மாதிரி அரசு பொதுத் தேர்வு -வினாத்தாள்-2- 2025
மொழிப்பாடம் – தமிழ்
பத்தாம் வகுப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1. வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் தாயைப் பிரிந்திருக்கும் மகள் ___________
அ) தாமரை இலை நீர் போல் ஆ) வாழையடி வாழை
இ) கண்ணினைக் காக்கும் இமை போல ஈ) மழை முகம் காணாப் பயிர்போல
2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா
3. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்ற வரிகள் இடம் பெற்ற நூல்
அ) கலித்தொகை ஆ) புறநானூறு இ) நற்றிணை ஈ) குறுந்தொகை
4. சங்க இலக்கியங்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல்___________
அ) பதிற்றுப்பத்து ஆ) நற்றிணை இ) புறநானூறு ஈ) பரிபாடல்
5. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ் – இக்குறளில் பயின்று வரும் அணி ________
அ) பொருள் பின் வருநிலையணி ஆ) உவமை அணி
இ) நிரல்நிறை அணி ஈ) உருவக அணி
6. மதராஸ் ஸ்டேட் என்ற பெயரைத் தமிழ்நாடு என மாற்றப்பட்ட ஆண்டு
அ. 1967 ஆ. 1976 இ. 1957 ஈ. 1978
7. எறும்புந்தன் கையால் எண்சாண் – இத்தொடரில் உள்ள எண்ணுப்பெயர்
அ) எறும்பு ஆ) தன்கை இ) எண் ஈ) சாண்
8. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று_________ ,______________வேண்டினார்.
அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக
இ) கருணையன் பூக்களுக்காக ஈ) எலிசபெத் பூமிக்காக
9 கவியரங்குகளே தனக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின – எனக் கூறுபவர்
அ) பாரதிதாசன் ஆ) கண்ணதாசன் இ) பெருஞ்சித்திரனார் ஈ) கலைஞர்
10. மேன்மை தரும் அறம் என்பது ______________________
அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ) புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது
11. ஒரு மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது______________
அ) உரைநடை ஆ) இலக்கணம் இ) இலக்கியம் ஈ) காப்பியங்கள்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள்
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்
தளரப்பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான்
12. மலர்கள் தரையில் நழுவும் எப்போது?
அ. அள்ளி முகர்ந்தால் ஆ. தளரப்பிணைத்தால்
இ. இறுக்கி முடிச்சிட்டால் ஈ. காம்பு முறிந்தால்
13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்கள்
அ. சாந்தமானதொரு – சுமக்கின்ற ஆ. பிரபஞ்சம் – கழுத்து
இ. மரணம் – ஒல்லித் தண்டுகள் ஈ. மலர்கள் - வாசல்
14. இக்கவிதை இடம் பெற்ற நூல் ?
அ. காற்றே வா ஆ. பூத்தொடுத்தல் இ. ஏர் புதிதா? ஈ. சித்தாளு
15. இக்கவிதையின் ஆசிரியர்
அ. வாணிதாசன் ஆ. உமா மகேஸ்வரி இ. கு.ப.ரா ஈ. நாகூர் ரூமி
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) சிலம்பிச் செல்வர் என்று போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம்.
ஆ) தமிழ்நாடு எத்துணைப் பொருள்வளமுடையதென்பது,அதன் விளைப்பொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும்.
17. வசன கவிதை – குறிப்பு வரைக.
18. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக. பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்
19. குறிப்பு வரைக :- அவையம்
20. ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?
21. செயற்கை – எனத் தொடங்கும் குறளை எழுதுக
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக: வருந்தாமரை
23. தடித்தத் தொடர்களின் வகைகளை எழுதுக.
அ) வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன்.
ஆ) பழகப் பழகப் பாலும் புளிக்கும்
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : மயங்கிய
25. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி சான்று தருக
26. குறிப்பு விடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
27. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
அ) அள்ளி இறைத்தல் ஆ) ஆறப்போடுதல்
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;-
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”
28. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்-இத்தொடர் காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. தமிழ்மொழிக்காக கலைஞர் செய்த சிறப்புகளில் நீங்கள் அறிந்த இரண்டினைக் கூறுக
30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணைசெய்கிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளான மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய கணினிக் கரங்கள் நீள்கின்றன. கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதை பாடும் ரோபோக்கள், மனிதரால் இயலாத செயலைச் செய்யும் ரோபோக்கள், ஆள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக் கடைகள் எனப் புதிது புதிதான வழிகளில் மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்ற தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு.
அ) உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது எது?
ஆ) மனிதர்கள் செய்யும் வேலைகள் யாவை?
இ) மனிதப் பணித்திறனைக் கூட்டுகின்ற தொழில் நுட்பம் யாது?
31. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32. வள்ளுவம் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
33. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.பா.ரா “ ஏர் புதிதா?” கவிதையில் கவி பாடுகிறார்?
34. அ ) “சிறுதாம்பு“–எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல். (அல்லது)
ஆ) ‘ நவமணி‘ – எனத் தொடங்கும் தேம்பாவணி பாடல்
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35 தன்மை அணியினை விளக்கி அதன் வகைகளைக் கூறுக.
36. வேலோடு நின்றான் இடுவென்றது போலும்
கோலோடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.
37.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க. ( அல்லது )
ஆ) “ முயற்சியே பெருமை தரும் “ என்பதனை உணர்த்தும் கருத்தினை ஆள்வினை உடைமை என்னும் அதிகாரம் வழியாக வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளை எழுதுக.
39. அ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக. ( அல்லது )
ஆ. மேல்நிலை வகுப்பு சேர்வதற்கு தேவைப்படும் மாற்றுச்சான்றிதழை பெற வேண்டி உன் தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.
40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக…..
41. சேலம் மாவட்டத்தில் எருமாபாளையத்தில் இலக்க எண் 392 இல் வசிக்கும் செந்தில் என்பவரின் மகள் ஜீவிதா என்பவர் தனது தந்தை கொடுத்த ரூ 500ஐ பெற்றுக் கொண்டு அங்குள்ள ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராக சேர விருபுகிறார். தேர்வர் தம்மை ஜீவிதாவாக எண்ணி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்க.
42. அ) தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தப் பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக் கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக. ( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க:-
குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
கம்பர் இராமனது வரலாற்றை தமிழில் வழங்கி ‘ இராமாவதாரம் ‘ எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப் பெறுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை. “ கல்வியில் பெரியவர் கம்பர் “, “ கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிக்களுக்கு உரியவர் கம்பர். சோழ நாட்டு திருவழுந்தூரைச் சார்ந்தவர். திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றார்.” விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்ப்பெற்றவர். சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலிய நூல்களை இயற்றியவர்.
( I ). கம்பர் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறார்?
( ii ). கம்பர் எழுதிய நூல்கள் யாவை??
( iii ) இராமனது வரலாற்று நூலுக்கு கம்பர் இட்ட பெயர் என்ன?
( iv ) கம்பரை ஆதரித்தவர் யார்?.
( v ) உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..
பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 3×8=24
43.அ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக. (அல்லது)
ஆ) காற்று பேசியது போல நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு எழுதுக.
44.அ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி. (அல்லது)
ஆ) தன் கலையை வளர்க்க தகுந்த வாரிசு உருவாகிற போது அவன் கொள்கிற மகிழ்ச்சி அளப்பரியது என்பதனை பாய்ச்சல் கதையின் மூலம் விவரிக்க.
45.அ) விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை வரைக. (அல்லது)
ஆ) பின்வரும் குறிப்புகளைக் கொண்டு போதை இல்லா புது உலகைப் படைப்போம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்புகள் : முன்னுரை – போதைப் பொருட்கள் – போதை பொருளும் சமுதாயமும் – போதை எனும் ஆயுதம் – உடல் நலப் பிரச்சனைகள் – முடிவுரை.
-------------------------------------------------------------------------------
எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.
வாட்ஸ் அப் சேனல் வாட்ஸ் அப் குரூப் டெலிகிராம் முகநூல்
JOIN NOW JOIN NOW JOIN NOW JOIN NOW
முயற்சி + பயிற்சி = வெற்றி
kindly wait for 10 seconds