மாதிரி
அடைவுத் தேர்வு-2- ஜனவரி- 2025
மொழிப்பாடம் – தமிழ்
பத்தாம் வகுப்பு
நேரம் : 2.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 80 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 80×1=80
1. உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும்
எனக் கூறும் நூல்
அ) காசிக்காண்டம் ஆ) விவேக
சிந்தாமணி இ) மலைபடுகடாம் ஈ) நற்றிணை
2.
‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது __
அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்
3.
காய்ந்த இலையும்,காய்ந்த
தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.
இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது___________________
அ)
இலையும்,சருகும் ஆ)
தோகையும் சண்டும் இ)
தாளும் ஓலையும் ஈ)
சருகும் சண்டும்
4. திறன்பேசியின் தொடு திரை
உடைந்தது – இதில் தொடுதிரைக்கான தொகை யாது?
அ) வினைதொகை ஆ) பண்புத் தொகை இ) உம்மைத் தொகை ஈ) வேற்றுமைத் தொகை
5. தாளாண்மை
என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு – இக்குறட்பாவில் இடம்
பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க
அ) தாளாண்மை – தகைமைக்கண்
ஆ) தாளாண்மை
– வேளாண்மை
இ)
தகைமைக்கண்
- தங்கிற்றே ஈ) வேளாண்மை - செருக்கு
6 காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________
அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது ஆ)
என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது
இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்
ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்
7.
மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து – பழைய சோற்றினைப் பற்றி கூறும் நூல்
அ)
குறுந்தொகை ஆ)
மலைபடுகடாம் இ) முக்கூடற்பள்ளு ஈ) விவேக சிந்தாமணி
8.
மெய்க்கீர்த்தி என்பது
அ) புலவர்களால்
எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்படுபவை
ஆ) மன்னர்களின் புகழை ஓலைச்சுவடிகளில்
எழுதி வைப்பது.
இ) ஒருவரது புகழைப் புலவர்கள் புகழ்ந்து
பாடும் இலக்கிய வகை
ஈ) அறக்கருத்துகள் அடங்கிய நூல்
9.
‘ சிவப்புச் சட்டை ‘ பேசினார் – அடிக்கோடிட்ட சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
10.
‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ) கூவிளம் புளிமா நாள் இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா
தேமா பிறப்பு
அ)
வைகறை,நடைபயிற்சி,பத்திரிக்கை,தேநீர் ஆ) அதிகாலை,
நடந்து, தேநீர், பத்திரிக்கை
இ)
காலை, நடை, தேநீர், செய்தி ஈ) வைகறை,
நடைபயிற்சி,தேநீர்,செய்தித்தாள்
12.
‘ கண்ணகி உண்டான் என்பது ------------- வழு
அ)
திணை ஆ) காலம் இ) பால் ஈ) இடம்
13.
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது
அ) உவமை அணி ஆ) வேற்றுமைத் தொகை இ) இரட்டுற மொழிதல் ஈ) தீவக அணி
14.
ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு பொருள்
கொள்வது__
அ)
ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ) கொண்டுகூட்டுப்
பொருள்கோள்
இ)
நிரல் நிறைப் பொருள்கோள் ஈ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்
15.
தா எனும் வினையடியின் பெயரெச்சத் தொடரைக் காண்க.
அ) தந்து சென்றான் ஆ) தந்தான் இ) தந்த அரசர் ஈ) அரசே தருக
அ)
வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ)
உரிச்சொல்
17.
கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவு தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆ) அளவுக்கு மீறினால்
அமுதமும் நஞ்சு
இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஈ)
ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்
18.
பொருத்தமான வண்ணச் சொல்லைக் கொண்டு நிரப்புக.
_________
மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
அ) கருத்த ஆ) சிவந்த இ) வெள்ளந்தி ஈ)
இரக்க
19.
கருணையன் என்பவர் _____________
அ) வீரமாமுனிவர் ஆ) தூய துறவி இ) அருளப்பன் ஈ)
சாந்தா சாகிப்
20.
நாடும்
மொழியும் நமதிரு கண்கள் – எனப் பாடியவர்
அ. பாரதிதாசன் ஆ. இளங்கோவடிகள் இ. கம்பர் ஈ. பாரதியார்
21.
குடிமக்கள் காப்பியம் எனச் சிறப்பிக்கப்படும் நூல்
அ) குண்டலகேசி ஆ) சிலப்பதிகாரம் இ) வளையாபதி ஈ) மணிமேகலை
22.
“ கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும் “ – பாரதியார். - இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள வழுவமைதி
அ) திணை வழுவமைதி ஆ) பால் வழுவமைதி இ) மரபு வழுவமைதி ஈ) கால வழுவமைதி
23.
குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___
அ) பி.ஜே.பொன்னையா ஆ) மா.பொ.சி இ) நேசமணி ஈ) மணிவர்மன்
24.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
1)
வினைமுற்று - I ) கெடு
2.
தொழிற்பெயர் - ii) கட்டு
3.
முதனிலைத் தொழிற்பெயர் - iii) எய்தல்
4.
வினையடி - iv)
வந்தான்
அ) (1) – (iv) (2) – (iii) (3)
– (ii) (4) – (i)
ஆ) (1) – ( iii) (2) – ( i) (3)
– (iv) (4) – (ii)
இ) (1)
– (iv) (2) – (iii) (3) – (i) (4) – (ii)
ஈ) (1) – ( i) (2) – (iii) (3) – (ii) (4)
– (iv)
25.
இருவர் உரையாடுவது போன்ற ஓசை தருவது __________
இ)
செப்பலோசை ஈ) தூங்கலோசை
26
பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) பெயரெச்சத் தொடர் ஆ) வினையெச்சத் தொடர் இ) வேற்றுமைத் தொடர் ஈ) விளித் தொடர்
27.
ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் அனைத்து இடங்களிலும் சென்று பொருந்தி பொருளை விளக்குவது
_____ அணி
அ)
தற்குறிப்பேற்ற அணி ஆ) தீவக அணி இ) நிரல்நிறையணி ஈ) தன்மையணி
28. தந்தையை இழந்த தன் மகளை தாய் மிகவும்
பாதுகாப்பாக வளர்த்து வந்தாள் – இத்தொடருக்குப் பொருத்தமான உவமையைக் காண்க
அ)
தாமரை இலை நீர் போல ஆ) மழை முகம்
காணாப் பயிர் போல
இ. கண்ணினைக் காக்கும் இமை போல ஈ.) சிலை மேல் எழுத்து போல
29. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று
கொஞ்சுவது
அ) பால்
வழுவமைதி ஆ)
திணை வழுவமைதி இ) மரபு வழுவமைதி ஈ) கால வழுவமைதி
30. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம்
அமைந்துள்ள நகரம்.
அ) மதுரை ஆ)
புகார் இ)
வஞ்சி ஈ)
முசிறி
31. காசினியில் இன்று வரை அறிவின் மன்னர்
கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் எனக் குறிப்பிடுபவர்
_________
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) குலோத்துங்கன் ஈ) தனிநாயகம்.
32. கீதாஞ்சலி என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்
அ) ராகுல் சாங்கிருத்யாயன் ஆ) கணமுத்தையா இ) யூமா வாசுகி ஈ) இரவீந்தநாத் தாகூர்
33.
இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும்,எழுதுவதும் _
அ) வழாநிலை ஆ) வழுநிலை இ) வழுவமைதி ஈ) கால வழுவமைதி
34. .” சொல்லரும் சூழ் பசும் “ – இப்பாடலில்
பயின்று வரும் பொருள்கோள் யாது?
அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஆ)
நிரல் நிறைப் பொருள்கோள்
இ) கொண்டுகூட்டுப் பொருள்கோள் ஈ) அளைமறிபாப்புப் பொருள்கோள்
35.
சரியான கருத்தைக் கண்டறிக.
(
I ) தான் மட்டும் உண்பது என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை
(II)
விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
(III
) நடுஇரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்பத்
தலைவிக்கு உண்டு.
அ)
(I) சரி ஆ) (ii) (iii) – சரி இ) மூன்றும் சரி ஈ) மூன்றும் தவறு
36.
கெழீஇ – இச்சொல்லில் உள்ள அளபெடை
அ)
உயிரளபெடை ஆ) ஒற்றளபெடை இ) செய்யுளிசை அளபெடை ஈ) சொல்லிசை அளபெடை
37. திருவள்ளுவர் அறிவுடையார் எல்லாம் உடையார்
என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.இத்தொடருக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டத் தொடரைத்
தேர்க.
அ) திருவள்ளுவர்,’ அறிவுடையார் எல்லாம்
உடையார்’என்று’அறுதியிட்டுக்’ கூறுகிறார்.
ஆ) திருவள்ளுவர்,’அறிவுடையார்
எல்லாம் உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
இ) திருவள்ளுவர்,” அறிவுடையார்,எல்லாம்
உடையார்” என்று,அறுதியிட்டுக் கூறுகிறார்.
ஈ) ‘திருவள்ளுவர்’,’அறிவுடையார் எல்லாம்
உடையார்’ என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
38. குண்டலமும் குழைக்காதும் – இலக்கணக் குறிப்பு தருக
அ) எண்ணும்மை ஆ) உம்மைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) வினைத்தொகை
39. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத்
தேர்க.
தராசின்
இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்ட் பிஸ்கட்டுகளை ஈக்வலாக வையுங்கள்.
அ) தங்க பிஸ்கட்டுகளைச் சரியாக ஆ) தங்கக் கட்டிகளை ஈக்வலாக
இ) தங்கக் கட்டிகளை ஈடாக ஈ) தங்கக் கட்டிகளை முறையாக
40.
தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ)
திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
41. “ நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்” – பாரதியார்
இப்பாடலில்
இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) வானத்து – வைத்தாங்கே ஆ)
காற்றையும் – குடித்தொரு
இ) நிலாவையும்
– குலாவும்
ஈ)
வைத்தாங்கே – வெறிப்படைத்தோம்
42.
‘ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கிறதா? ‘ என்று நூலகரிடம் வினவுதல்
அ) அறிவினா ஆ)
கொளல் வினா இ) அறியா வினா ஈ) ஏவல் வினா
43.
கொளுத்தும்
வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது. – என்ற நயமிகு தொடருக்கு
ஏற்ற தலைப்பு.
அ)
வனத்தின் நடனம் ஆ)
மிதக்கும் வாசம் இ)
மொட்டின் வருகை ஈ)
காற்றின் பாடல்
44.
‘
சாகும் போது தமிழ் படித்துச் சாக வேண்டும் -
என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று
கூறியவர்..
அ)
திரு.வி.க ஆ)
க.சச்சிதானந்தன் இ)
நம்பூதனார் ஈ)
தனிநாயக அடிகள்
45.
‘
மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?
அ) தமிழழகனார் ஆ)
கம்பர் இ) தேவநேயப் பாவாணர் ஈ)
வைரமுத்து
46.
‘ செங்காந்தள் ‘ என்ற சொல்லில் அமைந்துள்ள தொகையைத் தேர்க.
அ) உவமைத் தொகை
ஆ) பண்புத் தொகை இ) உம்மைத்
தொகை ஈ) வேற்றுமைத் தொகை
47.
பரிபாடல்
அடியில் ‘ விசும்பும் இசையும் ‘ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வானத்தையும்,
புகழையும்
இ)
வானத்தையும் பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
48.
‘
காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________
அ)
வினைத்தொகை ஆ) உம்மைத்தொகை
இ) பண்புத்தொகை ஈ) அன்மொழித்தொகை
49. தொழிலைச் செய்யும் கருத்தாவைக்
குறிப்பது _________________
அ)
தொழிற்பெயர் ஆ) முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
இ)
முதனிலைத் தொழிற்பெயர் ஈ) வினையாலணையும்
பெயர்
50. எழுகதிர்,முத்துப்பல் – இச்சொற்களில்
மறைந்துள்ள தொகைகள் முறையே _______
அ)
வினைத்தொகை,பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை,வினைத்தொகை
இ)
உவமைத்தொகை, வினைத்தொகை ஈ) வினைத்தொகை,
உவமைத்தொகை
51. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும்
அமைந்த பாவினம்
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
52. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக்
கற்றுக் கொண்டவர்________
அ)
தமிழழகனார் ஆ) அப்பாத்துரையார்
இ)
தேவ நேய பாவாணர் ஈ) இரா.இளங்குமரனார்
53. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி – இத்தொடர்கள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும்,தமிழெண்களையும்
குறிப்பிடுக.
அ)
ஆலமரம்,வேப்பமரம் – ௫ ௧ ஆ)
ஆலமரம்,வேலமரம் - ௪ ௨
இ)
அரசமரம்,வேங்கைமரம் - ௧ ௨
ஈ) வேப்பமரம், ஆலமரம்
– ௪ ௬
54. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு
காக்க என்று _________,______ வேண்டினார்.
அ)
கருணையன்,எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத்,தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ)
எலிசபெத, பூமிக்காக
55. “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை
அகற்றி மதிக்கும் தெருளை “ – என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
அ)
தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
56. பாரதியார் காற்றை’ மயலுறுத்து
‘ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்____________
அ)
மணம் வீசும் காற்றாய் நீ வா ஆ) மனதை
மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா
இ)
மயிலாடும் காற்றாய் நீ வா ஈ) மகரந்தம்
சுமந்து கொண்டு நீ வா
57. இலையுதிர் காலம் ___________ சருகாயின!
மழைக்காலம்
__________ தழைத்தன!
சருகுகளோ
செழுமையான உரங்களாயின!
-
புதுக்கவிதைக்குப்
பொருத்தமான எதுகை,மோனைச் சொற்களை இட்டு நிரப்புக.
அ)
மரங்கெல்லாம்,கிளைபரப்பின ஆ)
காடெல்லாம்,வளர்ந்தன
இ)
இலைகளெல்லாம், மரங்கெல்லாம் ஈ) மலையெல்லாம்,
முளைத்தன
58.
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.
இருக்கும்
போது உருவமில்லை – இல்லாமல் உயிரினம் இல்லை
அ.
நறுமணம் ஆ. காடு இ. காற்று
ஈ. புதுமை
59. ‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான
ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச்
சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.
அ)
குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலை – நல் வினை, தீ வினை
ஆ)
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை – உயர்திணை,அஃறிணை
இ)
குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம் – அறம்,பொருள்,இன்பம்
ஈ)
குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல் – பனை, திணை
60. பழமொழியைப் பொருத்துக.
அ)
ஆறில்லா ஊருக்கு - 1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்
ஆ)
உப்பில்லாப் பண்டம் - 2.
நூறு வயது
இ)
நொறுங்கத் தின்றால் - 3.
குப்பையிலே
ஈ)
ஒரு பானை - 4. அழகு பாழ்
அ)
அ-4.ஆ-3,இ-2,ஈ-1 ஆ) அ-3,ஆ-2,இ-4,ஈ-1
இ)
அ-2,ஆ-4,இ-1,ஈ-3 ஈ) அ-1,ஆ-2இ-3,ஈ-4
61. சுதந்திர
இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது ___________
அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு
முதலீடுகள்
62.
‘ உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ யாரிடம் யார் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்
இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம்
மருத்துவர்
63.
மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க. ஆறபோடுதல்
அ) தாமதப்படுத்துதல் ஆ) ஆற்றில் போடுதல் இ) ஆற வைத்தல் ஈ) ஆற்றில் இறங்குதல்
64.
ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ.
குலா ஆ. இலா இ. சீலா ஈ.
துலா
65. வெஃஃகுவார்க்கில்லை,உரனசைஇ
– இச்சொற்களில் உள்ள அளபெடைகள்
அ) ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை ஆ) இன்னிசை அளபெடை,சொல்லிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை
66.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும், பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன்
என்றும் பாராட்டப்படுவோர் –
அ)
உதியன் ; சேரலாதன் ஆ) அதியன் ; பெருஞ்சாத்தன் இ) பேகன்; கிள்ளிவளவன்
ஈ)
நெடுஞ்செழியன் ; திருமுடிக்காரி
67. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்
‘ இவ்வடி குறிப்பது
அ. காலம் மாறுவதை ஆ.
வீட்டைத் துடைப்பதை
இ. இடையறாது அறப்பணி செய்தலை ஈ. வண்ணம் பூசுவதை
68. ‘ சென்றிடுவீர்
எட்டுத் திக்கும் – கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து
அ. பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட
வேண்டும்.
ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற
வேண்டும்.
இ. உலகெங்கும் காணப்படும் செல்வங்கள்
தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்
ஈ. கலைச் செல்வங்களை உலகம் முழுவதும்
பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
69.
‘ பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி
அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ. கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
இ. கடல் நீர் ஒலித்தல் ஈ. கடல் நீர்
கொந்தளித்தல்
70.
“ காலின் ஏழடிப் பின் சென்று “ – என்னும் பொருநராற்றுப் படை
உணர்த்தும் செய்தி
அ.
விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்
ஆ.
விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்
இ.
எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்
ஈ.
ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்
71.
‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதராபுரிச் சங்கம் வைத்தும்’ -என்னும் சின்னமனூர் செப்பேட்டுக்
குறிப்பு உணர்த்தும் செய்தி.
அ. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது.
ஆ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
இ. சங்கம் மருவி காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது
ஈ. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது.
72.
“ மருந்தே ஆயினும் விருந்தோடு உண் “ என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்
அ. குறுந்தொகை ஆ. கொன்றை வேந்தன் இ. திருக்குறள் ஈ.
நற்றிணை
73.
பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ. கொண்டல் – 1. மேற்கு ஆ. கோடை – 2. தெற்கு
இ. வாடை – 3. கிழக்கு ஈ. தென்றல் – 4. வடக்கு
அ. 1,2,3,4 ஆ. 3.1.4,2 இ.
4,3,2,1 ஈ. 3,4,1,2
74.
தமிழ்த்தொண்டு என்னும் தொடர் ________
அ)
இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஆ) உருபும்
பயனும் உடன் தொக்கத் தொகை
இ)
அன்மொழித்தொகை ஈ)
வேற்றுமைத்தொகை
75. திணை வழுவமைதி –
அ)
‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.
ஆ)
இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.
இ)
‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.
ஈ) ‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக்
குறிப்பிடுவது
76. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும்
பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.
தலைப்பு
: செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்
: 1. கண்காணிப்பு கருவி,அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
2. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச்
சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
அ)
குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆ)
தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இ)
தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத
தலைப்பு வழங்கப்பட்டுள்ளது
77. ‘ கேட்டவர் மகிழப் பாடிய பாடல்
இது ‘ – தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையாலணையும் பெயரும் முறையே ___________
அ)
பாடிய ; கேட்டவர் ஆ) பாடல் ; பாடிய இ) கேட்டவர் ; பாடிய ஈ) பாடல் ; கேட்டவர்
78. அருந்துணை
என்பதைப் பிரித்தால்_______________
அ)
அருமை + துணை ஆ) அரு + துணை இ) அருமை + இணை ஈ) அரு + இணை
79.
குளிர் காலத்தைப் பொழுதாக் கொண்ட நிலங்கள்______________________________________
அ)
முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள் ஆ)
குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள்
இ)
குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ) மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்
80.
‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன்
குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –
அ)
திருப்பதியும்,திருத்தணியும் ஆ) திருத்தணியும்,திருப்பதியும் இ) திருப்பதியும் திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும்
பழனியும்
பகுதி – 2
( மதிப்பெண் – 20 )
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க
20×1=20
ஆ) பாடலைப் படித்து வினாக்களுக்கு (81,82,83,84) விடையளிக்க:-
செந்தீச்
சுடரிய ஊழியும்; பனியொடு
தண்பெயல்
தலைஇய ஊழியும்; அவையிற்று
உள்முறை
வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும்
பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு
ஆகிய இருநிலத்து ஊழியும்
81.இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ தண்பெயல்‘
என்ற சொல்லின் பொருள்
அ.
கோடை ஆ. பூமி இ. குளிர்ந்த மழை ஈ. வானம்
82. செந்தீ - இலக்கணக் குறிப்பு தருக
அ.
பண்புத் தொகை ஆ, வினைத் தொகை இ. உவமைத் தொகை ஈ. உம்மைத்
தொகை
83. இப்பாடலை இயற்றியவர்
அ.நப்பூதனார் ஆ. குமரகுருபரர் இ.
அதிவீர ராம பாண்டியர் ஈ கீரந்தையார்
84. இப்பாடல் இடம் பெற்ற நூல் ___
அ.
கம்பராமாயணம் ஆ. முல்லைப்பாட்டு இ. பரிபாடல் ஈ. சிலப்பதிகாரம்
இ) பாடலைப் படித்து வினாக்களுக்கு(85,86,87,88)
விடையளிக்க:-
.
‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “
85.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு இ.
குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
86.
பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி
அ. இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி
இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல் நிறை அணி
87.
தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது
அ. சங்கப் பலகை ஆ. கடல் இ.
அணிகலன் ஈ. புலவர்கள்
88.
தொழிற்பெயர் அல்லாத சொல்
அ. துய்ப்பதால் ஆ. அணிகலன் இ. மேவலால் ஈ.
கண்டதால்
ஈ) பாடலைப் படித்து வினாக்களுக்கு
(89,90,91,92) விடையளிக்க:-
“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”
89.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. முல்லைப்பாட்டு ஆ. மலைபடுகடாம் இ. நற்றிணை ஈ. குறுந்தொகை
90.
நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்
அ. சிறிய உலகம் ஆ. தலையாய உலகம் இ. நனைந்த உலகம் ஈ. அகன்ற உலகம்
91.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ. பெரும்பெயல், பொழிந்த ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல்
இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு ஈ. நீர்செல,நிமிர்ந்த
92.
பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை
அ. தடக்கை ஆ. வளைஇ இ. பெரும்பெயல் ஈ.
கொடுஞ்செலவு
உ) பாடலைப் படித்து வினாக்களுக்கு
(93,94,95,96) விடையளிக்க:-
“ விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே,”
93.
இப்பாடல் இடம் பெற்ற நூல் ___________
அ.
முல்லைப்பாட்டு ஆ. குறுந்தொகை இ. காசிக்காண்டம் ஈ. மலைபடுகடாம்
94.
இலக்கணக் குறிப்பு தருக:- உரைத்தல்
அ.
வினைத்தொகை ஆ. பண்புத்தொகை இ. தொழிற்பெயர் ஈ. அன்மொழித்தொகை
95.
பாடலில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல் பண்புகள்
______
அ. 7 ஆ. 8 இ. 9 ஈ. 10
96.
இப்பாடலின் ஆசிரியர்
அ)
அதிவீரராம பாண்டியன் ஆ) பெருஞ்சித்திரனார் இ) பாரதியார் ஈ) குலசேகரராழ்வார்
ஊ) பாடலைப் படித்து வினாக்களுக்கு (97,98,99,100)
விடையளிக்க:-
வண்மையில்லை யோர்வறுமை யின்மையால்
திண்மையில்லை நேர்நெறுக ரின்மையால்
உண்மையில்லை பொய்யுரை யிலாமையால்
வெண்மையில்லை பல்கேள்வி மேவலால்
97).இப்பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை
எடுத்தெழுதுக.
அ)
வண்மை – வறுமை ஆ) திண்மை – நேர்மை
இ) உண்மை - வெண்மை ஈ) பொய் – பல்கேள்வி
98) பாடலின் மோனைச் சொற்களைக் குறிப்பிடுக
அ) வண்மை – வெண்மை ஆ) திண்மை - நேர்மை
இ)
உண்மை - வெண்மை ஈ) பொய் – திண்மை
99) புகழுரை - பிரித்து எழுதுக
அ)
புகழ் + இரை ஆ) புகழ் + உரை இ) புகழு + உரை ஈ) புகழு
+ இரை
100) இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) நீதி வெண்பா ஆ) கம்பராமாயணம் இ) சிலப்பதிகாரம்
ஈ)
தேம்பாவணி