) விழுந்த + அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே ஈ) விழுந்தது + ஆங்கே
6. இன்றைய கல்வி _____ நுழைவதற்குக் கருவியாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
அ) வீட்டில் ஆ) நாட்டில் இ) பள்ளியில் ஈ) தொழிலில்
7. செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.
அ) தாயாக ஆ) தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக
8. பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் ______
அ. வலிமையற்றவர் ஆ. கல்லாதவர் இ. ஒழுக்கமற்றவர் ஈ. அன்பில்லாதவர்
9. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது _____ நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின் ஆ) உடற்பயிற்சியின் இ) உணவின் ஈ) வாழ்வின்
10. ‘எட்டா ம் வேற்றுமை ___________ வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.
அ) எழுவாய் ஆ) செயப்ப டுபொருள் இ) விளி ஈ) பயனிலை
II) கோடிட்ட இடங்களை நிரப்புக:- 5×1=5
11. ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் நகரம் _____.
12. அசை _____ வகைப்படும்.
13. விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.
14. பின்னலாடை நகரமாக _____ விளங்குகிறது.
15 நாம் நீக்கவேண்டியவற்றுள் ஒன்று _____ .
III) பொருத்துக:- 4×1=4
16. நிறை - பொறுமை
17. பொறை - விருப்பம்
18. மதம் - மேன்மை
19. மையல் - கொள்கை
பகுதி – II
IV) அடிபிறழாமல் எழுதுக:- 3 + 2 = 5
20. அ) “ஓடை யாட” எனத் தொடங்கும் ஓடை பாடலை அடிமாறாமல் எழுதுக. ( அல்லது )
ஆ) “ஒன்றே குலம்“ எனத் தொடங்கும் திருமூலர் பாடலை அடிமாறாமல் எழுதுக.
21, “ தக்கார் “ எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக
பகுதி – III
V) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 5×2=10
22. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?
23. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
24. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?
25. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?
26. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?
27. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?
28. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?
29. திரைத் துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?
VI) எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 4×2=8
30. மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
31. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
32. எழுவாய் வேற்றுமையை விளக்குக.
33. இரண்டு தொடர்களை ஒரே தொடராக்குக.
முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.
அ. வேடிக்கை - ___________________________________________
ஆ. உடன்பிறந்தார் - ___________________________________________
35. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
அ. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். __________________
ஆ. கடமையைச் செய் . __________________
VII) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 3×3=9
36. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
37 மனிதர்களிடம் குவிந்திருக்கும் பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவன யாவை?
38 புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
39. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?
40. நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?
41. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக
பகுதி – IV
VIII) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். 5×5=25
42.அ) இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்? ( அல்லது )
ஆ விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.
43. அ) இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
(அல்லது) ஆ) புத்தகம் வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
44. பின்வரும் மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
அ)ஆயிரங்காலத்துப் பயிர் - இயலாத செயல்.
ஆ) கல்லில் நார் உரித்தல் - ஆராய்ந்து பாராமல்.
இ) கம்பி நீட்டுதல் - இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
ஈ) கானல்நீர் - நீண்டகாலமாக இருப்பது.
உ) கண்ணை மூடிக்கொண்டு - விரைந்து வெளியேறுதல்
45. பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.
அ. சுட்டுத் திரிபு - __________________________.
ஆ. திசைப் பெயர்கள் - __________________________.
இ. பெயரெச்சம் - __________________________.
ஈ. உவமைத் தொகை - __________________________.
உ. நான்காம் வேற்றுமை விரி - __________________________.
46.கதை நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
1. தொண்டைமானிடம் ஒளவை தூது போதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும் செய்தியை அதியமான் ஒளவை க்குத் தெரிவித்தல்.
3. ஒளவைக்குத் தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
4. அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
5. தொண்டைமான் போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
6. தொண்டைமானிடம் ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்
பகுதி -V
IX) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 3×8=24
47. அ) வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.
( அல்லது ) ஆ) எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
48. அ) ‘ வெட்டுக்கிளியும் சருகுமானும் ‘ கதையைச் சுருக்கி எழுதுக ( அல்லது )
ஆ) திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதையைச் சுருக்கி எழுதுக
49. அ) நான் விரும்பும் கவிஞர் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.. ( அல்லது )
ஆ) முன்னுரை – சாலைப் பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – சாலை விதிகள் - முடிவுரை. குறிப்புகளைக் கொண்டு “ சாலைப் பாதுகாப்பு “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக
KINDLY WAIT FOR 10 SECONDS