10TH-TAMIL-HALF YEARLY EXAM - RAMANATHAPURAM-ANSWER KEY-2024

  

பத்தாம் வகுப்பு

அரையாண்டுத் தேர்வு - 2024

தமிழ்

இராமநாதபுரம்  மாவட்டம்

 இராமநாதபுரம்– அரையாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                  மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ) இன்மையிலும் விருந்து

1

2.

ஈ) சருகும் சண்டும்

1

3.

இ) காற்றின் பாடல்

1

4.

ஆ) கொளல் வினா

1

5.

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாத்தல்

1

6.

ஈ) வினைத்தொகை, உவமைத்தொகை

1

7.

ஈ) வானத்தையும் பேரொலியையும்

1

8.

இ) குறிஞ்சி மருதம் நெய்தல் நிலங்கள்

1

9.

ஆ) ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்

1

10.

அ) அகவற்பா

1

11.

இ) உருவகம்

1

12 .

ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

1

13 .

ஆ) குமரகுருபரர்

1

14 .

ஈ) செங்கீரை

1

15

இ) காலில் அணிவத

1

பகுதி – 2 – பிரிவு - 1

16

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

1

1

17.

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

2

18.

·         அறம் கூறும் மன்றங்கள்.

·         துலாக்கோல் போல் நடுநிலையானது.

·         மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்

2

19

கரப்பிடும்பை இல்லார்தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர்.

2

20

v  மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்.

v  மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்.

2

21.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

   பெருமை முயற்சி தரும்.

2

பிரிவு – 2 – பிரிவு - 2

 

22

v  வேங்கைமரம்தனிமொழி.

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி.

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2

23

அ) மலை என்பதற்கு மாலை என எழுதினான்.

ஆ) இயற்கை என்பதற்கு செயற்கை என எழுதினான்.

1

1

24.

உரைத்தஉரை + த் + த் + அ

உரை– பகுதி ; த்சந்தி

த்இறந்த கால இடைநிலை

பெயரெச்ச விகுதி

2

25

அ) ஒப்பெழுத்து

ஆ) நம்பிக்கை

1

1

26

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

1

1

27

அ) போட்டித் தேர்வுகளுக்கு கண்ணும் கருத்துமாக படிக்க வேண்டும்.

ஆ) லாட்டரி வாங்கியவுடன் பணக்காரன் ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டாதே

1

1

28

ஐந்து – ரு

நான்கு,இரண்டு -  ,

2

பகுதி – 3 – பிரிவு - 1

29

·         இரவில் வாயில் கதவு மூடுவதற்கு முன் உணவு உண்ண யாரேனும் உள்ளார்களா என்பதற்காக வினவப்பட்டது.

·         விருந்தை எதிர்கொள்ளும் தன்மை இது.

3

30

அ) போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது

ஆ) தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

இ) பசு,பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.

3

31

Ø  பார்வையற்றவருக்கு இரண்டனா இடுதல்.

Ø  பார்வையற்றவர்  போகிற வழியெல்லாம் புண்ணியம் என வாழ்த்துக் கூறல்.

Ø  தர்மம் செய்ததால் இரயில் விபத்திலிருந்து தப்பித்தல்.

1

1

1

பகுதி -3 / பிரிவு - 2

32

·         அன்னை மொழியானவள்.

·         அழகான செந்தமிழானவள்.

·         பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி.

·         பாண்டியன் மகள்.

·         திருக்குறளின் பெருமைக்கு உரியவள்.

·         பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

3

33

·         எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவாகும்.

·         ஆசை,சினம்,அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்.

3

34அ

நீதிவெண்பா

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.         கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

34ஆ

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!.

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடும்,மாடும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர், குடிக்கின்ற நீர்,குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36

சொல்லையும், பொருளையும்  வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

எ.கா

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது

அணிப் பொருத்தம் :

        இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணி ஆகும்.

3

37

 

சீர்

அசை

வாய்பாடு

ஊ-ழை-யும்

நேர்+ நேர்+நேர்

தேமாங்காய்

உப்-பக்-கம்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

காண்-பர்

நேர்+நேர்

தேமா

உலை–வின்-றித்

நிரை+ நேர்+நேர்

புளிமாங்காய்

தா-ழா

நேர்+ நேர்

தேமா

துஞற்+று

நிரை+ நேர்

புளிமா

பவர்

நிரை

மலர்

3

பகுதி - 4

38

Ø  பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும், கண்ணீரையும் பொழிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலி போல் உள்ளது.

Ø  கருணையனைத் தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழி தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது

5

38ஆ

Ø  தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

Ø  மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

Ø  இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது.

Ø  ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

5

39அ

சேலம்                            

                                                                                                                       03-03-2024

அன்புள்ள மாமாவுக்கு,

நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தேன். அதற்குப் பாராட்டு பெற்றேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும்.

நன்றி,வணக்கம்.            

இப்படிக்கு,

உறைமேல் முகவரி;                                                    உங்கள் அன்புள்ள,

பெறுதல்                                                                    அ அ அ அ அ.

திரு.இரா.இளங்கோ,

100,பாரதி தெரு,

நாமக்கல்.

5

39ஆ

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க   

               வேண்டுதல்சார்பு

        வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு                                                                             இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                                     தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                 அ அ அ அ அ.

இடம் : சேலம்        

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

        உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை – 600001.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

ஏர் என் பயனைப் பற்றி எழுது என்றது

உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் உழவே தலை என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

·         மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூறுகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி.

5

42ஆ

1.       தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.     குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்வேன்.

3.     உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.     நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

5.   வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

5

 

 

 

பகுதி - 5

43

குறிப்புச்சட்டம்

போராட்டக் கலைஞர்

 பேச்சுக் கலைஞர்

 நாடகக் கலைஞர்

 திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்  

முன்னுரை :

        போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இயற்றமிழ் கலைஞர்  என கலைஞரின் பன்முகத்தன்மையை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :

Ø  பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர்.

Ø  இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் போராடியவர்.

Ø  “ வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே ஊர்வலம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர் :

Ø  தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது.

Ø  மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். “ நட்பு “ என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர்

நாடகக் கலைஞர் :

Ø  1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.

Ø  சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்கு மேடை  முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

Ø  தூக்குமேடை நாடகத்தில்  மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.

திரைக் கலைஞர் :

Ø  “ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார்.

Ø  மருதநாட்டு இளவரசி, நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

 

இயற்றமிழ் கலைஞர்:

Ø  நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

Ø  ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.

Ø  தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை :

        அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம், கவியரங்கம் என பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக விளங்கினார் கலைஞர்.

8

43ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

நாட்டு விழாக்கள்

விடுதலைப் போராட்ட வரலாறு

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

முடிவுரை

முன்னுரை:

        மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

        சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

        வெள்ளையனே வெளியேறு, உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

        மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

        நாட்டினை உயர்த்துவேன், தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம்பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேண்டும்”. என கூறி புதிய நம்பிக்கையை உண்டாக்குகிறார்.

·         மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி.

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

44ஆ

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

        கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன் இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்.

Ø  உறவினர்கள் இவனை அனாதை போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்கச் சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துக்குடியும், மூன்று ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கிக் கொடுத்த அந்த மூன்று ரூபாய் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

        எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான். யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது என்பதனை அறிய முடிகிறது.

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும், கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் மார்ச் 17,1962 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல்  

                   துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·      1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·      சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·           2003இல் ஜனவரி 16ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல் மீண்டும் பயணம் செய்தார்.

·           பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்.

விருது:

·           பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·           2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

8

45ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அறிவிப்பு

அமைப்பு

கரகாட்டம், காவடியாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

கூத்துகள் அரங்கு

சிற்ப அரங்கு

முடிவுரை

முன்னுரை:

          கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின் எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.

அறிவிப்பு:

“ கலைத்திருவிழாவிற்கு  வந்தது தூது

இதனையொட்டி எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில் நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம்.

அமைப்பு:

           சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது.

கரகாட்டம், காவடியாட்டம் :

“ கண்களை கவருது கரகாட்டம்

ஆட துடிக்குது காவடியாட்டம் “

        கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன் ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது.

பொய்க்கால்  குதிரையாட்டம்:

பொய்க்கால்கள் கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்”

                   குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து, பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன,

கூத்துகள் அரங்கு:

          ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில்  ஒளி  ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.

சிற்ப அரங்கு :

                                        கல்லிலே கலைவண்ணம் கண்டான்

                                        தன் திறனை அனைவருக்கும் படைத்தான்

    சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம், காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம்  என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும், வியப்பாகவும் அமைந்தது.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றேன்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தேன்”

         அரசு நடத்தி வரும் இந்த கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள் எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டன.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

CLICK HERE

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post