10TH-TAMIL-HALF YEARLY EXAM - TIRUNELVELI-ANSWER KEY-2024

  

பத்தாம் வகுப்பு

அரையாண்டுத் தேர்வு - 2024

தமிழ்

திருநெல்வேலி  மாவட்டம்

விடைக்குறிப்பு

 திருநெல்வேலி– அரையாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                  மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) பாடல்;கேட்டவர்

1

2.

இ) அன்மொழித் தொகை

1

3.

ஈ) சிற்றூர்

1

4.

அ) கூவிளம் தேமா மலர்

1

5.

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

1

6.

இ) அறியா வினா, சுட்டு விடை

1

7.

ஆ) கலைஞர் என்ற சிறப்பு பெயர் எப்போது வழங்கப்பட்டது?

1

8.

ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

9.

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது

1

10.

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாத்தல்

1

11.

இ) உருவகம்

1

12 .

ஆ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

1

13 .

ஆ) சிற்றிலக்கியம்

1

14 .

ஈ) குமரகுருபரர்

1

15

இ) காலில் அணிவது

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

17.

·         வசனம் + கவிதை = வசன கவிதை.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

18.

·         வருக, வணக்கம்.

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்.

2

19

Ø  அறம் கூறும் மன்றங்கள்.

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது.

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்

2

20

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்.

2

21.

. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

   மெய்ப்பொருள் காண்ப தறிவு.

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

வரும் + தாமரைவருகின்ற தாமரை மலர்.

வரும் + தா + மரைதாவுகின்ற மான் வருகிறது.

வருந்தா + மரைதுன்புறாத மான்.

பல + கையொலிபல கைகளால் சேர்ந்த ஒலி.

பலகை + ஒலிபலகையால் ஏற்படும் ஒலி.

2

23

v  கவிஞர்       – பெயர்ப் பயனிலை

v  சென்றார்     – வினைப் பயனிலை

v  யார்?            - வினா பயனிலை

1

1

24.

அ) 3          

ஆ) தன்மை,முன்னிலை,படர்க்கை

2

25

மயங்கியமயங்கு + இ (ன்) + ய் + அ

மயங்குபகுதி

இ(ன்)இறந்த கால இடைநிலை;

ன்’-புணர்ந்து கெட்டது.

ய்உடம்படு மெய்பெயரெச்சவிகுதி

1

1

26

வெண்கலம்,செம்பு பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக் கொல்லர்,ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொற்கொல்லர்,இரத்தின வேலை செய்ப்வர்,தையற்காரர், தோல் பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

1

1

27

அ) வட்டார இலக்கியம்

ஆ) மறுமலர்ச்சி

1

1

28

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

பகுதி – 3 – பிரிவு - 1

29

·         இரவில் வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும் உள்ளார்களா என்பதற்காக வினவப்பட்டது.

·         விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இது.

3

30

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

31

அ) பரதவர்            ஆ) உமணர்

இ) வலைச்சியர்

1

1

1

பகுதி -3 / பிரிவு - 2

32

·         மேல் மண் பதமாகிவிட்டது.

·         வெள்ளி முளைத்திடுது.

·         காளைகளை ஓட்டி விரைந்து செல்.

3

33

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது.

1. முத்தினைத் தருகிறது.

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது.

2. மூன்று சங்குகளைத் தருகிறது.

3. ஐம்பெருங்காப்பியங்கள்.

3. பெரும் வணிகக் கப்பல்.

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது.

3

34அ

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே               - அதிவீரராம பாண்டியர்

3

34ஆ

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

·         வினா ஆறு வகைப்படும்

·         அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

3

36

சீர்

அசை

வாய்பாடு

குற்-றம்

நேர்+ நேர்

தேமா

இல-னாய்க்

நேர்+நேர்

தேமா

குடி-செய்-து

நிரை+ நிரை+நேர்

கருவிளங்காய்

வாழ்–வா-னைச்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

சுற்-றமாச்

நேர்+ நிரை

கூவிளம்

சுற்-றும்

நேர்+ நேர்

தேமா

உலகு

நிரைபு

பிறப்பு

3

37

சொல்லையும், பொருளையும்  வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

எ.கா

        அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

          பண்பும் பயனும் அது

அணிப் பொருத்தம் :

        இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும்.

3

பகுதி - 4

38

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

        கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார்.

·         மன்னன் அதனை பொருட்படுத்தாமல்  இகழ்ந்தார்.

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்.

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்.

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள   வேண்டினான்.

புலவனுக்குச் சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்.

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்.

முடிவுரை :

        மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார்,

5

38ஆ

Ø  இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம், ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது.

Ø  யானைகள் மட்டும் பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை.

Ø  சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.

Ø  ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை.

Ø  நீர் அடைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை.

Ø  மாங்காய்கள் வடுப்படுகிறது. மக்கள் வடுபடுவதில்லை.

Ø   நெற்போர் மட்டுமே இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை.

5

39அ

சேலம்

03-03-2024

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,  சேலம்.

5

39ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

நாட்டு விழாக்கள்

விடுதலைப் போராட்ட வரலாறு

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு, உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன், தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

கலை என் சிறப்பைப் பற்றி எழுது என்றது

கலைஞர் என் கலையைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் கலையே உயிர் என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

·         ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியுள்ளது.

·         நோய் குணமாக இந்த மருத்துவரைக் காணுங்கள் என வழிகாட்டுகின்றனர்.

·         மாணவர்களுக்கு கல்வி வழங்கக் கூடிய கல்வி நிலையங்கள், தொண்டு நிறுவனங்களை வழிகாட்டுகின்றனர்.

·         ஏழை, எளியோருக்கு அரசின் உதவிகளைப் பெற வழிகாட்டுகின்றனர்,

·         இன்றைய வழிகாட்டுதல் சூழலில் தன்னார்வ நிறுவனங்கள் பங்கு அளப்பரியது.

·         இன்றைய இணைய வழி வழிகாட்டுதல்கள் எல்லாம் பணம் பெறும் நோக்கமாக மாறி வருகிறது.

5

42ஆ

கலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவரது பங்களிப்புகள் பரந்த அளவில் உள்ளன; கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள். திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். இலக்கியம் மட்டுமின்றி கலை மற்றும் கட்டிடக்கலை மூலமாகவும் கருணாநிதி தமிழ் மொழிக்கு பங்காற்றியுள்ளார். திருக்குறளைப் பற்றி கலைஞர் எழுதிய குறளோவியம் போல், வள்ளுவர் கோட்டம் கட்டியதன் மூலம் சென்னையில், திருவள்ளுவருக்கு கட்டிடக்கலையை அளித்தார். கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருணாநிதி நிறுவி  மரியாதை செய்துள்ளார்.

5

 

 

 

பகுதி - 5

43

செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

குறிப்புச்சட்டம்

தமிழின் இலக்கிய வளம்

கல்வி மொழி

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

அறிவியல் கருத்துகள்

பிறதுறைக் கருத்துகள்

தமிழுக்குச் செழுமை

தமிழின் இலக்கிய வளம்

        உலக இலக்கியங்களில் தமிழின் இலக்கியப் பழமையும் பெருமையும் அழிக்கமுடியாது. தமிழின் இலக்கிய வளம் மேலும் சிறக்கப் பிறமொழிகளில் சிறந்து விளங்கும் நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும்.

கல்வி மொழி :

        மொழிபெயர்ப்பை கல்வி ஆக்குவதன் மூலம், தமிழ்மொழியின் பெருமைகளை பிற மொழியினரும். பிறமொழியின் சிறப்புகளை தமிழ் மொழியிலும் அறிந்து கொள்ள முடிகிறது.

பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்:

·         பிறமொழிகளின் இலக்கியங்களை அறிந்துக் கொள்ளவும், புதிய படைப்புகளை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது.

·         தாகூர் கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தப் பின் தான் நோபல் பரிசு கிடைத்தது.

அறிவியல் கருத்துகள்

·         மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பிறதுறைக் கருத்துகள் :

·         கல்வி,இலக்கியம், மருத்துவம் மட்டுமல்லாது பிற துறைகளும் மொழிப்பெயர்ப்பின் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது.

·         பிற மாநில மொழிபடங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

தமிழுக்குச் செழுமை:

        தேமதுரத் தமிழ் எங்கும் பரவ வேண்டும். அதற்கு மொழிபெயர்ப்பு அவசியம் வேண்டும்.

8

43ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். இதனால் அவர்களை காலங்களை வகுத்து முறையாக வாழ்ந்தனர். அவ்வகையில் முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

·         திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

·         அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை உருவாக்குகிறது வானம்.

மழைப் பொழிவு :

·         கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

·         வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

·         முது பெண்கள் மாலை வேளையில் காவல் உடைய ஊர்ப் பக்கம் சென்றனர்.

·         முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

·         முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

·         இது விரிச்சி என அழைக்கப்படும்.

·         விரிச்சி :

o   ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஊர்ப்பக்கம் சென்று தெய்வத்தின் முன் தொழுது நிற்பர். அயலாரின் சொல்லைக் கூர்ந்து கேட்பர். அவர்கள் நல்ல சொற்கள் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும், தீமொழிக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

ஆற்றுப்படுத்துதல் :

·           சிறுதாம்பில் இளங்கன்று கட்டப்பட்டு இருந்தது. பசியால் வாடி நின்றது.

·           இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்.

·           உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் அழைத்து வருவர் எனக் கூறல்.

·           முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

·           உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        முல்லைப்பாட்டின் மூலம் கார்காலம் என்பது மிகுந்த மழைப்பொழிவு தரும் மாதங்களாக இருந்தததையும், அம்மாதங்களில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதனையும், கார்காலத்தில் மாலைப் பொழுதில் நடைபெறும் நிகழ்வுகள், விரிச்சி என்பதன் பொருள், தலைவியை எவ்வாறு முதுமக்கள் ஆற்றுப்படுத்துகின்றனர் என்பதனையும் அறிந்து கொண்டோம்.

8

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

ஸ்டீபன் ஹாக்கிங்

பேரண்டம்

கருந்துளைகள்

கருந்துளை கோட்பாடுகள்

தலைவிதி

திரும்புதல்

முடிவுரை

முன்னுரை :

          அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது. ஐயங்களை நீக்குகிறது. தவறான புரிதல்களை நீக்குகிறது. எண்ணங்களை மாற்றுகிறது. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருடன் விண்வெளிப் பயணம் செய்த, அனுபவத்தையும், கிடைத்த கருத்தையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஸ்டீபன் ஹாக்கிங்

        இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் 1963இல் பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்னும் சில திங்களே உயிரோடு இருப்பார் என கூறிய மருத்துவ உலகத்திற்கு மிரண்டு போகுமளவு 53 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவர்தான் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என புகழப்படும் ஸ்டீபன் ஹாக்கிங். அவருடன் நாங்கள் விண்வெளி பயணம் மேற்கொள்வது ஓர் அரிய வாய்ப்பு.

பேரண்டம் :

        ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிக்கு செல்ல தயாரான விமானத்தில் ஏறினோம். பூமியை விட்டு அண்டப் பகுதிக்கு செல்லுகையில், இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கானச் சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை”  என்றார்.

விண்மீன்கள்:

        நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே செல்கிறது என விளக்கினார்.

கருந்துளைகள்:

        “ சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்து விடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருத்துளைகள் பற்றியதும்” என்றார். அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர் ,” விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஒளி கூடத் தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்றார்.” என்பதனை ஹாக்கிங் எங்களுக்கு விளக்கினார்.

கருந்துளை கோட்பாடுகள் :

        ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளி பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் அதே சமயம் ஆச்சரியமூட்டுவதாகவும் அமைந்தது. அவர் கருந்துளைப் பற்றி மேலும் எங்களுக்கு விளக்கினார்.

Ø  கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது.

Ø  கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Ø  கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை.

Ø  ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும், அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்துவிடும்.

தலைவிதி :

        இன்று உங்களுடன் நாங்கள் பேசுவது மட்டும் இல்லாமல் உங்களோடு விண்வெளியில் பயணம் செய்வது என்பது எங்கள் பாக்கியம். என் நண்பனை அழைத்தும் அவன் வர இயலவில்லை. அது அவன் தலைவிதி என்றேன். அதற்கு அவர், தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்?எனக் கேட்டு எங்களைச் சிந்திக்க வைத்தார்.

திரும்புதல் :

        ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அண்டப்பகுதிகளின் காட்சிகளும், அதற்கு அவர் தம் விளக்கங்களும் எங்கள் வாழ்வில் என்றும் மறக்க இயலாது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.

முடிவுரை :

         ஸ்டீபன் ஹாக்கிங் வியத்தக்க மனிதர் மட்டுமல்ல. சமூக உளவியல் அடிப்படையிலும் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியவர். அறிவுத் தேடலில் உடல், உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிப் பயணம் செய்து விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

8

44ஆ

 

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்.

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்.

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்.

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

போராட்டக் கலைஞர்

பேச்சுக் கலைஞர்

நாடகக் கலைஞர்

திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்

முடிவுரை

பன்முகக் கலைஞர்

முன்னுரை :

        அரசியல், கலை, எழுத்து, கவிதைகள், வசனங்கள், பேச்சு, என பலத்துறைகளிலும் வித்தகர் ஒருவர் உண்டென்றால் அவர் கலைஞர் ஒருவரே. கலைஞரின் பன்முக ஆற்றலை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :

                        “ இனப்பற்றுக்காண் தமிழ்ச்சிங்கக் கூட்டம்

                          கிழித்தெறிய தேடுதுவண் பகைக் கூட்டத்தை “

          என்று பாவேந்தர் பாட்டுக்கு இலக்கணமாய் திகழ்ந்தவர் கலைஞர். தமிழ்க் கொடியைக் கையில் ஏந்தி சிறு வயதிலேயே இந்தி திணிப்பு போராட்டத்தினை நடத்தியவர்.1946 இல் கருப்புக் கொடியேந்தி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினார். பள்ளியில் படித்த போது “ பனகல் அரசரின் சாதனைகள் “ என்னும் துணைப்பாட நூல் அவருக்கு அரசியல் அரிச்சுவடியாக இருந்தது. அவரின் போராட்டப் பண்பே அவருக்குள் இருந்த கலைத் தன்மையை வளர்த்தது.

பேச்சுக் கலைஞர்

                           “ கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
                               வேட்ப மொழிவதாம் சொல்”

        என்னும் வள்ளுவரின் குறளுக்கு இணங்க தன்னுடைய பேச்சாற்றலில் சொல்வன்மை மிக்கவர் கலைஞர். இளமைப் பருவத்தில் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா அவர்களின் பேச்சாற்றல் கவர்ந்தது.  கிராமத்து இளைஞராக இருந்தும் மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டார். தன்னுடைய சக மாணவர்களுக்கும் பேச்சுப் பயிற்சி அளிப்பதற்காகச் “ சிறுவர் சீர்திருத்தச் சங்கம் “ என்பதையும், மாணவரிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்க “ தமிழ்நாடு மாணவர் மன்றம் “ என்னும் அமைப்பையும் ஏற்படுத்தினார்.

நாடகக் கலைஞர்:

        “உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும், அறிவையும், தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை நாடகக் கலை” – அவ்வை. தி.க.சண்முகம்

        நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில்  வித்தகர் கலைஞர்.  கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழநியப்பன்’. 1944-ம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’  உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.

திரைக் கலைஞர்:

           திரைத்துறையில் கதாசிரியராகவும்வசனகர்த்தாவாகவும்பாடலாசிரியராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம்தான்கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். 1952-ல்கலைஞர் கதைவசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம்தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கலைஞர் கதை வசனம் எழுதிய திரைப்படங்களை

பகுத்தறிவு பேசுபவை – (பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்)

அரசியல் பேசுபவை – (புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி, வண்டிக்காரன் மகன்)

சமூக முன்னேற்றம் பற்றி பேசுபவை – (மருதநாட்டு இளவரசி, பணம், நாம், திரும்பிப் பார்)

பெண்ணுரிமை பற்றி – (மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்)

இலக்கியம் பற்றிப் பேசுபவை – (அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை)
என வகைப்படுத்தலாம்.

இயற்றமிழ்க் கலைஞர்:

          இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகிய தமிழை இயல் என்கிறோம். இந்திய தேசிய இராணுவ வீரர் மலேசிய மண்ணில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுவதை எதிர்த்து “கயிற்றில் தொங்கிய கணபதி” என்ற நூலை தனது 22 வயதில் எழுதினார். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே. 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.

முடிவுரை :

        கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தனது 92-வது வயதில் வசனம் எழுதினார். கலைஞர். பல்வேறுத் துறைகளில் வெற்றிக் கண்டு பல்துறை வித்தகராக விளங்கியவர் கலைஞர்.

8

45ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அறிவிப்பு

அமைப்பு

கரகாட்டம், காவடியாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

கூத்துகள் அரங்கு

சிற்ப அரங்கு

முடிவுரை

முன்னுரை:

          கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின் எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.

அறிவிப்பு:

“ கலைத்திருவிழாவிற்கு  வந்தது தூது

இதனையொட்டி எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில் நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம்.

அமைப்பு:

           சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது.

கரகாட்டம், காவடியாட்டம் :

“ கண்களை கவருது கரகாட்டம்

ஆட துடிக்குது காவடியாட்டம் “

        கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன் ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது.

பொய்க்கால்  குதிரையாட்டம்:

பொய்க்கால்கள் கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்”

                   குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து, பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன,

கூத்துகள் அரங்கு:

          ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில்  ஒளி  ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.

சிற்ப அரங்கு :

                                        கல்லிலே கலைவண்ணம் கண்டான்

                                        தன் திறனை அனைவருக்கும் படைத்தான்

    சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம், காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம்  என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும், வியப்பாகவும் அமைந்தது.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றேன்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தேன்”

         அரசு நடத்தி வரும் இந்த கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள் எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டன.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

CLICK HERE

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்




Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post